தனது
பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தற்போது தொராண்டோ, கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஈழநாடு
சிறுவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான 'பொங்கலோ பொங்கல்'
சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது சிறுவர் கால ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன்,
சிரித்திரனின் 'கண்மணி', மற்றும் சிரித்திரனில் வெளிவந்திருக்கின்றன. இவர் ஏழாம் வகுப்பில்
இருந்த பொழுது அகில இலங்கைத் தமிழ்த் தின விழாக் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையிலேயே
முதலாவதாக வந்துள்ளார். ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி,
தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது முதலாவது
சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்
பட்ட கதைகளில் ஒன்றாக வெளிவந்தது. அப்பொழுது வயது 17. அதன் பின் இவரது ஆரம்பகாலச் சிறுகதைகள்
சில ஈழநாடு, தினகரன் ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு',
'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு
மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன.
மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப்
பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும்
(இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள்
பெற்றுள்ளார். மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார்.
இதுவரையில் இவரது ஐந்து நூல்கள்
வெளிவந்துள்ளன. சிறுகதைகள் மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலை உள்ளடக்கிய தொகுதியான 'அமெரிக்கா'
தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'
ஆய்வு நூலும் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கனடாவில் 'மங்கை பதிப்பக'
வெளியீடுகளாக 'மண்ணின் குரல்' (கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல்),'எழுக அதி
மானுடா (கவிதைத் தொகுதி) ஆகியன வெளிவந்துள்ளன. 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின்
காதலும்'. 'கணங்களும் குணங்களும்' (இவை 'தாயகத்தில்' தொடராக வெளிவந்தவை), 'மண்ணின் குரல்'
ஆகியவற்றின் தொகுதி தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் தலைப்பில்
வெளிவந்துள்ளது. இவரது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்திலிருந்து வெளிவந்த
'பனியும் பனையும்' தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்'
சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் அவர்களது தமிழ்ப் பாடத்திட்டமொன்றில் சேர்க்கப் பட்டுள்ளது. 'சுலேகா.காம்'
இல் இவரது இரு சிறுகதைகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை) இடம்பெற்றுள்ளன. தொராண்டோவில்
ஒரு சில இதழ்களே வெளிவந்த 'இரவி' மற்றும் 'கல்வி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான இவர்
தொரண்டோவில் ஆரம்ப காலத்தில் 'குரல்' என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் வெளியிட்டவர்.
அத்துடன் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் 'நமது பூமி' என்றொரு செய்திக் கடிதத்தினையும் (News Letter),
'கணினி உலகம்' என்றொரு நியூஸ் லெட்டரையும் வெளியிட்டவர். இவையும் ஒரு சில இதழ்களே வெளிவந்தன.
கனடாவுக்குப்
புலம் பெயர்ந்த பின் இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள்,
கவிதைகள்,
கட்டுரைகள்
ஆகியன) 'தாயகம்', 'தேடல்', 'கணையாழி', 'துளிர்', 'சுவடுகள்', 'உயிர் நிழல்',
'ஆனந்த விகடன்', 'சுபமங்களா' மற்றும் இணைய இதழ்களான 'திண்ணை','அம்பலம்','ஆறாந்திணை',
'மானசரோவர்.காம்'....ஆகியவற்றில்
வெளிவந்திருக்கின்றன. 'ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்','பிரபஞ்ச ஆய்வு', 'திராவிடக் கட்டடக்கலை'
பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் வீரகேசரி, கணையாழி, திண்ணை போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.
'மரபும் கவிதையும்', 'வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்' ஆகிய தொடர்கள் மற்றும் 'பாரதியின்
படைப்புகள்' பற்றிய கட்டுரைகள் 'தாயகம்' இதழில் வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியம் சம்பந்தமான
பல்வேறு விமரிசனக் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. 2000ம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்'
இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார். திண்ணை, பதிவுகள் போன்றவற்றில்
நடைபெறும் விவாதங்கள் பலவற்றில் ஜீவன் கந்தையா, திண்ணை தூங்கி, டிசெதமிழன் ஜெயமோகனுட்படப்
பலருடன் தீவிரமாகப் பங்கு பற்றி வருபவர். திண்ணை மற்றும் பதிவுகளில் தீவிரமாக விவாதிக்கப்
பட்ட 'ஜெயமோகனின் விஷ்ணுபுரம்', 'மு.தளையசிங்கத்தின் நிலைப்பாடு', 'தீண்டாமை', மற்றும் பல்வேறு
இலக்கியம் சம்பந்தமான நடைபெற்ற/நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவை. அண்மைக்காலமாக இடம்பெற்று
வரும் ஆபிதீன்/சாரு நிவேதிதா பற்றிய விவாதங்களும் முக்கியமானவை. ஈழத்தின் முற்போக்கு இலக்கிய
முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி
வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள்.
பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள்
பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால்
ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும்
பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் சில வார்த்தைகள் ....
'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியனாகிய வ.ந.கிரிதரன், கனடாவில் வசித்து
வருகின்றார். தமிழில் சிறுகதை, நாவல், அறிவியல் மற்றும் இலக்கியக் கட்டுரைகள்
மற்றும் கவிதைகளென நீண்ட காலமாக எழுதிவருகின்றார். இவரது சிறுகதையான 'சொந்தக்காரன்'
தமிழகத்திலிருந்து
வெளிவந்த கணையாழி இதழின் ஈழத்துச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளது. சுஜாதா
அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய
முதலாவது அறிவியற் சிறுகதைப் போட்டியில் இவரது அறிவியற் சிறுகதையான 'நான் அவனில்லை'
வட-அமெரிக்காவுக்கான 5000 ரூபா பரிசினைப்
பெற்றுள்ளது. ஆனந்த விகடனின் பவளவிழாப் போட்டியிலும் குட்டிச் சிறுகதையான
'பல்லிக்கூடம்' ரூபா 3000 பரிசினைப் பெற்றுள்ளது.
தமிழகத்திலிருந்து வெளிவரும் 'துளிர்' சஞ்சிகையிலும் சில படைப்புகள்
வெளிவந்துள்ளன. பல்வேறு இணைய இதழ்கள் மற்றும் தமிழகம்,
கனடா, ஐரோப்பா , ஈழத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளில் / பத்திரிகைகளில் இவரது
ஆக்கங்கள் பல (சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள்,
கவிதைகள், அறிவியற் கட்டுரைகள், நாவல்கள் ஆகியன) அவ்வப்போது வெளிவந்துள்ளன.
புது டெல்கியிலிருந்து வெளியாகும் 'வடக்கு வாசல்' சஞ்சிகையின் 'வடக்குவாசல் இலக்கிய
மலர் 2008' மற்றும் சென்னையிலுள்ள ஆழி பப்ளிஷர்ஸ்
வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலர் ஆகியவற்றில் இவரது கட்டுரைகள்
வெளியாகியுள்ளன. இதுவரையில் தமிழகத்திலிருந்து கீழ்வரும்
நூல்கள் வெளியாகியுள்ளன:
1. அமெரிக்கா (சிறுகதைகளும், சிறு நாவலும்)
ஸ்நேகா பதிப்பகம் 1996
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்)
ஸ்நேகா பதிப்பகம் 1996
3. மண்ணின் குரல் (நான்கு நாவல்களின் தொகுப்புகள்)
குமரன் பப்ளிஷர்ஸ் 1998
கனடாவில் ஏற்கனவே வெளியாகிய இவரது நூல்கள்:
1. மண்ணின் குரல் (நாவலும் கட்டுரை மற்றும் கவிதைகளும்): கனடாவில் வெளியான முதலாவது
தமிழ் நாவல் இது. மான்ரியாலில் வெளியான
'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக வெளியானது.
2. எழுக அதிமானுடா! (கவிதைகள்)
இவரது 'அமெரிக்கா' ( சிறு நாவலும், சிறுகதைகளும்) மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'
ஆகிய நூல்கள் எழுத்தாளர் திருமதி லதா
ராமகிருஷ்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியத் திறனாய்வாளர்
திரு. கே.எஸ். சிவகுமாரன் 'நல்லூர் ராஜதானி' நூல் பற்றி
ஆங்கிலத்தில் மதிப்புரையொன்று எழுதியுள்ளார். இலங்கையிலிருந்து வெளியாகும் 'டெய்லி
நியூஸ்' பத்திரிகையிலும், அதன் வாராந்தப் பதிப்பாக
வெளிவந்த 'Friday' சஞ்சிகையிலும் அக்கட்டுரை வெளியாகியுள்ளது.
தெ. வெற்றிச்செல்வன் தொகுத்த 'ஏழாம்திணை' சிறப்பு மலரில் 'அமெரிக்கா
சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் வ.ந.கிரிதரன், பற்றிய விரிவான பார்வை' என்னுமொரு
கட்டுரை வெளிவந்துள்ளது.
கனடாவில் 'தேடகம்' அமைப்பினர் ஒழுங்கு செய்த 'அமெரிக்கா' பற்றிய கருத்தரங்கில்
எழுத்தாளர்களான அ.கந்தசாமியும் , ஞானம் இலம்பேட்டும்
அந்நூல் பற்றி கட்டுரைகளை வாசித்துள்ளார்கள். தமிழகத்திலிருந்து வெளியான
'புதியபார்வை' , இலங்கையிலிருந்து வெளியான சரிநிகர் பத்திரிகை
மற்றும் மறுமொழி சஞ்சிகை (கனடா) ஆகியவற்றில் அந்நூல் பற்றி மதிப்புரைகள்
வெளியாகியிருந்தன.
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய நூல் மதிப்புரைகளை மறுமொழி (கனடா), கணையாழி
(எழுதியவர் எஸ்.ராமச்சந்திரன்), ஆறாந்திணை
இணைய இதழ் (எழுதியவர் அஜயன் பாலா) ஆகியன வெளியிட்டிருந்தன.
மேலும் இவரது படைப்புகள் பற்றி தமிழகத்தில் வெளியான, சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்
கட்டுரைகள் பற்றிய தகவல்கள் சில கீழே:
1. V.N.Giritharan Seeking the Invisible Humanness in an Alien land’ A review of
the Diasporic issues as revealed through the selected Short
stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer, Dept. of English, PSG
College of Arts & Science, Coimbatore – 641 014., Tamil Nadu,
India - http://www.geotamil.com/vng/R_DHARANI_ON_VNG.htm
2. Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Stories; A
dissertation submitted to the University of Madras in partial fulfilment of
the requirements for the award of the degree of MASTER OF PHILOSOPHY IN ENGLISH
UNDER CHOICE BASED CREDIT SYSTEM By M.
Durairaj DEPARTMENT OF ENGLISH, UNIVERSITY OF MADRAS, CHENNAI-600 005
http://www.geotamil.com/vng/durairaj_on_vng.htm
3. The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of
Selected Short Stories of V.N. Giridharan Dr.Gnanaseelan
Jeyaseelan.
The Pain of Living Away– the Ethno–cultural Alienation, the Sense of Guilt, and
the “Translocal” Nationalism of the Srilankan Tamil Diaspora– A
Study of the Selected Short Stories of V.N. Giritharan, presented at the UGC
National Seminar Session on “Issues of Identity and Culture in
Recent Asian Diasporic Fiction”: Department of English, the New College,
Chennai–14, on March 13th and 14th 2007.
http://www.geotamil.com/VNG_translocalnationalism_of_SL_Dispora.pdf
மேலும் பேராசிரியர் இரா சீனிவாசனால் தமிழக்த்தில்
வெளியிடப்படும் 'புதிய பனுவல்:
An International Journal of Tamil Studies
என்னும் ஆய்வு சஞ்சிகையில் மேற்படி ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது.
http://www.indianfolklore.org/journals/index.php/Panu/issue/view/81
ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்ட இவரது சிறுகதைகள் சிலவற்றைக் கீழுள்ள இணையத்
தளத்தில் வாசிக்கலாம்:
http://www.geotamil.com/vng/vng_stories.html
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய் ஆய்வு நூலின் ஆங்கில மொழியாக்கத்தைக் கீழுள்ள
இணைப்பினில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/ctamils/nallur_b.html
வ.ந.கிரிதரனின் 27 சிறுகதைகள்:
http://www.geotamil.com/pathivukal/VNG_STORIES_27_1.htm
வ.ந.கிரிதரனின் கவிதைகள்:
http://www.geotamil.com/pathivukal/poems_VNG_ON_Iruppu.htm
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்:
http://www.geotamil.com/pathivukal/VNG_ARTICLES_18.htm
வ.ந.கிரிதரனின் மேலும் பல படைப்புகளைப் பதிவுகள் இணையத்தளத்தில் வாசிக்கலாம்:
http://www.pathivukal.com/
அமெரிக்கா நாவலின் இரண்டாவது பாகம் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக
வெளிவந்திருக்கிறது. அதற்கான இணைய
இணைப்பு: http://www.geotamil.com/pathivukal/VNG_NOVEL_AMERICA.htm
மேலும் கனடாவில்
Bibliography of Comparative Studies in Canadian, Quebec and Foreign
Literatures என்னும் இணையத்தளத்தில் எனது
ஆக்கங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய் இணையத்தளத்தைப் தெற்காசிய இலக்கியப்
பிரிவில் இணைத்திருக்கின்றார்கள். மேற்படி இணையத்தளத்தை கியுபெக்கிலுள்ள
கொன்கோர்டியா, சைமன் பிரேசர் மற்றும் சேர்புரூக் பல்கலைக்கழகங்கள் கனேடிய அரசின்
நிதி உதவிகளுடன் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சீதாக்கா!
-வ.ந.கிரிதரன் -
இன்னும்
இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர்
தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது.
மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ
ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச்
சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்..உள்ளே
இருப்பதிகாரம்
- வ.ந.கிரிதரன்
-
நிலை மண்டில ஆசிரியப்பா!
வானினை
நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை
உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத்
தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்....உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு
அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-
நவீன
பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள்
பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல.
பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச்
சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை...உள்ளே
வ.ந.கிரிதரன் (ஆங்கிலம்)...உள்ளே
மீள்பிரசுரம்:
திண்ணை.காமிலிருந்து.
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -
அண்மையில்
நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக்
கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று
அகப்பட்டது. ... மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப்
பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்
காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை
இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் முதலாவது பதிவு. காதல்,
அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை....உள்ளே
வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!
இம்முறை ஒரு பதிவுக்காக பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, ஆனந்தவிகடன்,
மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது
சிறுகதைகளை வாசகர்களுக்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இதில் பல சிறுகதைகள்
புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும்
சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. -...உள்ளே
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்!
1. அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்! -வ.ந.கிரிதரன்-
அவ்வப்போது
திண்ணை, பதிவுகள், ஆறாந்திணை, தேடல், சுபமங்களா, கணையாழி, வீரகேசரி,
தாயகம் போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில்
வெளிவந்த கட்டுரைகளில் பதினெட்டினையும், நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
ஆய்வினையும் ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்யுமொரு முயற்சியிது.
இங்குள்ள கட்டுரைகளின் பொருள் அறிவியல், இலக்கியம், வரலாறு,
கட்டடக்கலை, விமரிசனமெனப் பரந்தது. பயனுள்ளதாக விருக்குமென்பதென்
கருத்து..உள்ளே
வ.ந.கிரிதரன் கவிதைகள் 32...உள்ளே
நாவல்: அமெரிக்கா.....உள்ளே
Fractured Self: A Study of V.N.
Giritharan’s Selected Short Stories!
-
A dissertation submitted to the University of Madras in partial
fulfilment of the requirements for the award of the degree of Master
of Philosophy in English Under Choice Based Credit System By M.
Durairaj
Department of English, University of Madras...Read
More
'Seeking
The Invisible Humanness in an Alien Land’
A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore – 641
014., Tamil Nadu, India...Read
More இவரது நூல்கள்....
|
|