கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் 'பொன்மணி' புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய 'பொன்மணி' என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் 'கோல்டன் லயன்' விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது 'சுவரூபா' (Swaroopa) திரைப்படம் எழுத்தாளர் காப்காவின் 'உருமாற்றம்' (Metamorphosis ) நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட திரைப்படமாகும். இவரது 'சக்கராங்' (Sakkarang - 2014) திரைப்படமான இலங்கையில் ஆங்கிலேயரின் காலனியாட்சியில் பெளத்த ஆலயமொன்றின் வருடாந்த நிகவுகளில் பங்கு பற்றும் பாரம்பரிய நாட்டியக் கலைஞர்களின் வாழ்வை விபரிக்கும் திரைப்படம். பிரதான நாட்டியக்கலைஞரான சுபா, மற்றும் அவரது மனைவியான ரதி ஆகியோரின் வாழ்வினூடு, இப்பாரம்பரிய நாட்டியக்கலைஞர்களின் மீது புரியப்பட்ட அடக்குமுறை, அவர்களது மூலம், உரிமைகள் ஆகியவற்றை நாடானது நிலப்பிரபுத்துவத்திலிருந்து நவீனத்துக்கு மாறும் காலகட்டப்பின்னணியில் விபரிப்பதாகும்.

'மடுயம் டவச (Matuyam Davasa - Some day in the Future - 2001] இரண்டு வாடகைக்கு அமர்த்தப்படும் கொலையாளிகளான லயனல், தம்மிகா ஆகியோரின் தலைமுறை வாழ்க்கையினை (அவர்களைப்பற்றி நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சமயத்தில்) விபரிப்பதாகும். 'சொல்டடு உன்னகே - Sodadu Unnahe - Old Soldier - 1981- இராணுவ வீரர், விலைமாது, குடிகாரன், விலைமாதினை வைத்து காசு உழைப்பவன் ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்வை விபரிக்கும். இலங்கையின் சுதந்திரதின நிகழ்வொன்றின் போது நடைபெற்ற வாண வேடிக்கைகள், கொண்டாட்டங்களின்போது இரண்டாவது உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியிருந்த நண்பர்களிலொருவரான இராணுவ வீரரின் நனவிடை தோய்தலின் மூலம் இந்நால்வரும் நாட்டின் சுதந்திரத்தின் மூலம் அடைந்தது எவையெவை, இவர்களின் எதிர்காலம் என்ன என்பது பற்றி நோக்கும் திரைப்படம் இத்திரைப்படம். மாலினி பொன்செகா, ஜோ அபே விக்கிரமா, ஹென்றி ஜெயசேன மற்றும் நீல் ஆல்ஸ் ஆகியோர் மேற்படி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.

இன்னுமொரு முக்கியமான திரைப்படம் பரா டிகே - Para Dige - On The Run - 1980 - கொழும்பு நகரத்தில் வாவும் இளந்தம்பதியினரின் நகரத்து மானுட வாழ்வுச் சிக்கல்களை விபரிக்கும். விஜய குமாரதுங்க, இந்திரா அபேயசேன, வசந்தி சதுராணி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படமிது. மாலினி பொன்செகா, விஜய குமாரதுங்க நடிப்பிலுருவான 'பம்பரு அவிட் (bambaru ævit) - The Wasps Are Here - 1978- திரைப்படமும் முக்கியமானது. மீனவ சமுதாயத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ள திரைக்கதையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் இளம் பெண்ணான மாலினி பொன்செகாவுக்கும், அவளை விரும்பும் அக்கிராமத்து மீன்பிடி வர்த்தகத்தைத் தம் கைகளில் வைத்திருக்கும் விஜய குமாரதுங்காவுக்குமிடையிலான வாழ்வுப்பிரச்சினைகளை விபரிக்கும் திரைக்கதையானது பாரம்பரிய இலங்கைச் சமூகத்தின்மீது நவீனத்துவம், மற்றும் இன மோதல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்தும். விஜய குமாரதுங்க மற்றும் மாலினி பொன்செகா நடிப்பிலுருவான eyā dæn loku ḷamayek ‒ How to be an Adult • 1975 திரைப்படமும் இன்னுமொரு முக்கியமான திரைப்படம். சிறிய கிராமத்து மானுட வாழ்வானது எதிர்கொள்ளும் சிக்கல்கள், மன அழுத்தங்களை விபரிக்கும் திரைப்படம். கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் மகளைத்தனியாக வளர்த்தெடுப்பதையும், அதற்காக அவள் கிராம சேவகரின் அரவணைப்பில் வாழ்வதையும், இந்நிலையில் மகள் சுசீலா அழகாக வளர்ந்து வயதுக்கு வருவதையும் , அவளது அழகு அக்கிராமத்து சேவகர் உட்படக் கிராமத்தின் இளைஞர்களை ஈர்ப்பதையும்,எவ்விதம் கிராமத்துச் சூழலானது அவ்விளம் பெண்ணின் வாழ்வை நிர்ணயிக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தும் திரைப்படமிது. சுபாசினி, பாலச்சந்திரன், கமலா தம்பிராஜா, மற்றும் டாக்டர் நந்தி ஆகியோரின் நடிப்பிலுருவான தமிழ்த்திரைப்படமான 'பொன்மணியும்' குறிப்பிடத்தக்கது.. வட மாகாணத்துக் கிராமமொன்றின் சமூகச்சூழல் எவ்விதம் மானுட வாழ்வைப் பாதிக்கின்றது என்பதை விபரிக்கும் திரைப்படம். தமிழ் மக்களிடையே திகழும் சீதனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை மற்றும் மதம் ஆகியவை எவ்விதம் பொன்மணி என்னும் பெண்ணொருத்தியின் மானுட வாழ்வை, கனவுகளைச் சீரழிக்கின்றன என்பதை விபரிக்கும் கதையினை எழுதியிருப்பவர் காவலூர் ராஜதுரை.

இவர் இயக்கிய திரைப்படங்கள் வருமாறு:

1974 : අහස් ගව්ව / ahas gavva ‒ L'Espace aérien ‒ One League Of Sky
1975 : එයා දැන් ලොකු ළමයෙක් / eyā dæn loku ḷamayek ‒ How to be an Adult
1977 : பொன்மணி / poṉmaṇi ‒ Younger Sister
1978 : බඹරු ඇවිත් / bam̆baru ævit ‒ L'arrivée des guêpes ‒ The Wasps Are Here
1980 : පාර දිගේ / pāra digē ‒ On The Run
1981 : සොල්දාදු උන්නැහෙ / soldādu unnæhe ‒ Old Soldier
1994 : වාසුලි / vāsuli ‒ Whirl Wind
2001 : මතුයම් දවස / matuyam davasa ‒ Some Day In The Future
2014 : ස්වරූප / svarūpa ‒ Metamorphosis
2014 : සක්කාරං / sakkāraṁ ‒ Sakkarang

[நன்றி: http://www.suravi.fr/pathiraja_dharmasena.html ]

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து அவரைப்பற்றிய சிறுகுறிப்பினையும் உங்களுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.:

கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja) [ பிறப்பு மார்ச்சு 28, 1943 கண்டி, இலங்கை - இறப்பு 28 சனவரி 2018 (அகவை 0) ]

தர்மசேன பத்திராஜா (Dharmasena Pathiraja, மார்ச் 28, 1943 - சனவரி 28, 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனரும், கல்வியாளரும் ஆவார். பொன்மணி என்ற தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்கள் இவரது படைப்புகளாகும்.

வாழ்க்கைச் சுருக்கம்
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆத்திரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.

தர்மசேன பத்திராஜா களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

திரைப்படத் துறையில்
பத்திராஜா 1970 ஆம் ஆண்டில் சத்தூரோ என்ற பெயரில் 10-நிமிடக் குறும்படம் ஒன்றைத் தயாரித்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆகாசு கௌவா என்ற முழுநீள சிங்களத் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது அவருக்குப் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. 1975 இல் வெளியான "பெரிய பையனாக வருவது எப்படி" (எயா தன் லொக்கு லமயாக்) திரைப்படம் மாஸ்கோ 9வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவரது பம்பரு அவித் (1978) என்ற திரைப்படம் மாஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. இலங்கையில் இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படத்துக்கான சனாதிபதி விருதுகள் கிடைத்தன.

இவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

நூல்கள்
திரையரங்கக் கலை பற்றி இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

மறைவு
தர்மசேன பத்திராஜா 2018 சனவரி 28 அன்று கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்