கலை,இலக்கியப் பங்களிப்பு மிக்க 'நுட்பம்' சஞ்சிகை பற்றி.... - வ.ந.கி -

முதலாவது நுட்பம் இதழ் 1968இல் வெளியானதை நுட்பம் 1970 இதழில் வெளியான கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தலைவர் மாவை. நித்தியானந்தனின் 'தலைவரின் செய்தி'யிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இரண்டாவது நுட்பம் 1969இல் வெளிவரவில்லையென்பதையும், 1970இல் வெளியான நுட்பம் இதழே இரண்டாவது இதழ் என்பதையும் மேற்படி தலைவரின் செய்தி தெரிவிக்கின்றது. 1971 வரை கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியாக இயங்கிக்கொண்டிருந்த இக் கல்வி நிறுவனம் 1972 தொடக்கம் -1977 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்குகின்றது. 1978இலிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகமாகச் சுயாதீனமாக இயங்கத்தொடங்குகின்றது. 1972 வரை தமிழ் மன்றம் என்னும் பெயரில் இயங்கிய தமிழ் மாணவர்களின் சங்கம் 1973இலிருந்து தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது.


முன்னுரை



ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள். அந்த விதி, சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி விளையாடியது. 1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை, வீரகேசரி பத்திரிகை நிறுவனம், முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது. இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வனையே சாரும். இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.





உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.
குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.
30/4/23, காலை 10 மணி ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற பதினைந்தாவது குறும்பட விருது விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார். 


அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின் 43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.



இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது. 
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









