அழகியல் நோக்கில் க.நா.சுவின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி
'செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகெனப்படுமே"1 (தொல் செய்யுளியல் 1492 நூற்பா)
அழகு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று. செய்யுளுக்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொகுத்து வருவது அழகு என்று தொல்காப்பியம் கூறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டில் (இரஷ்யாவில்) பல கலைக் கோட்பாடுகள் உருவாகின. அவற்றுள் அழகியலும் ஒன்றாகும். அழகியலில் 'என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அழகியலின் அடிப்படை".2 (தி.சு. நடராசன், தமிழ் அழகியல்) தமிழில் அழகியலை முருகியல் என்றும் அழைப்பர் இது ஆங்கிலத்தில் ஈஸ்தடிக்ஸ் (யுநளவாநவiஉள) என்று வழங்கப்படுகிறது. இதனை பொற்கோ, 'அழகியல் அல்லது முருகியல் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்ற துறை இன்றைய சூழலில் நமக்குப் பெரிதும் புதியது என்றாலும் அணி இலக்கணமும் இலக்கணங்களில் பல்வேறு சூழல்களில் பேசப்பட்டிருக்கின்ற பொருள்கோளும் நடையியலும் அழகியலுக்கு நெருக்கமானவை என்று நாம் குறிப்பிடுதல் பொருந்தும்"3 என்று ஆராய்ச்சி நெறிமுறைகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அழகு என்பதற்கு திரு, அம், அணி, ஏர், நோக்கு, ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு, பொலிவு, சீர், வடிவு, கோலம், வண்ணம், கவின், முருகு, வனப்பு, எழில் எனும் பல பொருள்கள் உள்ளன. முருகு என்பது தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச்சொல். ஈஸ்தடிக்ஸ் எனும் ஆங்கில சொல்லிற்கு தமிழில் புலனுணர்வு, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு என்ற பொருள்களும் உள்ளன. மேலும், முருகு எனும் சொல் கலித்தொகை, ஐங்குறுநூறு, புறம்.4, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முருகு என்பது பலபொருள் குறிக்கும் சொல். சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை,
அ) மனம் ஆ) இளமை இ)கடவுட்டன்மை ஈ) அழகு என்பன.
‘கை புனைந்தியற்றா கவின்பெறு வனப்பு|4 (திருமுருகாற்றுப் படை)
‘சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்......
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்தல்|5 (நன்னூல், பத்து அழகுகள், நூற்பா 13)
என்பன அழகு குறித்துப் பேசப்படும் நூல்கள். மேலும்;, திரு.வி.கவின் முருகன் அல்லது அழகு நூலும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பும், வாணிதாசனின் எழிலோவியம் நூலும் அழகு என்ற பெயரில் அமைந்த நூல்கள், மேலும், அழகு குறித்து திருவாசகம் - சித்தம் அழகியார் என்றும், குமரகுருபரர் ‘அழகு ஒழுக| எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறனாய்வில் அழகியல் என்பது உருவம், உள்ளடக்கம் இரண்டைப் பற்றியதாகும். இவற்றில் எது முக்கியமானது? எது முதன்மையானது? என்பது நீண்ட காலமாக இருந்துவரும் விவாதம்.

முன்னுரை
- L T Kiringoda is a Chartered Architect, Town Planner and a Chartered Environmentalist. He headed the Directorate of Development Planning of the Urban Development Authority of Sri Lanka, wherein he served for nearly 3-decades.-
- திரு. திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) எழுபதுகளில் என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்ற சக சிங்கள மாணவர்களிலொருவர். கட்டடக்கலைத்துறையில் இளமானி, முதுமானிப்பட்டப்படிப்பை முடித்த இவர் ,நகர அமைப்புத்துறையிலும் முதுமானிப்பட்டப்படிப்பை முடித்தவர். நகர அதிகார சபையில் பல வருடங்களாகப்பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் இலங்கையின் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பின் தலைவராகவுமிருந்திருக்கின்றார். ( the President of the Organization of Professional Associations of Sri Lanka ). இவரது ஆங்கிலக் கட்டுரைகள் பல கட்டடக்கலை, நகரத்திட்டமிடல் பற்றியவை, பல ஆங்கில் ஆய்வேடுகளில் வெளியாகியுள்ளன. அவை அவற்றின் பயன் கருதி இங்கு பிரசுரமாகும். இவற்றைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி, பதிவுகளில் வெளியிடத் தமது சம்மதத்தை வழங்கிய திலிந்தா கிரிங்கொடவுக்கு நன்றி. அவர் அனுப்பிய கட்டுரைகளில் முதலாவது கட்டுரையான, சூழலுக்குப் பாதிப்புறா வகையில் நிறைவேற்றக்கூடிய குடிமனைகள் விடயத்தில் இலங்கையின் அனுபவம் பற்றிய கட்டுரையான “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience” என்னும் கட்டுரை முதலில் இங்கு பிரசுரமாகின்றது. நகர அமைப்பு, கட்டடக்கலை, மற்றும் குறைந்த செலவிலான சூழலுக்கேற்ற குடிமனைகள் போன்ற விடயங்களில் அனைவரும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதாலும் இவ்விதமான ஆய்வுக் கட்டுரைகளின் தேவை அதிகமாகின்றது. - பதிவுகள்-
முன்னுரை
முன்னுரை
சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.
முன்னுரை
சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள். “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.
செவ்வியல் இலக்கியத்தின் செம்மாந்த வளம்பெற்ற நூல்களில்; குறுந்தொகை தனித்துவம் மிக்கது. குறுகிய அடிகளில்; செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் பேறு பெற்றது.
ஈழத்தில் நிகழ்ந்த போர் அங்கு பல பெண் கவிஞைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் போர்ச்சூழல்சார் அரசியல் விமர்சனக் கவிதைகளையும், போர் ஏற்படுத்தியுள்ள துயரினையும், காதலையும் பேசுவதோடு பெண் விடுதலையினையும் மிகநுட்பமாக தமது கவிதைவழி மொழிகின்றனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில், அம்புலியின் கவிதை ஒன்று ஈழத்துப்போரின் ஊடாக வாழ எத்தனிக்கும் ஒரு பெண்ணின் முயற்சியாக புரிந்து கொள்ளமுடிகிறது. அம்புலியின் நாளையும் நான் வாழ வேண்டும், எரிமலைக் குமுறல், தேடி அடைவாய், நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை உள்ளிட்ட பல கவிதைகள் இத்தகைய பாடுபொருளையே கொண்டுள்ளன. “தேடி அடைவாய்” போரின் நெருக்குதலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்க வேண்டிய எதையும் வழங்க முடியாத இயலாமையின் வெளிப்பாடாக விரிகின்றது. மாரிக்குளிரில் நனைந்திடினும் உள்ளம் தணல் பூத்துக் கிடக்கின்றது. துயரங்களின் நடுவினில் நான் உன்னை வாரியணைக்க முடியாத தாயாகியுள்ளேன். ஓர் அழகிய காலையை உனக்குக் காட்டமுடியாத, உன்னோடு விளையாட முடியாத பாலைவன நாட்களையே உனக்கு பரிசளிக்கிறேன் என்று கழிவிரக்கத்தைப் பதிவு செய்கின்றது.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் அச்சமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக அணங்கு, விலங்கு, கள்வா், தம்இறை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் அச்சத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.
தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.
யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்களால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்
பரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.
திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









