தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:
இன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது? ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது. திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.