பேரரசன்
ஆளுமை தவறே
வழக்காடு மன்றம்
நீதி முறைமைகளில்
முறையில்லாமல்
அதிகாரத்திமிரே
அநீதி.
நீதி வழுவாத
மாபெரும் வேந்தன்
இழைத்தான் கொடுமை
கண்ணகிக்கு
ஆளுமை தவறேல்...?
அதிகாரப்போக்கில்
செய்வதறியா வேந்தன்
சிறைப்பிடித்தான்
சீதையை…!
இராவணன்
ஆளுமை தவறேல்…?
சினம் கொண்டவன்
சூர்பனகையின்
மூக்கையும்
மார்பகத்தையும்
அறுத்தெடுத்தான்.
பெண்ணினத்தின்
பெருமையும் அழகையும்
சிதைத்தான்
அதிகாரத்தமிரே
ஆளுமை தவறேல்…?
மாபெரும்
சித்தர்
தவத்தின் வலிமை
கொக்கின்
உயிர்பறிபோனதே
கொங்கணச்சித்தரின்
கோபம்
ஆளுமை தவறேல்…?
இந்திரன்
அகலிகையை
அடைந்ததும்
ஆளுமை தவறேல்…!
அவளுக்கு
சாபம் அளித்த
கௌதமுனிவரின்
ஆளுமை தவறேல்…!
அனைவரையும்
அடிபணியவைப்பது
அதிகாரமல்ல…!
அன்பால் ஆளுவதே
சிறந்த ஆளுமையான
அதிகாரம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.