காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை.
காக்க முடியவில்லை.
எனக்கு அழ முடியவில்லை.
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
இது வெறும் பெயர்கள் அல்ல.
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே.
நானும் அவர்களே.
அல்லாவே.
மாபெரும் இச் "சா" விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்?
எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.
ஹெபா, புனித மெக்கா நகரில் 1991ல் பிறந்தவர். காசா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில்- Biochemistry படித்தவர். பின் Masters in clinical nutrition காசாவிலுள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 'ஒக்சிசன் இறந்தவர்களுக்கானதல்ல' என்ற அரபு நாவலின் ஆசிரியர்.