வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின் மீது வெய்யில் விழுந்து...),
கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),
ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.
நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை. கார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம் காரணம் அல்ல. நாட்டியக்கலை தொடர்பாக அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர். இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில் புதிய அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர. இந்த ஆண்டு தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.
இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது. சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன. இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு, மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது. கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது. அம்மா, நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...?
தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை. எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை. 'மாமனிதர்' சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள். தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.
பணமுடிப்புடன் கூடிய விருதுகள் அவற்றைப் பெறும் எழுத்தாளர்களுக்கு பொருளியல்ரீதியில் உதவும் தன்மை மிக்கவை. விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளைப் பொறுத்தவரையில் அவை பின்வரும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்
மிகப்பெரும் வியப்பையையும் விந்தையையும் ஏற்படுத்தும் விதமாகவும் மலையகத்தில் வேர் விட்டு வளரும் சிவியியலுக்கு (சி.வி. வேலுப்பிள்ளை) ஆழ்ந்த கனதியை ஏற்படுத்தம் விதமாகவும் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' எனும் சி.வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகளை தாங்கிய நூல் சென்னை தாய் வெளியீடாக திரு மு. நித்தியானந்தன் மற்றும் திரு எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் பெரும் முயற்சியினால் வாசகர் கைகளுக்குக் கிட்டியுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட இந்த நூலுக்குள் நுழையும் மலையகம் குறித்ததேடல் முயற்சியில் மலையக வரலாற்றின் விட்டுப்போன பக்கங்களை தேடுபவர்களும் அல்லது இதுவரைக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சிந்திப்பவர்களும் தமக்குள் தாமே சிலிர்த்துப் போகும் வண்ணம் மலையகம் சார்ந்த ஆளுமைகளைத் தனது சொல்லோவியங்களால் தகவல்களாலும் முன் அனுமானங்களாலும் நாம் காணாத ஒரு மலையக வரலாற்றை சி.வி படைத்துள்ளார் எனலாம்.
அத்தியாயம் எட்டு - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்!
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.
அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.
சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும், அமைதியின் காவலர்களும், மகான்களும் அருகருகாக வாழும் அற்புத உலகம் அது. அவ்வுலகுக்கு அடிக்கடி பயணிக்கின்றேன். விரும்பினால் நீங்களும் என்னுடன் இணைந்துகொள்ளலாம். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். என்ன நீங்கள் பயணத்துக்குத் தயாரா நண்பர்களே! போர்களாலும், பேரழிவுகளாலும், வர்க்க, வர்ண வேறுபாடுகளாலும்
பற்றியெரியும் இவ்வுலகின் கனலிலிருந்து உங்களை என்னால் காப்பாற்ற முடியும் நீங்களும் என்னுடன் அவ்வுலகுக்குப் பயணிக்க முடிந்தால் நண்பர்களே! நண்பர்களே! ஒவ்வொரு நூலும் காலக்கப்பல்தான். நூல்களை உள்ளடக்கிய நூலகம் ஒவ்வொன்றும் காலக்கப்பல்களை உள்ளடக்கிய நிலையம்தான்.
முகநூற் பதிவொன்றில் திரு.கந்தசாமி ஆர் (Kandasamy R) அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது. 'எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க' என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது."
கவிஞர் திருமாவளவனைப் பற்றிய நினைவுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இன்றும் அவ்விதமே எழுந்தது. இப்பொழுதுதான் உணர்ந்தேன் அவரது நினைவுதினம் அக்டோபர் ஐந்து, 2021. எவ்வளவு இலகுவாக அவரை மறந்து விட்டிருக்கின்றோமென்று தோன்றியது. கவிஞர் திருமாவளவனைப் பற்றி எண்ணியதுமே கூடவே கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவும் எழுந்து விடுகின்றது. திருமாவளவனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். திருமாவளவன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் பதிவுகள் இணைய இதழ் மூலம் அறிந்து மனம் வாடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கவிஞர் திருமாவளவன் மறைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் அக்டோபர் 15, 2015 அன்று அவரும் மறைந்து விட்டார்.
சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இலக்கியம் பற்றி என்னுடன் கதைத்த, கதைக்கும் கனடா எழுத்தாளர்கள் வெகு சிலர். பலரும் இலக்கியம் தவிர்ந்த வேறு பல விடயங்களைத்தான் கதைப்பார்கள். இவ்விதம் இலக்கியம் பற்றிக் கதைத்த ஒரு சிலரில் கவிஞர் திருமாவளவன் ஒருவர். கவிஞராக அறியப்பட்டாலும் சிறந்த சிறுகதையாசிரியரும் கூட. இது போல் பதிவுகள் இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பும், என் மீது மிகுந்த அன்பும் வைத்திருந்தவர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இறுதிவரை பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவ்வப்போது கனடா வந்திருந்தபோது என்னை நேரில் சந்திக்க முடியாமல் போனது பற்றி வருந்தி எழுதிக்கொண்டிருந்தார்.
அக்டோபரில் மறைந்த இவ்வீர் இலக்கிய ஆளுமைகளையும் காலம் கடந்தாவது இத்தருணத்தில் நினைவு கொள்கின்றேன். கூடவே கவிஞர் திருமாவளவன் பற்றி அவ்வப்போது எழுதிய எனது குறிப்புகளிலிருந்து சில பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன். கூடவே வெங்கட் சாமிநாதன் திருமாவளவனின் உடல் நிலை குறித்து அனுப்பிய மின்னஞ்சலையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
அத்தியாயம் ஏழு - ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்!
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.
அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.
மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்
தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்
கண்ணால் சிரித்து ,பேசி காவியம் பாடிய மகள் இறந்து போன பிறகு , வெளியில் எங்கையாவது போய் வந்தால் நல்லது ' என தோன்றியது . நோவாகோர்ஸியாவிலிருந்த பூமலர் , தில்லையையும் , ஜெயந்தியையும் " எங்க வீட்டிற்கு வாருங்களன் . துக்கத்திற்கு ஒரு மாற்றமாக இருக்கும்" என அழைத்திருந்தாள் .மகள் பிறந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும் , வீடும் , மருத்துவர் ...என அதில் ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு .....இருபது வருசம் ஓடியதே தெரியவில்லை ." போவோம் " என முடிவெடுக்க ...இந்த கொரோனா ... குறுக்கிட்டு விட்டது . நாம் ஒன்று நினைக்க வைரஸொன்று நினைக்கிறது .
நடக்க முடியாத அதிசயமாக வர்த்தகம் , அரச நிர்வாகக் கதவுகள் எல்லாம் அடைப்பட்டன . 'ஒன் லைன்' என்கிற 'ஈ' வழித் தொடர்ப்புகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் . மக்கள் , அனைவரும் கட்டாயம் பழகத் தான் வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது . இந்த இறுக்கம் தளர் நிலைக்கு வந்த போது தெரிந்தவர்கள் சிலரின் மரணங்கள் , எம் வீட்டுக் கதவையும் வந்து தட்டி விடலாம் என்ற பயபீதியை ஏற்றியது . புயல் கடக்கவில்லை . ஒருவாறாக கோவிட்டுக்கு வக்சீன் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது . ரஸ்யா தான் ... முதலில் கண்டு பிடித்தது . ரஸ்யாவுடன் சேர்ந்திருந்தால் வேளைக்கே எமக்கு வக்சீன் கிடைத்திருக்கும் . பிறகு , ஒரு மாதிரியாக மாற்றம் மெல்ல படர தொடங்கிது . ஒரு முறை...ஏற்றல் நடந்து . பிறகு இரண்டாவது முறை . பதற்றத்தை வக்சீன் வெகுவாக குறைத்து விட்டது . இருந்த போதிலும் மனிதர் பலியாகிக் கொண்டேயிருந்தனர் . ' பலி ' நிற்கவில்லை .
முன்னுரை
“வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது. கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல், விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது. மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும் பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது. இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உவமை நடை
செய்யுளுக்கு அணி சேர்ப்பதே உவமை. தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டு விளக்குவது.
“உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்“ என்பது பேராசிரியர் தரும் விளக்கம். (தொல்.பொரு.ப.57)
சிறுபெண்ணான ஆண்டாள் மழை எங்ஙனம் பொழிய வேண்டும் என்ற அறிவியல் கோட்பாட்டினை, ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு அழகாக நமக்குக் காட்சிப்படுத்துகிறார். கடல் நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. அங்கு குளிர்ந்த காற்றுப்பட்டவுடன் அது மழையாகப் பொழிகின்றது. இந்த அறிவியல் உண்மைக்கு அழகானதொரு அறிமுகத்தொடு விளக்கவுரை தருகிறார். அதாவது,
”ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைய பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்“ (திருப்.4)
மெய்நிகர் இணைப்பு | Meeting ID: 895 2954 3173 | Passcode: 202886
-
'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ' நூலிலிருந்து -
தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகம். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
"......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ்நிலைக்கேற்க மாற்றுமடைந்துள்ள; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன. இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பௌத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; சியாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறுலாம்."4
பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.
தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர்.மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார்.சிறுமை கண்டு பொங்கிய கலகக்காரனின் எழுத்துகளாக அவரது கதைகள் சிறப்புப்பெறுகின்றன. மனிதன் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமையை அவரைப்போல எழுத்திலே சித்திரித்தவர்கள் யாருமில்லை.
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப் இம்மாதம் 21 ஆம் திகதி அதிகாலை வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார். அமைதியான இயல்புகளைக் கொண்டிருந்த அவர், ஆழ்ந்த உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார். அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன். தனக்கு சற்று சோர்வாக இருப்பதாகச் சொன்னார். அவருடனான முதல் சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தீம்புனல் வார இதழில் அண்மையில் எழுதியிருந்தேன். எனினும், அவர் அதனைப் பார்த்தாரோ தெரியாது. தற்போது ஆழ்ந்த துயரத்துடன் இந்த அஞ்சலிக் குறிப்புகளை எழுதுகின்றேன். அவரது மறைவுச் செய்தியறிந்ததும், அவரது புதல்வி சியாமளாவுடன் தொடர்புகொண்டு ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவிட்டே இந்தப்பதிவை எழுதுகின்றேன். அவர் தனது புதல்விகள் திரேசா – சியாமளா ஆகியோரின் பெயர்களிலும் முன்னர் தினகரனில் இலக்கிய பத்தி எழுத்துக்களை எழுதினார்.
சமகாலத்தில் அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை இழந்துகொண்டிருக்கின்றோம். இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில்தான், யாழ். காலைக்கதிரில் 40 வாரங்கள் தொடராக வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலுருப்பெற்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் காலைக்கதிர் ஆசிரியர் நண்பர் வித்தியாதரனும், கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி இராஜகுலேந்திரா, மற்றும் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் இலக்கிய ஆர்வலர் பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் ஆகியோரைத் தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் அவர்களும் விடைபெற்றிருப்பது மனதில் மிகுந்த சோகத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த 21 ஆம் திகதி காலையில் அவரது குடும்பத்தினர், அவரை துயில் எழுப்பச்சென்றபோதுதான், அவரது உயிர் அவரை விட்டு பிரிந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. எவருக்கும் சிரமம் தராமல் அமைதியாக விடைபெற்றுவிட்டார் இந்த இலக்கியவாதி.
இலங்கை மலையகத் தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளில் ஒருவராக விளங்கிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (சந்தன்சாமி ஜோசப்) மறைந்து விட்டார். பதிவுகள் , பதிவுகள் வாசகர்கள் மற்றும் என் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
விருதுகள் பலவற்றைத் தனது எழுத்துக்காகப் பெற்றவர். கடந்த 62 வருடங்களாக இவர் எழுதிக்கொண்டிருந்தார். இவரைப்பற்றிய அறிமுகத்தில் விக்கிபீடியா பின்வருமாறு கூறுகின்றது:
"தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்."
தெளிவத்தை ஜோசப் என்றதும் என் ஞாபகத்துக்கு வரும் முதல் நினைவு என் பால்ய காலத்தில் பார்த்த 'மித்திரன் வாரமலர்' பிரதிதான். அப்பொழுதுதான் மித்திரன் வாரமலராக, அதிக பக்கங்களுடன், ஆக்கங்கள் பலவற்றுடன் , அத்தர் மணம் கமகமக்க வெளிவரத்தொடங்கியிருந்தது. அதன் முதலாவது இதழில் வெளியான முதலாவது தொடர்கதையாக தெளிவத்தை ஜோசப்பின் தொடர்கதையொன்று ஆரம்பமாகியிருந்தது இன்னும் நினைவிலுள்ளது. அதனைத்தொடர்ந்து யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்களின் தொடர்கதை வெளிவந்ததது.
அத்தியாயம் ஆறு: ஒட்டகங்கள்!
என் பதின்ம வயதுகளில் என் வயதுக்கு மீறிய வளர்த்தி கண்டு நண்பர்கள் 'வாடா ஒட்டககச் சிவிங்கி' என்பார்கள். ஏனென்றால் எனக்கு நீண்ட கால்கள். ஓட்டகச் சிவிங்கி என்பதை விட அதிலுள்ள ஒட்டகம் எப்போதும் என்னைக் கவர்வதுண்டு. அதற்குக் காரணம் அதன் இயல்பும், உறுதியுமே. பாலை வனச் சூழலில் தாக்குப்பிடிக்கும் வகையில் அதன் உடலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது படைப்பின் அற்புதமென்பேன். அதன் முதுகிலுள்ள திமில்களில் கொழுப்பையும் , இரப்பையிலுள்ள அறைகளில் நீரையும் சேமித்து வைக்கும் ஒட்டகங்கள் பத்து மாதங்கள் வரையில் நீரருந்தாமல் வாழக் கூடியவை. குளிர் வெப்ப நிலைகளுக்கு ஈடுகொடுத்து உடல் வெப்பநிலையை மாற்றி வாழும் தன்மை மிக்கவை. பாலையில் வீசும் மணற் புயல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை மிக்க மூக்குகள். கண்கள், காதுகளைக் கொண்டவை. கண் இமைகள் மூடியிருக்கும்போதும் பார்வையைத் தடுக்காத வகையில் அமைந்துள்ளதாகவும் அறிந்திருக்கின்றேன். அது மட்டுமல்ல அதிக சுமை தாங்கி, விரைவாக ஓடும் வல்லமையும் மிக்கவை.
ஓட்டகங்கள் என் கவனத்தை ஈர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இனக்கலவரங்களால் சொந்த மண்ணில் , சர்வதேசப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் அகதிகளாக அலைந்து திரிந்து , எதிர்ப்படும் சவால்களையெல்லாம் , புயல்களையெல்லாம் எதிர்கொண்டு செல்லும் ஒட்டகங்களாக எம்மவரை, என்னை நான் இனங்காணபதுண்டு. இவ்வகையில் அகதிகளுக்கொரு குறியீடாக நான் ஓட்டகங்களை எண்ணுவதுண்டு. ஒட்டகம் என்னும் சொல் ஒரு படிமமாக எனக்குத் தோன்றுவதுண்டு.
"என்ன கண்ணா சிந்தனை. அப்படியென்ன தலை போகிற சிந்தனை. கப்பலேதும் கவிழ்ந்து விட்டதா?"
எதிரில் கேலி கொஞ்சும் குரலில் கேட்டபடி வந்தவள் மனோரஞ்சிதம்.
"சரி கண்ணம்மா, நீதானே மிகவும் திறமைசாலியென்று உன்னை அதிகம் மெச்சிக்கொள்வாயே. நீயே சொல்லு பார்க்கலாம் நான் என்ன யோசிக்கிறேனென்று?"
- இலங்கையில் சீனக் கப்பல் -
18
சென்ற முறை, அத்தியாயம் 17இல், குறிப்பிட்டிருந்த ஆட்சியாளரின் இருசக்கரங்களின் செயற்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பிலான அக்கறைகள், தமிழ் அரசியலின் ஒரு பிரிவினருக்கு, முக்கியமாக, புலம்பெயர் அரசியலின் ஒரு சார்பினருக்கு, தேவைப்படும் விடயங்கள்தாமா என்ற சந்தேகங்கள் இன்று எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. காரணம், அண்மையில் ‘தமிழ்வின்னில்’ திலீபன் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘ஆதங்கங்கள்’ குறித்து பின்வருமாறு பிரகடனம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது:
“அந்த அவலத்தின் சாட்சியாக இன்னும் ஒரு சிலர் உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்ப்பார்த்து வாழக்கூடும்… …”
இருக்கலாம். ஆனால், இது, உண்மையில், மிக அடிப்படையான, பலம் வாய்ந்த தர்க்கங்களில், ஒன்றாக கருத இடமுண்டு. அதாவது, தாம் எதிர்ப்பார்த்து நிற்கும், சர்வதேச நீதியும் நியாயங்களும், கிட்டாது, காலம் காலமாக, ‘சர்வதேச நீதிமன்றில் இலங்கையை ஏற்றித்தான் தீருவோம்’ என்ற வாதமும் பொய்ப்பட்டு, ஏமாற்றப்பட்டு, இனி இந்த பழம் புளிக்கத்தான் போகின்றது என்று முடிவு செய்து கொண்ட வேளை, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தனது ‘ஆதங்கங்களுடன்’ நின்றுக்கொண்டு, ஒதுங்கிக் கொள்வது சிறப்பானது–என்ற வாதம் இங்கு கட்டியெழுப்பப்படுகின்றது. ஆனால், இப்படியாக, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில், அன்னார் ஆதங்கங்களுடன், வாழத்தான் வாழலாம் என்ற அன்னாரின் இந்த ‘ஆதங்கங்களுக்கு’ இங்குள்ளவர்கள்தாம் ஈற்றில் விலை கொடுத்தாக வேண்டி இருக்கும் என்பதே ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்பது போன்ற ஓர் கேள்விக்கு எம்மை இட்டு செல்வதாயுள்ளது.