* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!

தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 30-06-2025 தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும், கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு. ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும் செயற்படவுள்ளனர்.