கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி மூன்று) - ஜோதிகுமார் -
பகுதி-iசென்ற இதழில், தொடப்பட்ட, மூன்று விடயங்கள்:
1. ஒன்று, பக்மூத், எவ்வாறு ஓர் 150,000 உக்ரைனிய போர் வீரர்களுக்கு, ஓர் மரண பொறியாக செயற்பட்டது. (பக்மூத் வீழ்ச்சியின் போது 50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும் 85,000 பேர் காயமுற்றதாகவும் ஒரு பதிவு கூறுகின்றது).
2. இத்தோல்வியை தொடர்ந்து எவ்வாறு ஸெலன்ஸ்கி G-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு ஓர் 375 மில்லியன் டாலர் பணமுடிச்சும், F-16 விமானங்களின் வழங்குகைக்கும் உறுதி செய்யப்பட்டார் என்பது குறித்தும்.
3. இப்பணமுடிப்பு பரிசளிப்புகள், “பக்மூத் வீழ்ந்து விட்டது - இருந்தும் அது இப்போது, எம் இதயத்தில் ஆழ வாழ்ந்திருக்கின்றது” என்ற அவரது ஆரம்ப அறிவிப்பை எப்படி அவர் அவசர, அவசரமாக மாற்றி – “இல்லை பக்மூத்தை இப்போதே சுற்றி வளைத்துள்ளோம் - இனி மீட்டெடுப்பதே எமது பிராயசித்தம் என புரண்டு பேச வைத்ததையும் பார்த்திருந்தோம்.
இச்சூழலில் F-16 விமானங்கள், போர்களத்தின் சாரம்சத்தை மாற்றக்கூடியதே என்றும், F-16 விமானங்களின் சிக்கல் நிறைந்த தொழிநுட்ப நடைமுறைமையானது, அமெரிக்காவின் ஓய்வு பெற்ற விமானிகள் அல்லது அந்நாட்டின் ஒப்பந்த அடிப்படையிலான விமானிகளை, F-16 விமானங்களை ஓட்ட வைக்கும் என்றும், இது ரஷியாவை அமெரிக்காவுடன் அல்லது நேட்டோவுடனான நேரடி மோதல்களுக்கு இழுத்துவிடும் என்றும் ஆயஉபசழபயச கூறியிருந்தார்.