அவுஸ்திரேலியா – மெல்பன் மருத்துவர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளை - தகவல்: முருகபூபதி -
அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:
1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வா ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் ஆரம்பக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று கண்டியில் ஏர்ல்ஸ் றீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 30 அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்கலைக்கழக மாண்புமிகு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், புற்றுநோயியல் ஆலோசக நிபுணர்கள், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட 30 அழைப்பாளர்கள் சமுகமளித்திருந்தனர்.