பதிவுகள் முகப்பு

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (1 - 3)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


1

பேராசிரியர் நுஃமான் அவர்கள், மஹாகவி குறித்து 1984இல் எழுதிய, தனது அறிமுகத்தில், அவரது உள்ளடக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21

இறுதியில் குறிப்பார்:

“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம் எடுத்துக்காட்ட
முடியும்… ஆயின் அவை புறநடைகளே. புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக் கொண்டு ஒரு கவிஞனை நாம் மதிப்பீட
வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்கொண்டேன்”. ப-45

மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.

“புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும் விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.

அதாவது, ஏன் இப்படி, ஒரே வீச்சில் 'ஒதுக்கி விடுவும் முடியாது' என்று கூறும் அதே கணத்தில் 'ஒதுக்கியும் விட்டேன்' என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.

ஆனால், சற்று நிதானித்துப் பார்க்கும் போது, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடயம்.

மேலும் படிக்க ...

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
சமூகம்
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் லீனாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியும், தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அயல்நாடுகளிலிருந்து வரும் அழைப்பை லீனா மணி மேகலை ஏற்க முடியாமல் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தும் சக கவிஞர் லீனாவின் படைப்பெழுச்சிக்குப் பலவகையிலும் முட்டுக்கட்டை யிட்டுக்கொண்டிருக்கிறார்.

மான நஷ்ட வழக்கு போட யாருக்கும் உரிமையிருக்கிறது. அதே சமயம், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் தன் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையா, பொய்யா என்று.

அப்படி ME TOO இயக்கப் பின்னணியில் குற்றம் சுமத்தப் பட்ட ஆண்களில் சிலர் பல வருடங்கள் முன்பு தாம் அப்படி நடந்துகொண்டது உண்மை தானென்றும் அதற்காக வெட்கப்படுவதாகவும் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

ME TOO இயக்கப் பின்புலத்தில் ஓர் ஆண் மீது ஒரு பெண் பொய்யாக குற்றம் சுமத்த் வாய்ப்பிருக்கிறது என்றாலும் ஒரு பெண் தன் பாதிப்பு குறித்துப் பேசும்போது அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய்யுரைக்கிறாரா என்பது நம் உள்ளுணர்வுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.

பொய்யாக ஒருவர் மீது பழிசுமத்தி அதில் பிராபல்யம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நபரை லீனா குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. தவிர, இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அவர் வேறெப்போதும் வேறெந்த நபர் மீதும் சுமத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அரசியல்
23 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நடந்த இந்தத் தேர்தல் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 6மணி வரை முற்கூட்டியே வாக்களிக்கும் வசதிகளை தேர்தல் கனடா ஏற்பாடு செய்திருந்தது. அதனால் முற்கூட்டியே வாக்களித்தவர் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இதைவிட சுமார் ஒரு மில்லியன் மக்கள் தபால் மூலமும் வாக்களித்திருக்கிறார்கள். 2019 ஆண்டு நடந்த தேர்தலைவிட இம்முறை அதிகமாக வாக்களித்திருந்தனர். இம்முறை சுமார் 37 மில்லியன் வாக்காளரின் பெயர்கள் பட்டியலில் பதிவாகி இருந்தது. கோவிட் - 19 காரணமாக கடைசிவரை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக முற்கூட்டியே அதிக மக்கள் வாக்களித்திருந்தனர். இறுதி நாளான 20 ஆம் திகதி மாலை 9:30 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும், தனியாக அரசமைப்பதற்குக் குறைந்தது 170 ஆசனங்கள் தேவை. முதலாவது தேர்தல் முடிவு சுமார் 7:10 மணியளவில் வெளிவந்தபோது லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால், முடிவுகளில் சிலசமயம் மாற்றங்கள் ஏற்படலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம்! - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -

விவரங்கள்
- முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்ப10ர் 635 802 -
ஆய்வு
21 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
‘வற்றிப் போன உடலோடு, வெற்றுக் கனவுகளை விழியோரம் சுமந்து கொண்டு சுற்றித் திரியும் கோடிக்கணக்கான ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் கவிஞனே மக்கள் கவிஞனாக மதிக்கப்படுவான். இவ்வாறு மெலிந்தவர்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது எல்லாருக்கும் இயலக் கூடியதன்று. திட்டமிட்டுச் செயலாற்றும் ஒருவரால் மட்டுமே செயற்கரிய செயலை செய்ய முடியும். இதைச் செய்பவர்களின் போலிச்சாயம் காலப் போக்கில் கரைந்துவிடும். அருவியிலிருந்து பாயும் நீரைப்போல் அகத்திலிருந்து மனித உயிர் நேயம் தன்னியல்பாகப் பெருக வேண்டும். உதைத்தவனுக்குக் கால் வலிக்குமே என்று கவலைப்படாமல் உதைபட்டவனுக்கு உடம்பிலும் மனதிலும் காயம்பட்டு விட்டதே என்று கவலைப்படுவதே மனித உயிர் நேயம் ஆகும் அத்தகு மனிதநேயம் பாரதியின் ஊனும் உயிரும் கலந்த பாக்களுக்குள் இழையோடுகிறது.

    சமூக விடுதலையோடு, அடிமைப்பட்ட இந்தியத் தாய்த்திருநாட்டின் விடுதலையை பாடிப் பறந்த குயில் பாரதியார் ஆவார். அவருடைய கவிதைகளில் மணம்வீசும் மானித உயிர் நேயத்தை காண்பதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.

மனிதம் - சொல்விளக்கம்
மானுடநேயம், மானுடம், மனிதம் என்று மனிதநேயத்தைக் குறிப்பிடுவார்கள். அன்புதான் மானுட வளர்ச்சியின் ஆணிவேர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் பண்பாடு தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காகவே வாழ்ந்து வரலாறாகி மிளிர்பவர்கள் பலர். சமயங்கள் பற்பல தோன்றிய தமிழ் நிலத்தில், யாவரும் கேளிர் என்ற நன்னெறியும் தழைத்து விளங்கியது.

    ‘மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்றிருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடன் என்றும் ஆகியிருத்தல் வேண்டும்” (டாக்டர் அ. ஜெகந்நாதன், பாரதிதாசனில் மார்க்சியம், ப.48)என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்” நூலில் கூறியதை சி.இராகவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் ‘மனிதம்” ஆக மாறி மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பர்.

மேலும் படிக்க ...

முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் அனுபவமும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதோர் ஆய்வு நூல் முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்'.
இதுவரை நான் வாசித்த புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியான ஆய்வு நூல்களில் சிறந்த நூலாக இந்நூலையே கருதுகின்றேன். ஏன் கருதுகின்றேனென்பதற்கான காரணத்தை இப்பதிவை முழுமையாக வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' - வ.ந.கி -

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
20 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எனது 'அமெரிக்கா' , சிறுநாவலின் திருத்திய பதிப்பு தனி நூலாக 2019இல் இலங்கையிலிருந்து மகுடம் வெளியீடாக வெளிவந்தது. இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் நியூயோர்க் மாகநகரத்தின் புரூக்லீன் தடுப்பு முகாம் அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரெயொரு தமிழ் நாவல்.இதன் முதற்பதிப்பு தமிழகத்தின் ஸ்நேகா மற்றும் கனடாவின் மங்கை பதிப்பகங்களின் இணை வெளியீடாக வெளியான 'அமெரிக்கா' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருந்தது. அது வெளிவந்த ஆண்டு 1996.

மேலும் படிக்க ...

பேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் அ.ராமசாமியின்  'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி, இணைய  இதழ்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைப்பற்றி அவர் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

1. "தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன. எழுதியவர்களின் உடல்கள் புலம்பெயர் நாடுகளில் - ஐரோப்பிய/ஆஸ்திரேலிய/ கனடிய நாடுகள் - ஏதாவதொன்றில் இருந்தபோதிலும் மனம் முழுவதும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பரப்பிலேயே இருந்தன."

2."புலம்பெயர் நாடுகளிலிருந்து அச்சிடப்பெற்ற சிற்றிதழ்களிலும், அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகளின் தொகைநூல்களிலும் வந்த கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன. "

இவற்றில் முதற் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன.' என்னும் கூற்றினையும், இரண்டாவது கூற்றிலுள்ள 'கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன' என்னும் கூற்றினையும் என்னால் ஏற்க முடியவில்லை. இம்முடிவுகளுக்கு அவர்  எவ்விதம் வந்தார் என்பதற்குரிய ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு அவர் ஆரம்பகாலப் படைப்புகளை உதாரணங்களாக முன் வைத்து ஏன் அவை 'வாழிடத்தேச அடையாளங்கள்' எவையுமில்லாமல் வெளிவந்தன ' என்னும் அவரது கூற்றை நிரூபிக்க வேண்டும்.

மேலும் படிக்க ...

என்னுரை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்மாத இறுதிக்குள் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது சிறுகதைத் தொகுப்பான 'கட்டக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்புக்காக நான் எழுதிய என்னுரையினைக் கீழே தருகின்றேன்.

"இத்தொகுப்பிலுள்ள சிறகதைகளில் இறுதியிலமைந்துள்ள சுமணதாஸ் பாஸ் குறுநாவலைத் தவிர ஏனையவை கனடாவிலுள்ள 'டொராண்டோ' மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை.  உண்மையில் சுமணதாஸ் பாஸ் குறுநாவல் கூடப் புகலிடத் தமிழ் அகதி ஒருவனின் நனவிடை தோய்தலாகத்தானமைந்துள்ளது. அவ்வகையில் அது கூடப் புகலிட அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் ஒருவகையில்  கூறலாம். ஏனென்றால் இழந்த மண்ணில் கழித்த நினைவுகளின்  நனவிடை தோய்தல் கூட புகலிடத் தமிழ் அகதி ஒருவரின் அனுபவங்களில் உள்ளடங்கிய ஒன்றுதான். மேற்கு நாடுகளை நோக்கிப் புகலிடம் நாடிச் சென்ற இலங்கைத்தமிழ் அகதிகளின் முதலாவது தலைமுறையினரின் அனுபவங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் அனுபவங்களிலிருந்து நிச்சயம் வேறானவை.   ஏனெனில் சொந்த மண்ணையிழந்து, உறவுகளை இழந்து, நண்பர்களை இழந்து, தம்மையே , தம் உழைப்பையே நம்பிப் புகலிடம் நாடி, புதிய நாடொன்றில் காலூன்ற முயற்சி செய்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்பல. அப்பொழுது ஏற்படும் அனுபவங்களும் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டவை. தனித்துவம் மிக்கவை. அவ்வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. அதனைத்தான் இத்தொகுப்புக் கதைகள் செய்கின்றன.

இங்குள்ள  கதைகள் அனைத்துமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அல்லது நான் நேரில் பார்த்தறிந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை. உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'கிழவனும், கடலும்' நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான 'புளூ மார்லின்' மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது 'கிழவனும், கடலும்' நாவலின் அடிப்படை.

மேலும் படிக்க ...

“ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்ளை ஆக்கிக்கொள்வார்கள்” - சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர்! - செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
Administrator
இலக்கியம்
17 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலிக் குறிப்பு

நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று நாம் அன்பாக அழைப்பவர் எம்முடன் இனி இல்லை என்ற துக்கம் நெஞ்சழிக்கிறது.

1996ஆம் ஆண்டு சேவியரை முதலில் சந்தித்தேன். பின்னர் கண்டியிலிருந்து திருமலை நகருக்கான என் பயணங்களில் நான் சந்திக்கும் முதல் ‘மனிதராக’ சேவியர் இருந்தார். பல சந்திப்பு வேளைகளில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தணிகாசலம் அவர்களும் உடனிருந்தார். இலக்கிய உரையாடலைக் காழ்ப்புணர்வுகளற்றுச் சுவாரசியமாகவும் ஆதாரங்களுடனும் பேசுவதில் சேவியர் ஒரு விண்ணர். கேட்பவர் சலிக்காது உரையாடும் சுவையூறிய மொழியாளர், அவர். சமூக அக்கறையை, சமூக அடக்குமுறை வரலாற்றைப் பேசுகையில் அவர் வெளிப்படுத்தும் மொழி அவர் அனுபவித்த கொடுந்துயரங்களின் மொழி.

மறுமலர்ச்சி எழுத்துக்களைத் தேடி அலைந்த நாட்களில், அவர், தனது அலுவலகம் வெளியிட்ட அதுவும் தனக்கென்றே தனது சொந்தச் சேகரிப்பில் வைத்திருந்த மறுமலர்ச்சிக் கதைகள் பிரதியையும் வேறு சில நூல்களையும் எனக்கென்றே கையளித்தார்.

ஒரு சமூகப் போராளியாக அவரது வகிபாகம் முக்கியமானது. எழுத்தும் பேச்சும் சமூகக் கடமை என்று வாழ்ந்தவர். அக்கடமை அவருள் பேராவலுடன் பிரவாகித்துக்கொண்டே இருந்தது. சாதிசார் உரையாடல்களில் நேர்படப் பேசவும் எழுதவும்தான் சேவியருக்குத் தெரியும்.

சேவியர் அங்கிள் இனி எம்மோடு இல்லை.

தொலைபேசிக்கு ஓர் இலக்கத்தின் அழைப்பு இனி வராது போயிற்று.

அவருக்கு என் அஞ்சலி.

மேலும் படிக்க ...

பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் விமர்சன அரங்கு! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
17 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளீவான, உறுதியான  கருத்துகளைக் கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக அவராற்றிய இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல்  செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர்  எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: கண்கவர் கலக்சிகள் - பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
14 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

'ஜீவநதி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதைத் தொகுப்பு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
13 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பல வருடங்களுக்குப் பின்னர் எனது சிறுகதைத்தொகுதியொன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரவுள்ளது. ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாகக் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும் தலைப்பில் எனது 27 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதி புரட்டாதி 25 அன்று வெளிவரவுள்ளது. நான் நினைத்தவாறு தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிலையில் வெளிவருகின்றது. இதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் பரணீதரனுக்கும் நன்றி.

மேலும் படிக்க ...

மட்டக்களப்பு 'கதிரவன்' வீதி நாடக அனுபவப் பகிர்வு! - தகவல்: எஸ்.ரி.குமரன் -

விவரங்கள்
- தகவல்: எஸ்.ரி.குமரன் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க ...

ஞானத்தமிழ் மன்றம்: பாடலும் தேடலும் - என்றுமுள்ள செந்தமிழ்! - தகவல்: தேசபாரதி வே.இராசலிங்கம் -

விவரங்கள்
்! - தகவல்: தேசபாரதி வே.இராசலிங்கம் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருக்குறளில் கல்வியியற் கோட்பாட்டுச் சிந்தனைகள் பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கம் -3! - தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விதை குழுமத்தின் செப்ரம்பர் மாத நிகழ்வுகள்! - விதை குழுமம் -

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், விதை குழுமம் செப்ரம்பர் மாதத்தில் 12, 19, 26 ஆகிய திகதிகளில் தனது நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றது.  இந்நிகழ்வுகளில் நீங்களும் கலந்துகொள்வதோடு ஆர்வமுள்ளாவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நிகழ்வு 01
அறிமுகமும் உரையாடலும் - நிகழ்வு 03

நூலகங்கள் என்பவை வெறும் கட்டடங்களும் புத்தகங்களும் அல்ல, அவை சமூகத்தின் உயிர்ப்பான ஓர் அங்கமாகவும் சமூக முன்னேற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாகவும் இருப்பன என்கிற புரிதலை அறிவுறுத்திவரும் மிகச்சிலரில் நூலியலாளர் என். செல்வராஜா முக்கியமான ஒருவர். கிராமிய நூலகங்கள் குறித்தும் சிறுவர் நூலகங்களின் உருவாக்கம் குறித்தும், பட்டியலாக்கம், ஆவணமாக்கல் செயற்பாடுகள், நூலகர்களுக்கான வழிகாட்டல்கள் என்பவை சார்ந்ததுமாக அவரது செயற்பாடுகள் நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்பவை. ஈழத்து நூல்களின் விபரப்பட்டியலான நூல் தேட்டத்தின் 15வது தொகுதி இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் வெளிவந்திருக்கின்றது.

'எங்கட புத்தகங்கள்' வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் ”அறிமுகமும் உரையாடலும்” தொடரின் மூன்றாவது நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

மேலும் படிக்க ...

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விவரங்கள்
Administrator
கவிதை
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீலகண்டக் கவி பாரதி

சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக
சொல்லாத எதையெல்லாம் சுமந்து போனாயோ
சுப்ரமண்ய பாரதீ…
சொப்பனவாழ்க்கையின் சூட்சுமத்தை இப்பவும்
பாடிக்கொண்டிருப்பாயோ?
செத்து முடித்த பின்னான இத்தனை வருடங்களில்
இன்னொரு சொர்க்கம் சமைத்திருப்பாயோ ?
தனியொருவனுக்குணவிலாதுபோவதறியா
பிரபஞ்சமதில் உனக்கு முன்னும் பின்னுமான
வரகவிகளோடு
இறக்கை விரித்துப் பறந்தவாறே
இலக்கியம் பேசிக்கொண்டிருப்பாயோ?
இயற்றிக்கொண்டிருப்பாயோ நந்தமிழில்
சுந்தரக்கவிதைகளை?
அந்திப்பொழுது அங்கு நீலார்ப்பணமாயிருக்குமோ?
பட்டுக்கருநீலப் புடவை பதித்த நல்வயிரமாய
நட்சத்திரங்களைத் தொட்டுணர முடியுமோ?
நாலுமே பலித்திட வரமருள இயலுமானால்
நல்குவா யதை நாங்கள் கேட்கத் தயங்கினாலும்.
நினைவுநாளில் மறுபடியும் பிறந்துகொண்டிருக்கும்

நீயாகி நானாகி அவராகி அதுவாகி வானாகி
மண்ணாகி _
வாழ்வாங்கு வாழட்டும் வாழ்வு.
வெந்துமடியட்டும் ஏற்றத்தாழ்வு..


அமரத்துவம்

”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்

மேலும் படிக்க ...

திருப்பூர்இலக்கியவிருது 2021 ( 11ஆம்ஆண்டு ) - தகவல்: நடேசன் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நிகழ்வுகள்
12 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.  வருடம் தோறும் வழங்கப்படும் திருப்பூர் இலக்கிய விருது வழங்கும் விழா இவ்வாண்டு சென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும்.  இவ்வாண்டு முதல் கொங்கு முன்னோடி எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் நினைவுவிருது வழங்கப்படும். இவ்விருது இவ்வாண்டு‘தாளடி’நாவல், எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாநடைபெறும் தேதி,  இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :
 அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி.

பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் :
 லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன்.

மேலும் படிக்க ...

கனடா அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
11 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தபோது, அதிகமானவர்கள் கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில்தான் அதிக தமிழர்கள் வாழ்வதால், இவர்கள் முதலில் தங்கள் இருப்பை உறுதி செய்தபின், பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் தங்களை உட்படுத்திக் கொண்டனர். எந்த நாடாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் நிலை அந்த நாட்டு அரசைச் சார்ந்திருப்பதால், அரசியலில் ஈடுபாடு கொண்ட சிலர் தேர்தல் மூலம் பதவிகளுக்காகப் போட்டி போட முன்வந்தனர். பிறர் நலன் கருதிப் போட்டி போடுவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. பதவிக்கு வந்தபின் அரசியல் வாதிகள் எப்படி மாறுவார்கள் என்பது சந்தர்ப்ப, சூழ்நிலையைப் பொறுத்தது. கனடாவில் கோவிட் பேரிடர் காரணமாக முக்கிய பிரச்சனைகளாக சுகாதாரவசதி, வாழ்க்கைச் செலவு, வருமானவரி, பொருளாதாரம், வீட்டுவசதி, முதியோர் பிரச்சனை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பிரச்சனைகளை மக்கள் இப்போது எதிர் கொள்கின்றார்கள்.

அரசியல்சட்ட முடியாட்சி முறையை அடிப்படையாக கொண்ட கனடா நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு நாடாகும். கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவையாவன முதலாவது நடுவண் அரசு, இரண்டாவது மாகாண, ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், முன்றாவது நகராட்சி, ஊர் அரசுகள் ஆகும். இதைவிட கல்வி பற்றி முடிவெடுக்கும் கல்விச் சபைகளும் இருக்கின்றன. அதன் அங்கத்தவர்கள் தெரிவுக்கும் அவ்வப்பகுதிகளில் தேர்தல் உண்டு. அடிப்படைக் கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படுகின்றன. மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே செயல்படுத்துகின்றது. கல்விச்சபைகள் தமிழ் மொழியை ஒரு பாடமாக அங்கீகரித்து இருக்கின்றன. சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தமிழ் மொழியையும் ஒரு பாடமாக விரும்பியவர்கள் எடுக்கலாம். இதைவிட பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குத் தேவையான ‘கிறடிட்’ எடுப்பதற்கும் தமிழ் மொழியை இங்கே ஒரு பாடமாக எடுக்கமுடியும்.

மேலும் படிக்க ...

எனது இரு இணைப்புகள் - தங்கள் பார்வைக்கு! - பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிப்ரமணியன் -
கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
11 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் நா.சுப்பிர்மணியனின் தமிழ் இலக்கியம் பற்றிய பயனுள்ள உரைகள்!

ரொறன்ரோத் தமிழ்ச்சங்கத்தில் அண்மையி ல் நான் நிகழ்த்திய இரு உரைகளின் பதிவுகளை  இவ்வஞ்சலூடாகத் தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இவற்றிலொன்று  சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் ஆகியவற்றைப்பற்றியது. மற்றது பேராசிரியர் பெ.  மாதையன் அவர்களது நூல் பற்றியது.

அன்புடன்
நா. சுப்பிரமணியன்

மேலும் படிக்க ...

செப்டெம்பர் 11 பாரதியார் நினைவு தினம். மகாகவி பாரதி மறைந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.

அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.

பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.

வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.

மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.....
அச்சமில்லை... அச்சமில்லை....
மனதிலுறுதி வேண்டும்...   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.

மேலும் படிக்க ...

பாரதியை நினைவு கூர்வோம் - 3: பாரதி ஒரு மார்க்சியவாதியா? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 - செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு தினம் -
 
அக்டோபர் புரட்சியைப்பற்றிய பாடிய முதலாவது தமிழ்க் கவிஞனென்று பாரதியைப் போற்றுவர். அதற்கு அவரது 'ஆகாவென்றெழுந்தது பார் யுகப்பரட்சி' என்னும் அவரது 'புதிய ருஷியா' கவிதையின் வரியினை உதாரணம் காட்டுவர். இக்கவிதையை வாசித்தபோது குறிப்பாக மார்க்சிய நூல்களை வாசித்த பின்பு மீண்டும் வாசித்தபோது எனக்கொரு சந்தேகமேற்பட்டது. உண்மையிலேயே பாரதியார் மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்த பின்னர் இவ்விதம் எழுதினாரா அல்லது பொதுவாக அறிந்தவற்றின் அடிப்படையில் இவ்விதம் எழுதினாரா என்பதுதான் அச்சந்தேகம்.
 
அதன் பின்னர் எனக்குக் கிடைத்த அவரது கட்டுரைத்தொகுதிகளை வாசித்தபோது அவர் இங்கிலாந்திலிருந்து வெளியான 'மாஞ்செஸ்டர் கார்டியன்' பத்திரிகையில் வெளியான ருசியாவின் கம்யூனிச அரசு பற்றிய கட்டுரைகளை வாசித்திருப்பது தெரிந்தது. அவற்றின் அடிப்படையில் அவர் மார்க்சியத்தைப்பற்றிய தனக்குத்தானே ஏற்படுத்திய தர்க்கங்களைத் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியதும் புரிந்தது. அக்கட்டுரைகளில் அவர் கம்யூனிசத்தின் நன்மை தீமைகளைப்பற்றி தர்க்கித்திருப்பதைக் கண்டேன். அக்காலகட்டத்தில் அவரது இள வயதில் பாரதியார் இவ்விதம் ருஷிய அமைப்பு பற்றிய தேடலைத் தனக்குள் நடத்தியது எனக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பினை ஏற்படுத்தியது. அவரது கம்யூனிசம் பற்றிய கருத்துகளை உள்ளடக்கி கட்டுரைகள் பலவற்றை எனது குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த 'சி.ஆர்.கொப்பி'களில் எழுதி வைத்திருந்தேன். அவற்றில் அவரது பெண் விடுதலை பற்றிய கருத்துகளை, புதிய ருஷியா பற்றிய கருத்துகளையெல்லாம் எழுதி வைத்தேன். இவற்றை எழுதிய காலகட்டம் 82-83 காலகட்டம்.
 
பின்னர் பல வருடங்களின் பின்னர் அவற்றில் ஒரு கட்டுரையான 'பாரதி மார்ச்கியவாதியா' என்னும் கட்டுரையைக் கனடாவில் வெளியான 'தேடல்' சஞ்சிகையில் எழுதினேன். அக்கட்டுரை திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியானது. அக்கட்டுரையினை மீண்டும் இங்கு அவரது நினைவு தினத்தையொட்டிய நினைவு கூரற் கட்டுரையாகப் பதிவு செய்கின்றேன்.
 
உண்மையில் தனது குறுகிய கால இருப்பில் அவர் வெளிப்படுத்திய தேடல்கள் மிகுந்த சிந்தனைகள் எனக்கு எப்போதுமே பிரமிப்பைத் தருவன. அவரது கருத்துகளில் வெளிப்படும் சரி, பிழைகள் முக்கியமல்ல. ஆனால் அவர் அவற்றைப்பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்தித்துள்ளார். அவற்றைத் தனக்குள் சீர், தூக்கிப் பார்த்துத் தர்க்கித்திருப்பார். அதுதான் முக்கியம். அதனால்தான் சூழலை மீறிச் சிந்தித்த அம்மகா கவிஞனின் சிந்தனைகள் இன்றும் எம்மை ஆட்கொண்டிருக்கின்றன. எம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
மேலும் படிக்க ...

பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
10 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*  பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11.  அதனையொட்டி வெளியாகும் கட்டுரை!

புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான்  பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும் , மானமும், ரோஷமும் , உணர்ச்சியும் , அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும்  அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

   எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19 ம் நூற்றாண்டில் காணப்பட்ட  இலக்கியத்துக்கும் 20 ம் நூற்றாண்டில் காணப்பட்ட  இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.

   அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே  அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் - இந்தியரின் - பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

மேலும் படிக்க ...

பாரதியை நினைவு கூர்வோம்-2: பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
எண்பதுகளில் மார்க்சிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தபொழுது என் முன்னால் புதியதோர் உலகம் விரிந்தது. முதன் முதலாக மானுடரின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினையை மார்க்சிய சிந்தனைகளூடு நோக்க, அணுக முடிந்தது. மார்க்சிய நூல்களில் விவாதிக்கப்பட்டிருந்த பொருளியல்வாத, கருத்துமுதல்வாதத் தர்க்கங்கள் மேலும் சிந்தனையை விரிவு படுத்தின. இவ்விதமானதொரு சூழலில் அதுவரை அறிந்திருந்த என் அபிமானக் கவி பாரதியை அணுகியபோது என் கவனத்தை ஈர்த்த அவரது கவிதை 'நிற்பதுவே! நடப்பதுவே!' என்று ஆரம்பிக்கும் அவரது 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையே.
 
அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தபோது அக்கவிதையில் பாரதி கருத்துமுதல்வாதமா? அல்லது பொருள்முதல்வாதமா ? எது உண்மை? என்பதைத் தர்க்கித்திருப்பது புரிந்தது. பாரதி கவிதையின் இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கும் , பொருள்முதல்வாதத்துக்குமிடையில் ஒருவித சமரசத்தை ஏற்படுத்தி பொருளும் சக்தியும் ஒன்றே என்று முடிப்பதை உணர முடிந்தது. நவீன இயற்பியற் கோட்பாடுகளும் அதனைத்தானே கூறுகின்றன. ஐன்ஸ்டைனின் பொருளுக்கும் சக்திக்குமிடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும் பிரபலமான சூத்திரமும் அதனைத்தானே கூறுகின்றது என்று தோன்றியது.
 
இந்நிலையில் அக்கருத்தை முன்வைத்து 'பாரதி பொருளியல்வாதியா? அல்லது கருத்துமுதல்வாதியா' என்றொரு கட்டுரையினை 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க ஆண்டிதழான 'நுட்பம்' சஞ்சிகைக்காக எழுதினேன். அப்பொழுது அச்சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்தவர் நண்பர் பிறேமச்சந்திரா.
 
பின்னர் பல வருடங்கள் கடந்து கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் அக்கட்டுரை என்னிடமில்லாததால் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் அதே கருத்தினை மையமாக வைத்துக் கட்டுரையொன்றினை எழுதினேன். அக்கட்டுரை பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகின.
மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. குறுநாவல்: வேட்டை! - கடல்புத்திரன் -
  2. பாரதியை நினைவு கூர்வோம் -1. - வ.ந.கிரிதரன் -
  3. சிறுகதை: நட்பில் மலர்ந்த துணைமலராரம். - குரு அரவிந்தன் -
  4. நினைவில் வாழும் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்! - முருகபூபதி -
  5. அஞ்சலி: கவிஞர் புலமைப்பித்தன் மறைவு!
  6. தொடர் நாவல்: கலிங்கு! - தேவகாந்தன் -
  7. தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..! -  - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
  8. இணையவழிக் கல்வி வரமா? சாபமா? - முனைவர் பா.பிரபு. தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் , கோயம்புத்தூர் - 28 -  
  9. விவ(சாயம்) - முனைவர். பொ.ஜெயப்பிரகாசம், கோவை - 641107 -
  10. அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா நினைவாக..
  11. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: பேசுநூல்: உண்மை ஒளிர்க என்று பாடவோ? ( பா.விசாலம் அவர்களின் நாவல் )
  12. அஞ்சலி: உதயகுமாரி பரமலிங்கம் (இலண்டன் நிலா) மறைவு! - பதிவுகள்.காம் -
  13. புத்தாக்க அரங்க இயக்கம் வழங்கும் அரங்கக் கதையாடல் 09: மட்டக்களப்பு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளும் இராம நாடகக் கூத்தின் ஆற்றுகை அனுபவப் பகிர்வும்!
  14. கவிதை: மதில் மேல் பூனைகள்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 100 / 115
  • முதல்
  • முந்தைய
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • அடுத்த
  • கடைசி