இருப்பதிகாரம்
- வ.ந.கிரிதரன்
-
நிலை மண்டில ஆசிரியப்பா!
வானினை நிலவினை வரையினை
மடுவினை
தேனினை யொத்த சொல்லினை
உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத்
தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின்
நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு....உள்ளே
அலைகளுக்கு மத்தியில்...!- வ.ந.கிரிதரன்...உள்ளே
விசும்பும், தொலைநோக்குதலும்!- வ.ந.கிரிதரன்-
உள்ளே
இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
இயற்கையொன்றி இருத்தல்!- வ.ந.கிரிதரன்
-...உள்ளே
நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
-வ.நகிரிதரன் -......உள்ளே
விருட்சங்கள்!...உள்ளே
விண்ணும் மண்ணும்!...உள்ளே
ஞானம்!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
கிணற்றுத் தவளைகள்!...உள்ளே
யானை பார்த்த குருடர்கள்! ...உள்ளே
நகரத்து மனிதனின் புலம்பல்'
-வ.ந.கிரிதரன் உள்ளே
எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..
வ.ந.கிரிதரன் -உள்ளே
பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன்
-உள்ளே
கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை.
மொழிபெயர்ப்பு)...உள்ளே
இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
எதற்காக?- வ.ந.கிரிதரன் -உள்ளே
நடிகர்கள்! -வ.ந.கிரிதரன்.உள்ளே
நகர் வலம் - வ.ந.கிரிதரன்-.உள்ளே
அனகொண்டா -வ.ந.கிரிதரன்-.உள்ளே
காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.-
வ.ந.கிரிதரன்-.உள்ளே
விடுதலைக் கவிதைகள் சில (1984-1987)...உள்ளே
திண்ணை
இணைய இதழில்
வெளிவந்த வ.ந.கிரிதரன் கவிதைகள் சில...
கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை.
மொழிபெயர்ப்பு)...உள்ளே
கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை.
மொழிபெயர்ப்பு)
திண்ணை யூன் 17,2001
எங்கோயொருக்கும் ஒரு கிரகவாசிக்கு
திண்ணை யூலை 1, 2001...
நகரத்து மனிதரின் புலம்பல்
திண்ணை யூலை 9, 2001
கனேடியக் கவிதைகள்: எனது விடுதி,
பாத மொழி, அவளது தலைமயிர்
திண்ணை ஆகஸ்ட் 19, 2001
திக்குத் தெரியாத கட்டடக் காட்டினிலே
திண்ணை ஆகஸ்ட் 19, 2001
கனேடியக் கவிதைகள்: கோடைப்
பல்லி, பனி உறைந்த ஆற்ர்ரின் மீது நடத்தல், முதல்
திண்ணை செப்டெம்பர் 3, 2001
நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில்
நான்
திண்ணை செப்டெம்பர் 9,2001
இயற்கையைச் சுகித்தல்
திண்ணை செப்டெம்பர் 16, 2001
மூன்று கவிதைகள்: சிட்டுக் குருவி,
பாரதியாய்ப் படைத்திடுவீர், ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
திண்ணை செப்டெம்பர் 23, 2001
பரிமாணங்களை மீறுவதெப்போ (அல்லது
இருப்பு பற்றியதொரு விசாரம் )
திண்ணை செப்டெம்பர் 23, 2001
பேரசிற்கொரு வேண்டுகோள்
திண்ணை செப்டெம்பர் 30, 2001
நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்
திண்ணை ஒக்டோபர் 7, 2001
இருட்டுப் பன்றிகள்
திண்ணை ஒக்டோபர் 21, 2001
நாகரிக மானுடமே
திண்ணை ஒக்டோபர் 28,2001
ஞானச் சுடரே நீ எங்கு போயொளிந்தனையோ?
திண்ணை நவம்பர் 4,2001
'எழுக
அதிமானுடா '
கவிதைத் தொகுதியிலிருந்து சில..
சுடர்ப்பெண்கள்
சொல்லும் இரகசியம்?
இருண்ட அடிவானை நோக்குவீர்.
ஆங்கு
இலங்கிடும் சுடர்ப்பெண்கள்
உரைத்திடும்
இரகசியம் தானென்ன?
புரிந்ததா?
புரிந்திடினோ, பின்னேன்
நீவிர் புழுதியில் கிடந்துருள்கின்றீர்?
சாக்கடையில்
புழுத்துளம் வேகுகின்றீர்?
சூன்யத்தைத்
துளைத்து
வருமொளிக்கதிர்கள்.
நோக்குங்கள்!
நோக்குங்கள்!
நோக்கம் தான்
தெரிந்ததுவோ?
தெரிந்துவிடின்
போக்கற்ற பிறவியெனப்
புவியில்
தாக்குண்டலைகின்றீரே? ஏன்?
'அஞ்சுதலற்ற கதிர்கள்.
அட,
அண்டத்தே யார்க்கும்
அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம். வருகின்றோம்.
வருவோம்.
காலப் பரிமாணங்களை
வெளியினிலே
காவியே வந்தோம்.
சூன்யங்கள் கண்டு
சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர்
எம்முன்னே
மிஞ்சி நிற்பவர் தானுண்டோ?
தெரிந்ததா? விளக்கம்
புரிந்ததா?
தெரிந்திடினோ? அன்றி
புரிந்திடினோ?
உரிமையற்ற புள்ளெனவே
உழல்கின்றீரே யிவ்வுலகில்.
அட,
துள்ளியெழத் தான்
மாட்டீரோ? புத்துலகம்
சமைத்திடத்தான்
மாட்டீரோ?
புரிந்ததா? சுடர்ப்பெண்கள்
பகரும் இரகசியம்
புரிந்ததா?
விடிவெள்ளி
அதிகாலை மெல்லிருட்
போதுகளில்
அடிவானில் நீ
மெளனித்துக் கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு
ஊடுருவுமுந்தன்
நலிந்த ஒளிக்கீற்றில்
ஆதரவற்றதொரு சுடராய்
நீ
ஆழ்ந்திருப்பாய்
விடிவு நாடிப் போர் தொடுக்கும்
என் நாட்டைப் போல.
விடிவின் சின்னமென்று
கவி
வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின்
சிறுபோதில்
மங்களிற்காய் வாடிநிிற்கும்
உந்தன்
சோகம்
புரிகின்றது.
அதிகாலைப் போதுகளில்
சோகித்த
உந்தன்
பார்வை படுகையிலே
என் நெஞ்சகத்தே
கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின்
என் மக்களின்
பனித்த பார்வைகளில்
படர்ந்திருக்கும் வேதனைதான்
புரிகின்றது.
என்றிவர்கள் சோகங்கள்
தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில்
விடிவு பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும்
சுடர்ப்பெண்ணே!
வழிமொழிந்திடுவாய்.
இயற்கைத்தாயே!
போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.
விதியென்று
வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு
விதியறியும்
மனத்திடத்தை
மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.
தாயே! இயற்கத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...
எங்கு போனார் என்னவர்?
அன்றொரு நாள் பின்னிரவில்
ஆயுதம்தனையேந்திப்
போனவர் என்னவர் தான்.
போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே
மேலென்று போனவரை
யாரேனும் பார்த்தீரோ?
பகைவன்தன்
போர்க்களத்தே போனாரோ?
அன்றி
'பூசா'வில் தான் புதைந்தாரோ?
உட் பகையால்
உதிர்ந்தாரோ?
உடல் படுத்தே மடிந்தாரோ?
போனவரை
யாரேனும்
பார்த்துவிட்டால் சொல்வீரோ?
அன்னவரை
எண்ணியெண்ணி
அகமுடையாளிருப்பதாக.
மன்னவரின் நினைவாலே
மங்கையிவள் வாழ்வதாக...
விழி! எழு! உடைத்தெறி!
தளைகள்!தளைகள்!தளைகள்!
எங்குமே..நானாபக்கமுமே..
சுற்றிப் படர்ந்திருக்கும்
தளைகள்!தளைகள்!தளைகள்!
சுயமாகப் பேசிட,
சிந்தித்திட,
உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி
நடந்திட அவை சிறிதும்
நெகிழ்ந்து கொடுப்பதில்லை.
உள்ளும் புறமும்
நீ
உருவாக்கிய
தளைகள்.
ன்றுனை றுக்கி
நெருக்கி
உறுஞ்சிக் கிடக்கையில்..
விழி! எழு! உடைத்தெறி!
உன் கால்களை,
உன் கைகளை,
உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும்
தளைகளை
விலங்குகளை
உடைத்துத் தள்ளு!
வேரறுத்துக் கொல்லு!
ஆசை!
அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும்
ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில்
வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்
பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள்
கத்தி விடும்
நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே
பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால்
அடியேனின்
இஷ்ட்டமாகும்.
இயற்கையே போற்றி
எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து
எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும்
சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும்,
பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும்,
ன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி
கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும்
பரந்து கிடக்கும்
யற்கைத் தாயே! உனைப்
போற்றுகின்றேன். நானுனைப்
போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
ருப்பதுவே யில்லாததாய்
ல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் யற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்!நானுனைப்
போற்றுகின்றேன்.
தனிமைச் சாம்ராஜ்யத்துச்
சுதந்திரப் பறவை.
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? ல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே. சை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
கட்டுக்களற்ற உலகில்
கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில்
சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில்
பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? ல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.சை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
அதிகாலைப் பொழுதுகள்
அதிகாலைப் பொழுதுகள்
அழகானவை.பிடித்தமானவை. சில
அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில்
அழகாகக் கோடிழுக்கும்
நீர்க்காகத்தின்
நேர்த்தி கண்டு
நினைவிழந்திருக்கின்றேன்.
ன்னும் சில
அதிகாலைப் பொழுதுகளோ
அற்புதமானவை. விடாது பெய்த
ரவின்
அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில் வாற்பேத்தைகள்
கும்மாளமிடும்.
பெரும்பாலான
அதிகாலைப் பொழுதுகளில்
நகரிற்குப் படையெடுப்பர்
நம் தொழிலாள வீரர். அவர்தம்
விடிவு வேண்டி
அச்சமயங்களீல்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.
விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி;
பனிதாங்கும் புற்கள்; புட்கள்.
வையெல்லாம்
அதிகாலைப் பொழுதுகளிற்கு
அழகூட்டின. ஆயினெப்பொழதுமே
அதிகாலைப் பொழுதுகள்
அது போன்றே யிருந்ததில்லை.
சில
அதிகாலைப் பொழுதுகள்
அவலத்தைத் தந்திருக்கின்றன.
அப்பொழுதெல்லாம்
எரிந்து கன்றி யுப்பிய
உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன்.
ரவின்
அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.
ப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
ல்லை தான். அவை
அழகாகவுமில்லை.
அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன்
ஆபத்தாகக் கூடத் தெரிவதில்லை.
எத்தனை தரம் தான்
'காங்ரீட்' மரங்களையும்
கண்ணாடிப் பரப்புக்களையும்
பார்ப்பது?
ப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள்
சலிப்பைத் தருகின்றன,
போரடிக்கின்றன.
ருந்தாலும் ன்னமும்
'விடிவை' எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.
வ.ந.கிரிதரனின் ஆரம்பகாலக்
கவிதைகள் சில ..உள்ளே |