மீண்டும் ஸ்டீபன் ஹார்பர் பிரதமர்! முதல் முறையாகக் கனேடிய பாராளுமன்றத்திற்குத் தமிழர் தெரிவு.
இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப் பெரும்பான்மையினைப் பெறுகின்றது. அதே சமயம் இதுவரையில் பலம் பொருந்திய முதலிரு கட்சிகளிலொன்றாக விளங்கிய மைக்கல் இக்னைட்டிவ் தலைமையிலான 'லிபரல்' கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ஜக் லெயிட்டன் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியினர் இம்முறை 100ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்கட்சியினராக உருவெடுத்துள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ - ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 15,482 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாகக் கனடியப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் இலங்கையர், இலங்கைத் தமிழரென்னும் பெருமையினைப் பெறுகின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளரான 'மார்லின் ஹல்யட்' 11,243 வாக்குகளையும், 'லிபரல்' கட்சி வேட்பாளரான ராணா சார்கர் 10,021 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவான கனடியத் தேர்தல் முடிவுகள் ... இங்கே