இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மல்லிகை சஞ்சிகைக்கும், டொமினிக் ஜீவா அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அவர் தனி மனிதராக எழுத்தாளர்களை அரவணைத்து மல்லிகையைக் கொண்டு வந்தார். அதன் இதழ்களூடு எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன மல்லிகை இதழ்கள்; வளம் சேர்த்தார்கள் மல்லிகையில் எழுதிய எழுத்தாளர்கள். இன்னுமொரு விடயத்துக்காகவும் மல்லிகையின் பங்களிப்பு முக்கியமானது. அது: இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் ஆவணங்களாக இருந்தன மல்லிகை இதழ்கள்.
அவரது படைப்புகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. அவரது இலக்கியப்பங்களிப்புகளில் நான் பிரதானமாகக் கருவதுவது அவரது இதழாசிரியற் பங்களிப்பினையே. இன்றிருந்திருந்தால் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு வயது 95. நினைவு கூர்வோம்.
மல்லிகை இதழ்களை வாசிக்க