கொங்கு பகுதி இலக்கிய இதழ்களின் ஆசிரியர்களை ஓவியங்களாக கொண்ட ஓவிய கண்காட்சி திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது.
இந்த ஓவிய கண்காட்சியில் சுமார் 50 ஓவியங்கள் இடம் பெற்றன. இவற்றில் 30 ஓவியங்கள் கொங்கு பகுதி சார்ந்த எழுத்தாளர்களின் ஓவியங்கள்.. இவர்களில் சாகித்தய அகடமி பரிசு பெற்ற சிற்பி பாலசுப்ரமணியம் ,கவிஞர் புவியரசு மற்றும் சுப்ரபாரதிமணியன், கோவை ஞானி, பூ அ. ரவீந்திரன் உட்பட பல எழுத்தாளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன இந்த வண்ண ஓவியங்களை கோவை சார்ந்த தூரிகை சின்னராஜ் அவர்கள் வரைந்திருந்தார்
இதைத் தவிர அமீரக எழுத்தாளர்கள் என்று முப்பது எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி இடம் பெற்றன .சார்ஜா, அபுதாபி, துபாயில் வாழும் முப்பது இளம் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்களை தூரிகை சின்னராஜ் ஓவியங்களாகத் தீட்டி இருந்தார். அவையெல்லாம் சென்ற ஆண்டின் சார்ஜா புத்தக கண்காட்சியின் போது அங்கே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு புக்கிஷ் என்ற விருதை இதன் காரணமாக அங்கே அவருக்குத் தந்தார்கள் அந்த ஓவியங்களும் இந்த ஓவிய கண்காட்சி இடம்பெற்றிருந்தன.
காந்திநகர் சார்ந்த பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த கண்காட்சியை கண்டு களித்தனர் எழுத்தாளர்கள் முத்துபாரதி அழகு பாண்டி அரசன், வின்சென்ட் ராஜ், சுப்ரபாரதி மணியன், தங்க பூபதி, பிரபு, ஜெய் ஸ்ரீ உட்பட பல எழுத்தாளர்கள் இந்த கண்காட்சியின் போது கலந்து கொண்டார்கள்.
காந்திநகர் வாசகர் சிந்தனை பேரவையின் தலைவர் துரை, செயலாளர் வெள்ளிங்கிரி, துணைச் செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்
செய்தி : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 9486101003
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.