படம்: கருத்தம்மா. இயக்கம்: பாரதிராஜா. பாடகி:ஸ்வர்ணலதா. இசை: ஏ.ஆர்.ரகுமான். வரிகள்: கவிஞர் வைரமுத்து.
இன்று செப்டம்பர் 12, பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம். என்ன குரல்! ஒரு தடவை கேட்டாலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க குரல். மிகவும் சிரமமான நீண்ட வசனங்களை உள்ளடக்கிய பாடல்களையெல்லாம் மிகவும் இலகுவாகப் பாடிவிடுவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி.