அண்மைக்காலமாக நோயுற்றிருந்த 'ராஜு அங்கிள்' (ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை) நேற்று அதிகாலை (30.01.2019) மறைந்தார். என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமைகளில் இவருக்குமோரிடமுண்டு. இவர் அம்மாவின் பிரியத்துக்குரிய கடைசி செல்லத்தம்பி. எம் பால்ய காலத்தில் எமக்கு மகிழ்ச்சியளித்த ஆளுமைகளிலொருவராக விளங்கிய இவர், அக்காலகட்டத்தில் என் வாசிப்பனுவத்தைத் தூண்டுவதிலும் பங்களித்துள்ளார். உடல்நிலை படிப்படியாகச் சீர்குலைந்து , உறுப்புகளொவ்வொன்று ஒவ்வொன்றாகச் செயலிழந்து , இருப்பின் முடிவினை அண்மித்த நிலையிலும் நிலைகுலையாது , தன் உடல் வேதனையெதனையும் வெளிப்படுத்தாது , வழக்கம்போல் அனைவருடனும், சிரித்த முகத்துடன் உரையாடிக்கொண்டிருந்த இவரது உள உறுதிமிக்க ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. இறுதியில் நோயுற்று உடல் தளர்ந்தாலும் , முழுமையான , திருப்திகரமானதொரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கின்றார் என்னும் உணர்வே எனக்கு ஏற்படுகின்றது. அண்மையில் கூட இவரைப்பற்றிய பதிவொன்றினை 'மறக்க முடியாத ஆளுமை ராஜு அங்கிள்' என்னும் தலைப்பிலிட்டிருந்தேன். அதில் இவருடனான என் பால்ய காலத்து அனுபவங்களைக் குறிப்பாக வாசிப்பனுவங்களை விபரித்திருந்தேன். இவர் எவ்வகையில் என் பால்ய காலத்து வாசிப்பனுவங்களுக்கு உதவிருக்கின்றார் என்பதையும் அப்பதிவில் விபரித்திருந்தேன். அதனை அவர் நினைவாக மீண்டுமிங்கே பதிவிடுகின்றேன்.
பார்வைக்கு: 2 Feb., 2019 Saturday 4 PM - 8 PM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
இறுதிக்கிரியை: 3 Feb. 2019 9AM - 11AM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
தகனம்: 3 Feb., 2019 12 PM. @ St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7
மறக்க முடியாத ஆளுமை 'ராஜு அங்கிள்'
என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் 'ராஜு அங்கிள்' என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி. அவருக்கும் அம்மாவுக்குமிடையில் பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது 'நாஷ்' காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.
இவர் சிவாஜியின் 'புதிய பறவை', 'ஆலயமணி' திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி 'ஸ்டைலை'ப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் 'ஜாலி'யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், 'அக்கா, அக்கா' என்று ஓடி வந்து விடுவார். அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக 'பைண்டு' செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.
இவர் அடிக்கடி அவ்விதம் வவுனியா வருகிறாரென்றால் குழந்தைகளான எமக்கெல்லாம் கொண்டாட்டமாகவிருக்கும். முக்கிய காரணங்களிலொன்று நிச்சயம் இவர் எங்களைச் சினிமாவுக்குக் கூட்டிச்செல்வார் என்பதால் தான். 'துலாபாரம்' 'செம்மீன்' போன்ற திரைப்படங்களெல்லாம் அவ்விதம் பார்த்த திரைப்படங்கள்தாம். காட்சி முடிந்து வீடு திரும்புகையில் எம்மை வீட்டு ஓடிச்சென்று சில சமயங்களில் எம்மையெல்லாம் பயப்படுத்துவதில் இவருக்கு மிகவும் பிரியமுண்டு. அச்சமயங்களில் அச்சத்தில் நாம் இவரைத்துரத்திச் செல்லுவோம். அவ்விதம் வந்து பண்ணைக்குத் திரும்பும் சமயங்களில் சில தடவைகள் நானும் இவருடன் புளியங்குளம் பண்ணைக்குச் சென்றிருக்கின்றேன். இயற்கை வளம் கொழிக்கும், கானகச்சூழலில், ஏ-9 பாதையில் அமைந்திருந்த அப்பண்ணைக்குச் சில தடவைகளே சென்றிருந்தபோதும் எனக்கு மிகவும் பிடித்த கானகப்பிரதேசங்களில் ஒன்றாகவும் அப்பிரதேசம் அமைந்து விட்டது. அதன் காரணமாகவே அழியாத கோலங்களிலொன்றாகவும் நெஞ்சில் பதிந்து விட்டது.
ராஜு அங்கிளுடன்இவர் என் வாசிப்பனுபவத்தில் இன்னுமொரு வகையிலும் முக்கியமானவர். என் பால்ய காலத்தில் ஒரு சமயத்தில் நான் மர்மக்கதைகள், காமிக்ஸ் என்று வாசித்துக் குவித்தேன். அதற்கு முக்கிய காரணம் இவர்தான். விடுமுறைகளில் நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சி வீடு செல்வோம். அப்பொழுதெல்லாம் நண்பர்களுடன் சுற்றித்திரிந்து விட்டு வீடு திரும்பும் சமயங்களிலெல்லாம் இவர் மறக்காமல் இந்திரஜால் காமிக்ஸ் புத்தகங்கள், பிரேமா பிரசுர மர்ம நாவல்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வருவார் எனக்காக. மர்மக்கதை மன்னர்களாக அக்காலகட்டத்தில் விளங்கிய மேதாவியின் 'மாயச் சமாதியில் மர்மப் புதையல்' , சிரஞ்சீவி, சந்திரமோகன் போன்றோரின் திகிலூட்டும் மர்ம, பேய்க்கதைகளையெல்லாம் வாசித்துக் குவித்தது அப்போதுதான்.
இவர் பெரிதாக வாசிப்பதில்லையென்றாலும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' இவருக்கு மிகவும் பிடித்தத் தமிழ் நூல்களிலொன்று. அதற்காகவே அவருக்குத் தமிழகத்திலிருந்து 'வாஷிங்டனில் திருமணம்' வாங்கிக் கொடுத்திருந்தேன். நாவல் வெளியானபோது வெளிவந்த ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான நூல். அந்நூலின் வெற்றிக்கு ஓவியர் கோபுலுவின் ஓவியங்களும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன என்பதை மறக்க முடியாது.
இவரைப்பற்றி நினைத்தால் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் எனது முதலாவது கொழும்புப் பயணம். இவர் கனடா செல்வதற்காகக் கொழும்பு சென்றிருந்த சமயம். அவரை வழியனுப்புவதற்காக அம்மா கொழும்பு சென்றார். அது ஒரு காலை நேரம். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் காலை யாழ்தேவி வவுனியாவுக்கு எட்டரை மணியளவில் வரும். அதில்தான் அம்மா கொழும்பு செல்வதாகத் திட்டம். அம்மாவுடன் பாடசாலை சென்று கொண்டிருந்த என் மனத்திலோ வேறொரு திட்டம் இருந்தது. அம்மாவைப் புகையிரத நிலையத்தில் விட்டு விட்டு நான் பாடசாலை செல்வதுதான் அம்மாவின் திட்டம். ஆனால் என் திட்டமோ வேறானதாகவிருந்தது. அம்மா கவுண்டரில் கொழும்புக்கோட்டைக்கு ஒரு ஃபுள் டிக்கற் ஃபோர்ட்டுக்கு (Fort) என்று வாங்குவதைப்பார்த்த நான் , அம்மா அப்பால் சென்றதும் என்னிடமிருந்த ஐந்து ரூபாயினைப்பாவிக்க முடிவு செய்தேன். அம்மாவின் full டிக்கற் ஐந்து ரூபாய் என்பதை ஏற்கனவே அவதானித்திருந்தேன். டிக்கற் கவுண்டருக்குச் சென்று ஃபோர்ட்டுக்குக் 'ஹாஃப்' (half) என்றேன். இரண்டரை ரூபாய்தான் அரை டிக்கற். அதன் பிறகு அம்மா புகையிரதத்தில் ஏறியதும் அவருக்குத் தெரியாமல் அடுத்த பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். கொழும்புக்கோட்டையை யாழ்தேவி அடைந்ததும் , மெல்ல இறங்கி அம்மா பின்னால் போய் 'அம்மா ' என்றபோது அம்மா அதிர்ந்தே போய் விட்டா. மறக்க முடியாத என் பால்ய காலத்து அனுபவங்களிலொன்று.
அம்மாவின் கடைசித்தங்கை ஏற்கனவே அறுபதுகளில் கனடாவுக்கு வந்திருந்தார். அவர்தான் 'ராஜு அங்கிளை'க் கனடாவுக்கு அழைத்தது. கனடாவில் நீண்ட காலம் மத்திய அரசின் தபால் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கி (இவர் மோட்டார் சைக்கிள் பிரியர்களிலொருவர் கூட) தற்போது சிறிது உடல் நலம் குன்றியிருந்தாலும், இன்னும் அதே துடிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பினை எதிர்நோக்கி வாழ்பவர். வயது எழுபதைக் கடந்தாலும் சுருக்கம் விழாத இவரது முகவாகு என்னை வியக்க வைப்பதுண்டு. எவ்வளவு இக்கட்டான சமயங்களிலும் வாழ்க்கையினை இன்பமுடன் எதிர்கொள்ளும் இவர் தேவையற்ற விடயங்களையெல்லாம் மனத்தில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதவர். மற்றவர்களின் திறமையினை எப்பொழுதும் மதிப்பவர்.
என் வாசிப்பனுவத்தில் இவரது பங்களிப்பும், இவருடன் கழித்த வன்னி அனுபவங்களும் மறக்க முடியாத அழியாத கோலங்கள்.
நன்றி: பதிவுகள் - 03 April 2018
முகநூல் அஞ்சலிக்குறிப்புகள்:
மேலுள்ள பதிவுக்கு, முகநூலில் வெளியான அஞ்சலிக்குறிப்புகள். நன்றி நண்பர்களே.!
ஏ. பகலவன் நினைவுகள் அழிவதில்லை.
Gv Venkatesan ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Janaki Karthigesan Balakrishnan மிகுந்த கவலை. குடும்பத்தில் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக அவரது துணைவிக்குத் தெரிவியுங்கள். நான் முதலில் ரொரன்டோ வந்த போது எனது தந்தையைத் தெரிந்து அறிமுகமான சிலரில் ஒரு முக்கியமானவர். பின்பு அவரது மனைவி, உங்கள் சகோதரிகள் என அறிமுகம் ஏற்பட்…See More
Devaki Sivananth Please accept our heart felt condolences to family. May his soul Rest In Peace.
Logan Subramaniam ஓம் சாந்தி
Jeyaraman MahadevaIyer உங்கள் துயரில் நானும் கலந்து உங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் வழங்கி நிற்கின்றேன்.
உங்கள் மாமாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்!
Sivanesaselvan Arumugam A good recollection Deepest sympathies
Logeswaran Kasippillai Rip
Fauzer Mahroof எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Elayathambi Thayanantha RIP
K S Sivakumaran My deepest condolences.
Maheswaran Sinniah தங்கள் துயரில் பங்குகொள்கிறேன். அவரது ஆத்ம சாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rajaratnam Sundaram RiP
Srimathiambal Thiyagarajah ஆழ்ந்த இரங்கல்
Jeevan Prasad RIP
Satheeskumar Shanmuganathan · RIP
Balan Chandran ஆழ்ந்த இரங்கல்
Sasi Rega My dearest Raju uncle good roll model for us.We ar going to miss him so much.
Prabahini Suppiah RIP
Yamuna Nithiananthan May His Soul Rest in Peace....!!!
Tharmalingam Yogarajah Rip
Ahalya Sivapatham ·RIP
V.N. Mathialagan தங்கள் துயரில் பங்குகொள்கிறேன்.
Kunapalan Selvaratnam RIP
Packiyanathan Murugesu Om shanthy RIP
Paul Sathianesan May the Good Lord Bless His Soul Rest In Peace Amen
Shan Nadarajah ஆழ்ந்த அனுதாபங்கள்.
Vetha Langathilakam ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
P A Jayakaran Arullingam ஆழ்ந்த இரங்கல்.
Ananthan Krishnapillai My deepest condolences.... Jenmam Nirainthathu.....
Michael Collin ஒரு சிறுகதை வாசித்த திருப்தி
Ravi AC · Friends with Selvam Kanda and 20 others
Varatha Ken My deepest condolences
Ravi Ponnudurai ஆழ்ந்த இரங்கல்.
Ramanitharan Kandiah என் இரங்கல்
Charles Gunanayakam ஆழ்ந்த இரங்கல்கள்.
Kuppilan Shanmugan உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்.
Jawad Maraikar அவருடைய ஆன்மா சாந்தியடைவதாக.
Christian Selmar Emil ·ஆழ்ந்த அனுதாபங்கள்
Linges Lingeswaran ஆழ்ந்த அனுதாபங்கள்
San Bala RIP
Visu Vara RIP ,Take care Giri
Ratnam Ganesh RIP
Thambiah Pillai Sothilingam RIP
Srirham Vignesh நினைவுகளால் வாழ்பவர்கள், நிறைவுகளைத் தருவார்கள்.
Ahileswarn Sambasivam RIP
Thirunavukkarasan Sittampalam I am truly sorry for your loss. Your uncle will be missed and he will never be forgotten, may his soul rest in peace.
Thiviyarajah Vairamuttu Condolences
Trinco Shajee Condolenc
Albert Fernando ஆழ்ந்த இரங்கல்
Jeyaruban Mike Philip என்னுடைய ஆழ்ந்த இரங்கல் அண்ணே!
Arunmozhi Varman ஆழ்ந்த அனுதாபங்கள்
Siva Palan RIP
Daniel Vithiyatharan Sympathies
Chandran Kandiah Rest in peace
Linges Lingeswaran எனக்குத்தெரிந்த ராஜ *அண்ணா** - பள்ளிக்கூடம் போகின்றேன். முதலாம் நாள். பயமாயிருக்கு. ஒருத்தன்." இங்க எனக்குப்பக்கத்தில இடமிருக்கு" என்று எனக்கு இடம் தந்தவன் ஆருயிர் நண்பனானான். அவன் பெயர் ஜோர்ஜ்.காலம் செல்லச்செல்ல "மச்சான் டேய் குட்டி " என்றழைத்தேன். ஆனால் இப்போ உரிமையுடன் அழைக்க அவன் இல்லை. ஆனால் அவன் நினைவுகள். அது அழியாது. நினைவுகள் என்றால் அவை ஏராளம். அவற்றில் சில.. பொழுது விடியும். மாலை அழகாய் அரங்கேறும். அப்போது இவன் என்னைத்தேடி வருவான். பச்சைப்பசேலென பூத்துக்குலுங்கும் தெருக்களுக்குப் பொருத்தமான "கியர் பூட்டிய" அந்தப்பச்சைச்சைக்கிளுடன் வருவான்.அங்கேதான் பிறக்கிறது " ராஜு " அண்ணாவின் கதை. எதை எடுத்தாலும், எதை உடுத்தாலும், குட்டி எப்படி நடந்தாலும் அங்கே ராஜு அண்ணா நிற்பார். கியர் சைக்கிள் என்பது அந்தக்காலகட்டங் களில் புதுக்கார்களைப்பார்ப்பதுபோல, அதுவும் பச்சை கியர் சைக்கிள் என்றால், அதுவும் வித்தியாசமாக Horn அடிக்கும் சைக்கிள் என்றால் புதினமாகப்பார்த்த கண்கள் கணக்கிலடங்காது. அந்தச்சைக்கிளில் பச்சை நிற இரப்பர் "Horn" பூட்டி, சைக்கிளை பத்திரமாகப்பூட்டி வைக்க பச்சையில் ஒரு சங்கிலி.இவையிரண்டும் ராஜு அண்ணா கனடாவிலிருந்து இவனுக்காகக் கொண்டுவந்தது. விடிந்தால், பொழுதுபட்டால் அவரைப்பற்றியே ஆயிரம் சொன்ன குட்டியும் இல்லை. ராஜு அண்ணாவும் இனி பன்றிக்கோட்டுப்பிள்ளையார் கோவிலடி வரமாட்டார். ஆனால் அவர் நடந்தது, சிரித்தது, என்னை முதன்முதலாக குட்டி அறிமுகப்படுத்தியது என நினைவுகள் நிச்சயமாக அழியாக்கோலங்கள்தான்.
போய் வாருங்கள் ராஜு அண்ணா.
Giritharan Navaratnam நன்றி லிங்கேஸ் நினைவுகளை மீட்டியதற்கு..
Dharani Akil Deep condolences
Alvit Vasantharany Vincent ஆத்மா அமைதி பெறட்டும்
Vanitha Deva எமது ஆழ்ந்த இரங்கல்கள் .
Giritharan Navaratnam அஞ்சலி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. 'ராஜு அங்கிளி'ன் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. உறவினர்கள், நண்பர்கள், பால்ய காலத்து நண்பர்கள், அவருடன் பணி புரிந்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என பார்வைக்கு வைத்திருந்த அவரது உடலுக்குப் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், இறுதிக் கிரியைகளிலும் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.
Yatiyantota Karunagaran சோகம் பகிர்கிறேன்
Yoga Valavan Thiya ஆழ்ந்த அனுதாபங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Ananthan Krishnapillai R I P
Katraan Radha Rip
Uumaa Kaanthi RIP
Thavam Myalvaganam Thavam Rip
Yoga Yogaparan Sorry to hear the sad news Giri. I felt the true kindness that you shared with Rajah uncle. May his soul rest in peace.