அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் 26.06.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவான “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்” - கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு - அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் 'அகஸ்தியர்' விருதுதினையும், 'கலைத்தீபம்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட கவிஞர் யாழ் அஸீம், மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் மன்னார் அமுதன், 'தமிழ் தென்றல்' அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோரை படத்தில் காணலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.