படித்தோம் சொல்கின்றோம் : "அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல குரலிலும் தெரியவேண்டும்"! பி. எச். அப்துல் ஹமீதின் வாழ்வியல் அனுபவத்தை பேசும் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்'! - முருகபூபதி -

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத், தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார். எனினும், அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.
"கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருட்டாகவே இருக்கும். " என்று நான் எனது பதிவுகளில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கின்றேன். கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். அந்தப்பாதையில் ஒரு வழிப்போக்கனாகவே நடமாடியிருக்கும் அப்துல் ஹமீத், காய்தல் உவத்தல் இன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து, பொது சன ஊடகத்தில் எதிர்நோக்கப்பட்ட சவால்களையெல்லாம் சமாளித்து முன்னோக்கி வந்திருக்கிறார் என்பதற்கு இந்த நூல் சான்று பகர்கிறது.








இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.
சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:









இம்முறை எழுத்தாளர் க. சட்டநாதனுக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது நீண்ட கால இலக்கிய நண்பர் க. சட்டநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம். குறிப்பிட்ட விருது வழங்கும் விழா இம்மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. வட இலங்கையில் வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்தத் தீவுப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கமான உறவை பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெறுபவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள். இவரை இழக்கத் தயாராகமாட்டார்கள்!

எவாலின் ரீட் ஓர் அமெரிக்க கம்யூனிஸ்ட் மற்றும் பெண்ணியவாதி. 1940 ஜனவரி மாதத்தில் எவாலின் ரீட் நாடு கடத்தப்பட்ட ருஷ்யப்புரட்சியாளர் லியான் ட்ராட்ஸ்கி, அவருடைய மனைவி நடாலியா செடோவா இருவரையும் சந்திக்க மெக்சிக்கோவுக்குச் சென்றார். லியானின் இல்லத்தில் ரீட் அமெரிக்க ட்ராட்ஸ்கியின் தலைவரும் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜேம்ஸ்.பி.கேனன் அவர்களைச் சந்தித்தார். அவ்வாண்டே ரீட் சோஷலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அவர் இறக்கும் வரை அக்கட்சியில் முன்னணித் தொண்டராகப் பணியாற்றினார். 1960-70 களில் பெண்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட ரீட் பெண் கருக்கலைப்பு இயக்கக் கூட்டணியில் உறுப்பினராக இருந்தார். இக்காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐயர்லாந்து, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தார் . சொற்பொழிவாற்றினார். ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ், அலெக்சாண்டிரா கோலண்டை ஆகியோரின் பெண், குடும்பம் சார்ந்த ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சியப்பெண்ணியம், பெண்ணொடுக்குமுறை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதினார்.
பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே.