- திருப்பூர் சிறுகதைகள்! - தொகுப்பாசிரியர் - பொன் குமார்! விலை ரூபாய் 300 ( 95787 84322 ) -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது.
இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..
0
அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது.
0
இத்தொகுப்பில் உள்ள பெண் வலிமையானவள் என்ற கதை எழுதி இருக்கிறார் தீபன். பத்திரிகையாளர் புகைப்பட கலைஞர் கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார். வழக்கமாக அவருடைய கதைகளில் விளிம்பு நிலை மக்களும் தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த மக்களும் இருப்பார்கள். இக்கதையிலும் பெண்களின் வாழ்க்கை பல்வேறு மடங்கு வறுமையும் பாலியல் சீண்டலும் சமூக சூழ்நிலையால் புறக்கணிக்கப்பட்டதும் என்று இருப்பதை பல சம்பவங்கள் மூலமாக காட்டுகிறார். அது அவரின் தனித்துவத்திற்கு இந்த ஒரு கதை.சான்று
0
ரத்தினமூர்த்தி அவர்களின் அப்பாவின் நிழல் கதை திருப்பூர் சூழலில் மையமாகக் கொண்டிருக்கிறது. திருப்பூரின் வேலை சூழலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையும் பற்றியும் பேசுகிறது ஆனாலும் எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்து இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறார். அவரின் ஒரு சிறுகதை தொகுப்பு இந்த தலைப்பில் உயிர் மெய் பதிப்பகத்தை கூட வெளியிட்டு இருக்கிறார்கள் உடல் நலக்குறைவு என்ற காலகட்டத்தில் இருந்து விலகி இப்போது தேறிவரும் ரத்தினமூர்த்தி அவர்களுக்கு இந்த தொகுப்பில் இந்த கதை இடம்பெற்று இருப்பதும் அதுவும் நீண்ட ஒரு கதை இடம்பெற்று ஒரு போதும் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கும். அவருக்கு ஆறுதலாக இனிமேல் எல்லாம் நடக்கும் வரை எழுதுவார்.
0
குழந்தைவேல் அவர்களின் படைப்புகள் தொடர்ந்து கவனத்தில் கொண்டவை என்பது முக்கியம் இவர் சமீபமான சில ஆண்டுகளாக சுயநினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார், 80 வயதிற்கு மேல் இருக்கும். ஆனாலும் அவருடைய நாவல்களில் வருகிற வால்பாறை மின் தொழிலாளர் பற்றிய பிரச்சனைகளும் அவர்களை சிறுவர்கள் என் மதிப்பதும் , பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் நம்பிக்கை தருவது.
0
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கோதை மணியன், வெண் புரவி, குணசுந்தரி என்ற எழுத்தாளர்கள் பெயர்கள் கேள்வி படாத இருக்கிறது இதைப் பற்றி தொகுப்பாளர் பொன் குமார் அவர்கள் தகவல் தந்து உதவலாம்.
0
கிணற்றில் குதித்தவர்கள் என்ற என் ஸ்ரீராம் கதை குறிப்பிடத்தக்க கதை. கொங்கு பகுதி சார்ந்த நிலவியலை மிக அழகாக வழக்கமாக அவர் கதைகளில் கொண்டு வந்து விடுபவர் இந்த கதையில் வரும் கிணறு ஒரு படமமாகவே மனதில் பதிந்து விடுகிறது அவரின் முத்திரையை அழுத்தமாக பதிந்திருக்கும் ஒரு கதை
0
இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வீடு சுகந்திசுப்பிரமணியன் கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கதை வெளிவந்த சமயத்தில் அசோகமித்திரன் அவர்கள் இந்த கதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். வெகுவாகப் பாராட்டினார். பெண்ணின் இருப்பும் பாதுகாப்பின்மையும் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பெண்ணுக்கு வீடு என்பது ஒரு பாதுகாப்பான இடம் வாடகை வீடு என்பது தவிர்த்து சொந்த வீடு கனவு ஒரு பெண்ணுக்கு இருப்பதை இந்த கதை சொல்கிறது,
0
இராசிந்தன் சிறுகதை சிறப்பானது திருப்பூரில் ஒரு மழை பெய்த நாளில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பலர் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த தொழிலாளர்கள் குடும்பங்களைப்பற்றியும் துயர சம்பவத்தையும் சிந்தன் அவர்கள் இந்த கதை விவரித்து இருக்கிறார்.
இந்தத் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..
0
சுப்ரபாரதிமணீயன், திருப்பூர் கிருஷண், கே என் செந்தில் உட்பட 28 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
0
திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பாசிரியர் -பொன் குமார்
விலை ரூபாய் 300 ( 95787 84322/
வேரல் புக்ஸ் சென்னை வெளியீடு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.