முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக.. - ஊர்க்குருவி -
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம் நல்லநாதர் மறைவு! - வ.ந.கி -
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் ( முகநூலில் R Rahavan) அவர்களின் மறைவினை நண்பர் அலெக்ஸ் வர்மா முகநூலில் பகிர்ந்திருந்தார். அவர் தனது அஞ்சலிக் குறிப்பில் '42 வருடங்கள் போராட்டத்திற்கு தனது வாழ்வை பதின்ம வயதிலிருந்து தொடர்ச்சியாக அர்ப்பணித்த மனிதன் தன் மூச்சை இன்றுடன் நிறுத்தி, இன்று (22.2.2024) மாலை விடைபெற்றார்' என்று தெரிவித்திருந்தார். தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆர்.ஆர் என்றறியப்பட்ட வேலாயுதம் நல்லநாதர் அவர்கள். இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?
எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு' என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.
தமிழக முதல்வர்களில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே முதல்வர் எம்ஜிஆர். அவ்வளவுக்குத் தமிழக மக்களின் பேராதரவையும் , பேரன்பையும் பெற்றவராக விளங்கியவர் அவர். உலகத்தமிழர்கள் மத்தியிலும் அவர் அதே வகையான ஆதரவையும், அன்பினையும் பெற்றவர். கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக வருவதற்கு அன்று எம்ஜிஆரின் ஆதரவில்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்காது. அது அனுபவ அடிப்படையில் நெடுஞ்செழியனுக்குச் சென்றிருக்க வேண்டிய பதவி.
'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -
நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;
"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."
அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!
தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.
(மீள்பிரசுரம்) இமாலயப் பிரகடனம்: ஒரு பார்வை - சிவதாசன் -
நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
அது என்னவோ உலகத்தின் பல பிரகடனங்கள் இமாலய ‘உச்சி’ முகர்ந்துதான் செய்யப்படவேண்டுமென்ற விதியோ தெரியாது. ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயருடன் வந்தவற்றில் இது முதலும் கடைசியுமல்ல. திம்பு வும் பிரகடனப் பிரசித்தி பெற்றதுதான். இவற்றில் எப்பிரகடனமாவது வெற்றி பெற்றுள்ளவையா என்பதை அறிய சாத்திரி ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.
அறிக்கை உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டு கனடிய தமிழர் பேரவையினால் அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அறிக்கை நீட்டி விசாலித்து எழுதப்பட்டிருந்தது. அதில் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதன் சாராம்சம் இதுதான்.
உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான சங்கங்கள் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக எடுத்த முயற்சியின் பலனாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உரையாடல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது என்றும் அதன் பலனாக ஏப்ரல் 2023 அன்று நேபாளத்திலிருக்கும் நாகர்கோட் என்னுமிடத்தில் இரு தரப்புகளும் சந்தித்திருந்தார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் பலனாக உருவாகியதே ‘இமாலயப் பிரகடனம்’. இவ்வேளையில் ஜூலை -ஆகஸ்ட் 1985 இல் பூட்டானில் இருந்து வெளியிடப்பட்ட ‘திம்பு பிரகடனம்’ உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அது பற்றிப் பின்னே பார்க்கலாம்.
The Prime Minister, Justin Trudeau's statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:
Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women
December 6, 2023, Ottawa, Ontario
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:
“On this National Day of Remembrance and Action on Violence against Women, we remember the 14 young women who were senselessly murdered and the 13 others who were injured at the École Polytechnique de Montréal. Today, we pay tribute to their lives that were tragically cut short simply because they were women, and we reaffirm our commitment to eliminate gender-based violence.
“As we remember the victims of this hateful, cowardly act, we are also reminded that, for many women, girls, and gender-diverse people in Canada and around the world, the violent misogyny that led to this tragedy still exists. The risk of violence is even higher for Indigenous women and girls, racialized women, women living in rural and remote areas, people in 2SLGBTQI+ communities, and women with disabilities. That is why we have and continue to strengthen our laws and ensure supports for victims and survivors of gender-based violence.
நீர் நாடி வெடிக்கும் ஒரு புரட்சி! - ம.ஆச்சின் -
வேளாங்கண்ணி கடலுக்குத் தவழ்ந்து
மணலை அரித்துக் கொண்டு ஓடும்
அரிச்சந்திரா நதி,
ஐப்பசி மாதத்தில் ஆற்றில் தண்ணீர்
காணாமல் வறண்டு கிடப்பது
ஆற்றின் விதியா?
ஆற்று நீரை நம்பி வாழும்
விவசாயி,
விளைச்சல் நிலம் வறண்டால்
விவசாயி வயிறும்
வறண்டு விடும் என்று தெரியாத
படுபாவி!
அஞ்சலி: Elham Farah
84 வயது முதியவரான இசை ஆசிரியர் Elham Farah. இவரைக் காசாவிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் முன் வைத்துச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேலிய இராணுவம். முதலில் இஸ்ரேலிய இராணுவத்தால் காலில் சுடப்பட்டு வீதியில் விழுந்து கிடந்திருக்கின்றார் இந்த மூதாட்டி. உதவுவதற்காக ஆலயத்தில் இருந்து ஒருவராலும் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே தாக்குதல் பலமாக இருந்துள்ளது. நிலத்தில் விழுந்து கிடந்த இவர் மேல் இஸ்ரேலியத்தாங்கி ஒன்றை ஏற்றிக் கொண்டிருக்கின்றது இஸ்ரேலிய இராணுவம். ஆழ்ந்த இரங்கல்.
சட்டத்தரணி சுவஸ்திகாவின் விடுதலைப்புலிகள் பற்றிய கூற்றும், யாழ் பல்கலைக்கழகத்தின் மறுப்பும்! - ஊருலாத்தி -
இலங்கையின் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான சுவஸ்திகா அருள்லிங்கம் விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று கூறியதற்காக , நீதித்துறை பற்றி அவர் ஆற்றவிருந்த உரையினை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழர் அரசியலில் இருக்கும் சகல முன்னாள் ஆயுத அமைப்புகளும் விடுதலைப்புலிகளுடன் முரண்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பாசிஸ்டுகள் என்றே கூறி வந்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எதிரான அமைப்புகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என்றே கூறி வந்தனர்.
விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று விமர்சித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கத்தை எதிர்க்கலாம். அதற்குப்பதிலாக மாணவர்கள் மாற்றுக் கருத்தினை முன் வைக்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி உரையினைத் தடுத்திருப்பது சரியான செயலா? என்னைப்பொறுத்தவரையில் பல்கலைக்கழகம் பல்வேறு அரசியல் கோட்பாடுகள் பற்றியும் மாணவர்கள் கற்குமொரு கல்விக்கூடம். மார்க்சியம், சோசலிசம், நாசிசம், சியோனிசம், ஃபாசிசம் ,, என்று பல்வேறு வகையான அரசியல் கருத்து நிலைகள் உள்ளதை நாம் அறிவோம். இவற்றைப்பற்றிக் கற்கும்போது காய்தல் உவத்தலற்றுக் கற்கும் இருப்பிடமாக இயங்கவேண்டியது பல்கலைக்கழகமொன்றின் கடமையாகும். பல்வேறு வகையான அரசியல் கோட்பாடுகளையும் கற்று, அறிந்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்புகளை, விடுதலை அமைப்புகளை விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். அவ்விமர்சனங்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டும்.
அஞ்சலி: (முகநூற் குறிப்பு) பலஸ்தீனியப் பெண் எழுத்தாளரும் கவிஞருமான ஹெபா ஹமல் அபு நாடாவின் (Heba Kamal Abu Nada ) கடைசிக் கவிதை! - தமிழில் : நட்சத்திரன் செவ்விந்தியன் -
காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை.
காக்க முடியவில்லை.
எனக்கு அழ முடியவில்லை.
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004)
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டம்பர் 21!
சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், உடற் கூற்றியல் விரிவுரையாளரும், 'முறிந்த பனை' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜனி திரணகமவின் நினைவுதினம் செப்டம்பர் 21. அவர் நினைவாக அவரைப்பற்றிக் கனடிய அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தயாரிப்பான No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் இத்திரைப்படத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
கனடாத்தேசியத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக சுயாதீனத் திரைப்படத்தயாரிப்பாளர் ஹெலென் கிளோடாவ்ஸ்கி (Helene Klodawsky) எழுதி, இயக்கிய ஆவணத்திரைப்படமே No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் ஆவணத்திரைப்படம். மனித உரிமைப்போராட்டச் செயற்பாட்டாளரும், மருத்துவ உடற் கூற்றியல் விரிவுரையாளராகவுமிருந்த ராஜனி திரணகம பற்றிய ஆவணத்திரைப்படமிது. இவர் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஸ்தாபர்களில் ஒருவர். ஏனையவர்கள் : ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம். அவர்களுடன் இணைந்து 'The Broken Palmyra' ('முறிந்த பனை') என்னும் ஆவண நூலை எழுதி வெளியிட்டார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி! - ஊருலாத்தி -
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி - https://www.youtube.com/watch?v=uz-a62ikv9Q
இந்தக் காணொளியில் முன்பு பிள்ளையானின் ஊடகக் காரியதரிசியாகவிருந்த அஷாட் ஹன்ஸீர் மெளலானா பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார்.
1. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் , பிள்ளையான் தலைமையில் இயங்கிய The Tripoli Platoon என்னும் ஆயுதக் குழுவே , கோத்தபாயா ராஜபக்சவின் ஆணையின்படி கொன்றது.
2. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் கோத்தபாயா ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பொருட்டு அவரது நம்பிக்கைக்குரிய இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியான Suresh Salley யின் ஏற்பாட்டில், முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் துணையுடன் நடத்தப்பட்டன. பிள்ளையான அதற்கு உதவியாகவிருந்தார்.
3. The Tripoli Platoon கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் நேரடியாக இயங்கிய பிள்ளையான் தலைமையிலான குழு. இதன் நோக்கம் அரசியல் எதிரிகளை ஒழிப்பதுதான். பலரின் கொலைகளுக்குக் காரணமாக இந்த அமைப்பு இருந்திருக்கின்றது.
இவையெல்லாம் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனப்பல வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அந்நாடுகள் இக்குற்றச்சாட்டுகளைச் சும்மா விட்டுவிடப்போவதில்லை.
'மாமன்னன்' விட்ட பிழையும், சரியும்! - ஊருலாத்தி -
அண்மையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தைக் கொசுவை அழிப்பதுபோல் அழிக்க வேண்டுமென்றூ கூறியது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பலத்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதவெறி பிடித்த இந்து மதகுரு ஒருவர் உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி என்று அறிவித்திருக்கின்றார். நல்லவேளை உதயநிதி வட இந்திய மாநிலங்களில் வசிக்கவில்லை. வசித்திருந்தால் அந்தச் சாமியாரின் கட்டளையை ஏற்று ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக உதயநிதி இந்த எச்சரிக்கையை இலேசாக எண்ணிவிடக்கூடாது. அவதானமாகவுமிருக்க வேண்டும். இவ்விதம் கொலை அச்சுறுத்தல் விட்ட அந்தச் சாமிக்கெதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.
இந்தச் சர்ச்சையையைக் காரணமாக வைத்து தமிழகத்தின் ஆட்சியைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியற் கோமாளியான சுப்பிரமணியன் சுவாமி அதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே விட்டிருக்கின்றார். போதாதற்கு ஆளுநர் ரவியுடனான தமிழக அரசின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. அப்படியேதும் நடந்தால் மிகப்பெரிய வெற்றியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இன்றுள்ள திமுகவின் வசீகர ஆளுமைகளில் முன்னிலை வகுப்பவர்கள் உதயநிதியும், கனிமொழியும்தாம். ஸ்டாலின் தன் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளால் இன்றுள்ள நிலைக்கு உயர்ந்திருப்பவர். ஆனால் உதயநிதி, கனிமொழி போல் மிகுந்த வசீகர ஆளுமை மிக்கவரல்லர். கனிமொழியின் 'தமிழ்', 'ஆங்கிலப்புலமை, உதயநிதியின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தோற்றம், கலைஞரைப்போல் சமயத்துக்கேற்ப உதிர்க்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் பதில்கள், திரைப்பட நடிப்பு காரணமாக திமுகவின் முக்கிய பலமாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் பலமும் இவர்கள்தாம்.
காணாமல் போன மனித உரிமைச் சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான கந்தையா கந்தசாமி!
இவர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலுக்குப் பலியாகியவர்களில் ஒருவர். ஆனால் இவரைப்பற்றித் தமிழ் மக்கள் பொதுவாக அதிகம் அறிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர் தன்னை அதிகமாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தாம் இயங்கிக்கொண்டிருந்ததுதான். இவர் ஒரு சட்டத்தரணி. மனித உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணி. இவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இலண்டனில் வாழ்ந்து செல்வச் செழிப்பில் மிதந்திருக்கலாம்.ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை.
மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மறுப்பதற்கான காரணிகள்! - சடகோபன் ராமையா -
மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......
( அ ) 1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.
( ஆ ) 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
( இ ) 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'The Socio Economic and Cultural Background of Batticaloa District'('மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும் கலாச்சாரப் பின்னணி') கட்டுரை!
கவிஞர் , சிறுகதையாசிரியர், சமூக, அரசியல் ஆய்வாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர் வ.ஐ.ச.ஜெயபாலன். அவர் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஆங்கிலக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். லங்கா கார்டியன், எகனமிம் ரிவியூ சஞ்சிகைகளில் அவரது சமூக, அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
எகனமிக் ரிவியூ (Economic Review) சஞ்சிகையின் ஏப்ரில் 1991 இதழில் இவ்வகையான ஆங்கிலக் கட்டுரையொன்று 'The Socio Economic and Cultural Background of Batticaloa District'('மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும் கலாச்சாரப் பின்னணி') என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. இதழில் அபிவிருத்தி என்னும் பிரிவில் 'யாழ் பல்கலைக்கழக மாணவர் சபையின் முன்னாள் தலைவரான வ.ஐ.ச.ஜெயபாலன் இளந் தலைமுறையின் முன்னணித் தமிழ்க் கவிஞரும், சிறந்த தமிழ் அறிவு ஜீவியுமாவார்' என்னும் குறிப்புடன் வெளியானது. அதனைத் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) என்னும் இணையத்தளம் மீள்பிரசுரம் செய்துள்ளது.
ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ): ஓர் ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது! - சக்தி சக்திதாசன், லண்டன் -
ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும். 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி ஶசிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும் , திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு. இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் ( Durham ) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார். பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார். சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.
இனவாதத்தேசியமும், இனவாதமற்ற தேசியமும்! - வ.ந.கி -
காலத்துக்காலம் தென்னிலங்கையிலிருந்து இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் தம் சுய அரசியல் இலாபங்களுக்காக உருவாகிக்கொண்டு வருவதை வரலாற்றினூடு பார்த்து வருகின்றோம். முன்னாள் கடற்படை அதிகாரியும், அமைச்சருமான சரத் வீரசேகரா இன்றுள்ள சிறில் மத்தியூவாகத் தன்னைத் தென்னிலங்கை அரசியலில் கட்டமைத்து வருன்றார்.
பிரான்சில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' சிறுகதைத்தொகுப்பு எரிப்பு! - வ.ந.கி -
பிரான்சில் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா'சிறுகதைத்தொகுப்பு கத்தோலிக்க மதத்தை நிந்திக்கிறது என்னும் காரணத்தைக்காட்டி எரிக்கப்பட்டுள்ளது. தம் கருத்துகளுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு எதிரான நூல்களை எரிப்பதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதைக் காலத்துக்குக் காலம் கண்டு வருகின்றோம். அண்மையில் கூட போலந்தில் மதகுரு ஒருவரால் ஹாரி போட்டர் நாவல் எரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம்.
'சே' என்னும் மானுடத் தோழர்!
அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்
ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம். இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.
பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.
முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன்! - முருகபூபதி -
ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள். அந்த விதி, சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி விளையாடியது. 1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை, வீரகேசரி பத்திரிகை நிறுவனம், முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது. இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வனையே சாரும். இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.
முதல் முதலில் 1976 ஆம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி முதல் தலைவராக அமர்ந்த யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்தான் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் தமிழ் நாவலுக்கு நூற்றாண்டு பிறந்திருந்தது.
பல தமிழ் நாவலாசிரியர்களை உருவாக்கிய தமிழ்நாடே இந்த நூற்றாண்டை மறந்திருந்தபோது, பேராசிரியர் கைலாசபதி, தனது தலைமையில் அந்த நூற்றாண்டை இரண்டு நாள் ஆய்வரங்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
அச்சமயம் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதற்கு உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பதற்காக சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்னை குறிப்பிட்ட ஆய்வரங்கிற்கு அனுப்பிவைத்திருந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த நண்பர் எம். ஏ. நுஃமான் என்னை தன்னோடு அந்த நாட்களில் தங்க வைத்துக்கொண்டார். நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு தொடங்குவதற்கு முதல் நாள் நல்லூரில் ஒரு மண்டபத்தில் அந்த ஆண்டு தேசிய சாகித்திய விருது பெற்ற செங்கை ஆழியானுக்கு யாழ். இலக்கிய வட்டம் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது. நண்பர் மல்லிகை ஜீவாவுடன் சென்றிருந்தேன். அந்தக்கூட்டத்திற்கு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக கைலாசபதியால் தமிழ் நாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்பாளி அசோகமித்திரனை இரண்டுபேர் ஒரு காரில் அழைத்து வந்தனர். அவர்கள் ஆசிச்செல்வனும் விரிவுரையாளர் சோ. கிருஷ்ணராஜாவும் என்று மல்லிகை ஜீவா எனக்கு அறிமுகப்படுத்தினார்.
மீண்டும் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கு மண்டபத்தில் ஆசிச்செல்வனைச்சந்தித்து பேசினேன். முதல் நாள் அரங்கு நடந்தபோது, வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு அழகான இல்லத்தில் எமக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் வெளியே சென்று மதிய உணவை பெற்றுக்கொள்ள புறப்பட்டபோது, “ இங்கே வாரும் காணும். தொலைவிலிருந்து வந்திருக்கிறீர். எங்களோடு இருந்து சாப்பிடலாம் “ என்று அன்போடு அழைத்தவர்தான் இந்த ஆசிச்செல்வன். அந்த இரண்டு நாட்களும் இலக்கியப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுடன் பொழுது கரைந்தது.
ஆசிச்செல்வனின் எழுத்துக்களை மல்லிகையில் அவ்வப்போது படித்திருக்கின்றேன். அதில் மங்களநாயகம் தம்பையா என்ற ஈழத்தின் மூத்த நாவலாசிரியர் பற்றிய கட்டுரை முக்கியமானது. பின்னாளில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய பாரதியும் பாட பேத ஆராய்ச்சியும் நூலையும் ஆசிச்செல்வன் பதிப்பித்திருந்தார்.
1983 இல் கலவரம் வந்ததையடுத்து வீரகேசரி ஆசிரிய பீடத்தில் வெற்றிடங்கள் தோன்றின. அங்கே ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்துகொண்டே வாரவெளியீட்டில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி என்ற பத்தியை எழுதிவந்தேன். 1984 ஆம் ஆண்டு பிரதம ஆசிரியர் பதவிக்கு ஆசிச்செல்வன் வரவிருக்கிறார் என்ற செய்தி அங்கே பரவியிருந்தது. அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது வாரவெளியீடு ஆசிரியர் பொன். ராஜகோபாலுக்கு நன்கு தெரியும்.
ஒருநாள் திங்கட்கிழமை எனது ஓய்வுநாள். நான் கடமைக்கு சென்றிருக்கவில்லை. அன்றைய தினம்தான் ஆசிச்செல்வன் பிரதம ஆசிரியர் பதவியை பொறுப்பேற்க வந்துள்ளார். வந்தவர், தனக்குரிய பிரத்தியேக அறைக்குள் பிரவேசித்ததும், அங்கிருந்த சிற்றூழியரை அழைத்து, “ முருகபூபதி எங்கே…? அவரை வரச்சொல்லும் . “ என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிற்றூழியர் எமது ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்து, நான் மறுநாள்தான் கடமைக்கு வருவேன் என்றறிந்து சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் அலுவலகத்தில் சிறிய கசமுசாவை ஏற்படுத்தியிருக்கலாம்.
மறுநாள் கடமைக்கு வந்தபோது எமது பிரிவிலிருக்கும் அன்பர் என்ற பொன்னுத்துரை, புதிய ஆசிரியர் என்னைத்தேடினார் என்ற தகவலைச்சொன்னார். பிரதம ஆசிரியரின் அறைக்குச் சென்று அவரை வாழ்த்தினேன். “ என்ன காணும்…நீர் அங்கேயா இருக்கிறீர்..? இந்த ஆசிரிய பீடத்தின் பக்கம் வரலாமே…! உடனே ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து கொண்டுவந்து தாரும். முகாமையாளர் பாலச்சந்திரனிடம் சொல்கின்றேன் “ என்றார். இவ்வாறுதான் நான் அங்கே துணை ஆசிரியரானேன்.
அதனையடுத்து என்னுடன் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த நண்பர் வீரகத்தி தனபாலசிங்கத்தையும் அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவரும் சில மாதங்களில் துணை ஆசிரியரானார். இவ்வாறு எம்மிருவரதும் தலைவிதியை மாற்றிய பெருமை எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆ. சிவநேசச்செல்வன் அவர்களையே சாரும்.
நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர், வீரகேசரியில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. வர்த்தகர் சாமி என்பவரால் புதிதாக தொடங்கப்பட்ட தினக்குரல் பத்திரிகைக்கு முதலில் பிரதம ஆசிரியராக பொன். ராஜகோபாலும் செய்தி ஆசிரியராக நண்பர் தனபாலசிங்கமும் சென்றனர். பொன். ராஜகோபாலின் மறைவுடன், சிவநேசச்செல்வன் தினக்குரலின் பிரதம ஆசிரியரானார். 1997 ஆம் ஆண்டு நான் இலங்கை வந்தசமயத்தில் எங்கள் நீர்கொழும்பூரில் ஏற்பாடு செய்த மல்லிகை ஜீவா பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தவர் சிவநேசச் செல்வன். சிவநேசச்செல்வன், கனடா சென்றதும் அவரது இடத்தில் தனபாலசிங்கம் அமர்ந்தார்.
சிவநேசச் செல்வன், மாதொருபாகன் என்ற புனைபெயரில் தொடர்ந்து பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். இதுவரையில் ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம், ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் ஓர் ஆய்வு, ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள், காலத்தின் பின்னணியில் ஆறுமுகநாவலர், நாவலரியல் நொறுங்குண்டஇருதயம் கதையும் கதைப் பண்பும் ஆகிய நூல்களை வரவாக்கியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இவரை கனடாவில் சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன். இந்தப்பதிவின் மூலம் நான் சொல்லவரும் செய்தி இதுதான்: ஒருவரை இனம்கண்டு, ஊக்குவித்து வளர்த்துவிடும் இயல்பு உன்னதமானது. புதிய தலைமுறையினரை மூத்த தலைமுறையினர் இனம் கண்டு வளர்த்துவிடல் வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நினைவு கூர்வோம்: புரட்சிப்பெண் பிறேமாவதி மனம்பெரி! - வ.ந.கி -
ஜேவிபி'யினரின் அரசுகெதிரான 1971 புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர்.
இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22.
நினைவு கூர்வோம்: அன்னை பூபதி கணபதிப்பிள்ளையின் நினைவு நாள் ஏப்ரில் 19. - வ.ந.கி -
போராட்ட அரசியலை அமைப்பையோ அல்லது பாராளுமன்ற அரசியல் அமைப்பையோ சேராத தாயொருவர் , மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணி என்னுமொரு சமூக அமைப்பைச் சேர்ந்த தாயொருவர், நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த போரை நிறுத்தி , பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காகத் தன்னுயிரை அமைதி வழியில் உண்ணாவிரதமிருந்து தந்துள்ளார்.
அன்னையர் முன்னணியின் சார்பில் ஏற்கனவே உண்ணாவிரதமிருந்த அன்னம்மா டேவிட் என்பவரின் உண்ணாவிரதம் இடை நடுவில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 'தான் சுய நினைவுடனே இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், தான் நினைவிழக்கும் பட்சத்தில் யாரும் தன் போராட்டத்தைத் தடுக்கக் கூடாது' என்ற முன் கூட்டியே அறிவித்து விட்டு உண்ணாவிரதமிருந்த அந்தத் தாயின் நெஞ்சுறுதி போற்றுதற்குரியது.