தமிழக முதல்வருக்கு ஓர் ஆலோசனை! - வ.ந.கி -

சமூக ஊடகங்களால்
வென்றார்.
சமூக ஊடகங்களால்
தோற்றார்
என்னும் நிலையினைத்
தவிர்க்க
இன்னும் விஜய் செய்ய
வேண்டியது
நடப்புலகில்
நடிப்பதைத் தவிர்ப்பதுவே!


சமூக ஊடகங்களால்
வென்றார்.
சமூக ஊடகங்களால்
தோற்றார்
என்னும் நிலையினைத்
தவிர்க்க
இன்னும் விஜய் செய்ய
வேண்டியது
நடப்புலகில்
நடிப்பதைத் தவிர்ப்பதுவே!

மே 1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'
வ.ந.கிரிதரனின் குரலில் ''உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=A9qVjj6YZLU
உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே உலகத்தின் இயக்கமாம்.
உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்குவோம்.
உழைப்பவர் உயர்வே உலகத்தின் உயர்வாம்.
உண்மையிது உணர்வோம். செயற் படுவோம்.
மண்ணில் மலர்ச்சியை ஏற்றி வைப்போம்.
உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.
உழைப்பவர் இயக்கமே உலகத்தின் இயக்கமாம்.
உழைக்கும் பெண்களின் உரிமைகளை வழங்குவோம்.
உழைப்பவர் தொழிலை நிரந்தரம் ஆக்குவோம்.
வர்க்க ஒற்றுமையை உருவாக்கி வைப்போம்.
சொர்க்கம் அதுவேயென உணர வைப்ப்போம்.

நெதர்லாந்து எந்த வகையான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது? நெதர்லாந்து அரசியலமைப்பு முடியாட்சியைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டது. முக்கியமான சட்டம் மத்திய அரசால் மேலோட்டமாக உருவாக்கப்படுகிறது,
ஆனால் விரிவான விளக்கம் உள்ளூர் அதிகாரிகளுக்கு விடப்படுகிறது. அரசியலமைப்பு முடியாட்சி என்பதில் அரசியலமைப்பில் ராஜாவின் நிலைப்பாடு வகுக்கப்பட்டுள்ளது. ராஜா, அமைச்சர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்குகிறார் என்று அரசியலமைப்பு கூறுகிறது. மன்னர் நெதர்லாந்து இராச்சியத்தின் தலைவராக உள்ளார். ஏப்ரல் 30, 2013 முதல் வில்லெம்-அலெக்சாண்டர் நெதர்லாந்து நாட்டின் ராஜாவாக இருக்கிறார். ஏப்ரல் 27 அன்று நாங்கள் ராஜாவின் பிறந்த நாளை நாடு முழுவதும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுடன் களிப்புடன் கொண்டாடுவோம். பிற நாடுகளில் வேறுபட்ட அரசியல் அமைப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக குடியரசு.
புகைப்படம் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா, அமலியா, அலெக்ஸியா மற்றும் அரியேன ஆகிய மூன்று மகள்களுடன்.
உதாரணமாக:
மன்னர் நெதர்லாந்தின் பொறுப்பாளரா?
இல்லை, ராஜா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் முக்கியமாக ஒரு சடங்கு செயல்பாடு உள்ளது, அதாவது அவர் அரசாங்கத்தின் சார்பாக விருந்தினர்களைப் பெறுகிறார் மற்றும் நாடு முழுவதும் நிறைய வேலைகளைச் செய்கிறார். நாட்டின் பிரதிநிதியாக, அவர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.

தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏபரில் 23 நடைபெறவுள்ளது. இத்தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை திமுகவின் வெற்றியையே எதிர்வு கூறுகின்றன. இந்நிலையில் தற்போது நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் பற்றிய என் ஊகத்தை முன் வைக்கின்றேன்.
கடுமையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமிடையில்தான் நடக்கின்றது. நடிகர் விஜய்யிற்கு வெறித்தனமான , பெரும்பாலும் இள வயதினரான இரசிகர்களின் ஆதரவு உண்டு. 'நாம் தமிழர்' சீமானுக்கு அவரது உறுதியான தமிழ்த்தேசிய வெளிப்பாடு காரணமாக வாக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆதரவு உன்டு.
அதிமுகவைப் பொறுத்த வரையில் என்னைப் பிரமிப்படைய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா அணி, செங்கோட்டையன் அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்திருந்த அதிமுக இத்தேர்தலில் காணாமல் போகுமென்று அரசியல் அவதானிகள், ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில் திமுகவுக்கு எதிரான பலமான எதிரியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருப்பது அவரது ஆளுமைக்குக் கிடைத்த வெற்றி. அவரது பலவீனம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மட்டுமல்ல, அதன் அடிவருடிபோல் செயற்படுவது. மோடி அரசு இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் துருப்புச்சீட்டாக வைத்து இவரைத் தம் கைகளுக்குள் அடக்கி வைத்திருப்பது போல் தெரிகிறது.

அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
ஈரான் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் இவை!
சதாம் ஹுசைன் வீழ்ச்சி: ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, அமெரிக்கா மிக விரைவாக அவரது இராணுவத் தலைமையையும், கட்டளை மையங்களையும் தாக்கியது. ஒரு சில வாரங்களிலேயே ஈராக்கின் பாரம்பரிய இராணுவம் சிதைந்து, சதாம் பதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வு, ஒரு வலிமையான ஆனால் மையப்படுத்தப்பட்ட இராணுவ அமைப்பு, தலைமை மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது எவ்வளவு எளிதாகக் கவிழும் என்பதற்கான ஒரு நேரடி உதாரணமாக ஈரானுக்கு அமைந்தது.
முகமது கடாஃபி மரணம்: லிபியாவில் கடாஃபி கொல்லப்பட்டபோது, அங்கும் மேற்கத்திய படைகள் அவரது கட்டளை அமைப்புகளைத் தகர்த்து, அவரது தலைமையை குறிவைத்தன. ஒரு தனிநபரின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய லிபிய அரசு, அந்தத் தலைவர் அகற்றப்பட்டவுடன் எந்தவித ஒருங்கிணைப்பும் இன்றி சிதறியது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் குங்குமத்தையும்,
அழுத்தமாய் இட்டு, பள பளக்க செய்து
கன்றி சிவந்த இதழ்களும்
அழகுடன் இளக,
தூய்மையில் விட்டிருப்பார்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பார்…
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.