2023 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி, சர்வதேச ஆண்கள் தினமாகும் (International Men’s Day). இந்த அமைப்புடன் “ஆண்களின் குரல் 360 (Voice of Men 360)” அமைப்பும் இணைந்துள்ளது. இதன் செயற்பாடு, ஆண்களின் தற்கொலையினை பூஜ்ஜியமாக மாற்றமுறச் செய்தல் என்ற வகையில் நீள்கின்றது. இதன் நோக்கம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கியவர்களுக்கு மிகவும் ஊட்டமளிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க உதவுவதாகும்.
ஆண்களின் தற்கொலைக்கான காரணங்களை அடையாளம் காண்பதற்கு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் முதலியோர் உதவுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகள் வாயிலாக ஒரு விரைவான சிகிச்சையை அல்லது தீர்வை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் தேவை, தலையீடுகள், ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் முதலியவை அடங்கும்.
‘ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்’ எனும் கருப்பொருளை மையமாக வைத்து, இந்த ஆண்டு இரண்டு நாள் மெய்நிகர் நிகழ்வை நடத்தியுள்ளோம். இதில் உலகளாவிய ரீதியில், தனிநபர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த விளக்கக்காட்சிகளும் அடங்கியிருந்தன. ஆண்களின் குரல் 360 மற்றும், சர்வதேச ஆண்கள் தினம் ஆகியவற்றின் ஆதரவுடன் ‘ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இணையத்தள வாயிலாக தென்னிந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் கனடா உட்பட பல்வேறு நாடுகளும் மேற்கொண்டிருந்தன.
சமூகத்தை உடைத்து, வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புரிதல், இரக்க உணர்வு மற்றும் ஆதரவை வளர்ப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இச்செயல்பாட்டின்வழி சிக்கல்கள், தடைகள் அற்று, அவர்கள் அனைவரும் சுதந்திரமாக விவாதிக்கவும், உதவிபெறவும் அவர்களின் போராட்டங்களுக்கு நம்பிக்கையை காணக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கவும் துணைபுரிகின்றது. நாம் ஒன்றிணைந்து, சமூகம் எதிர்நோக்கக்கூடிய சாத்தியமற்ற முரண்பாடுகள் இருந்தபோதிலும், அதற்கு முகங்கொடுத்து, ஆண்களின் தற்கொலைகளை முற்றிலுமாக அகற்றுவதற்கான ஒரு உலகத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்வோம்.
எமது செயற்பாடுகளுக்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.
Sivam Velautham,
Founder and President of Voice of Men 360 (ஆண்களின் குரல் 360 )
226-289-8784
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.