மெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள். கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக சேவையாற்றியவர் திரு முருக பூபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க முதல் முதலாக அவுஸதிரேலிய கலை இலக்கியசங்கத்தை உருவாக்கி பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்ததுடன் உதயத்தின் இலக்கி பகுதியையும் பலகாலமாக நடத்தியவர் இவர் இலங்கை அரசின் தேசிய விருதான சாகித்திய விருதை இரு முறை பெற்ற இலக்கியவாதி பலகாலமாக பத்திரிகையாளராக இருந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது.
கடந்த ஜனவரியில் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை பல கரிப்புகளுக்கு மத்தில் நடத்துவதில் முன்னணி வகித்தவரில் முருகபூபதியும் ஒருவராகும். இவரின் சேவைகளை மெல்பேண் மக்கள் கௌரவிப்பதாக இந்த நிகழ்சசி அமைகிறது.
இந்த நிகழ்சியில் பல எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அவுஸ்திரேலியாவின் பல பகுதியில் இருந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்
தகவல் நோயல் நடேசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://noelnadesan.wordpress.com
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.
வெளியான நூல்கள்
- சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975)
- சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986)
- சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம், 1990)
- நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (நினைவுகள், 1995)
- வெளிச்சம் (சிறுகதைகள்)
- எங்கள் தேசம் (சிறுகதைகள்)
- பறவைகள் (நாவல்)
- பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்)
- இலக்கிய மடல் (கட்டுரைகள்)
- சந்திப்பு (நேர்காணல்)
- இலங்கையில் பாரதி (ஆய்வு)
- கடிதங்கள் (கடிதங்கள்)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (நினைவுகள், 2001)
- ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் (நினைவுகள்)