முகநூற் பதிவொன்றில் திரு.கந்தசாமி ஆர் (Kandasamy R) அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது. 'எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க' என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது."
பொருளியல்ரீதியில் கவிஞர் மகாகவி பாரதியாரைப்போல் ஜெயிக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் இலக்கியப் பக்கம் திரும்பாமல் பொருளியல்ரீதியில் ஜெயித்தாலும் அவர்தான் இன்னுமொரு வகையில் ஜெயிக்கின்றார். நீங்கள் நிச்சயம் உங்கள் தந்தையின் இலக்கியப் பங்களிப்பையிட்டுப் பெருமைப்படலாம். பெருமைப்பட வேண்டும். இத்தருணத்தில் 2021இல் ஒரு இலட்சம் ரூபா விஷ்ணுபுர விருதை அவரது இலக்கியம் அவருக்கும் பெற்றுத் தந்துள்ளதையும் நினைவு கூர்வது நல்லது.
இத்தருணத்தில் இலக்கியத்தால் உயிர் வாழும் எழுத்தாளர் தமிழ்மகன் தனது தந்தையின் நூல்களைப் பதிப்பித்தது பற்றி எழுதியிருந்த பதிவினையும் நினைவில் வைக்கின்றேன்.