தோழர் கு.சின்னப்ப பாரதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர். தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் நில உச்சவரம்பு கோரி கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற நடை பயணக்குழுவில் இடம்பெற்றவர். இறுதிவரை உறுதியான மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர்.