முதல் சந்திப்பு கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! - முருகபூபதி -

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந் சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள். பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன், உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.
இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர். இந்தப்பெயர்களை, அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.





பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.
காதல் இல்லா வாழ்க்கை

லம்பெயர்ந்தோர் படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன. இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும் இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல் சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.
இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.




ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.


வாடாத மல்லிகையாய் வாணி அம்மா

நான் காலையில் கண்விழித்தேன் _
“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது. நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









