கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது பிழை என்று தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலவே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன.

ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் இனம் என்பதிலேயே பேதம் காணப்படுகின்றது. இயற்கையிலேயே இத்தனை காலமும் இருந்த திருமண நடைமுறைகளுடன் வாழுகின்றவர்கள் அப்படியே வாழட்டும். நாம் வேற மாதிரி என்பவர்கள் யார்?

உலகத்தில் 20 வீதமானவர்கள் ஆணுக்குப் பெண் தன்மையும், பெண்ணுக்கு ஆண் தன்மையும் உள்ள மாறுபட்ட குணமுள்ளவர்களாகத்தான் பிறக்கின்றார்கள். இவ்வாறு  பிறப்பது இயற்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும், இது இயற்கைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இந்த 20 ஐயும் தாண்டி வேறு விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்களும் உண்டு என்பதையே இக்கட்டுரை ஆராய்கின்றது.

இப்போது LGBTQ என்பதை அடிக்கடி நாங்கள் காதுகளால் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். Rainbow society  என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றுகூடலும் விழாக்களும் நடத்தப்படுகின்றன. இது இன்று நேற்று தோன்றியது என்று நாம் எண்ணி விடமுடியாது. இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற காரணத்தால், எல்லோராலும் நேரடியாக உலகத்தின் மூலைமுடுக்கெங்கும் அறியக்கூடியதாக இருப்பதனால்  LGBTQ என்பது பலராலும் அறியக்கூடியதாக இருக்கின்றது. நான் இது பற்றிச் சரி, பிழை என்றெல்லாம் வாதிடும் நிலையில் இல்லை.

இயற்கையாக ஏற்படும் மனித உணர்வுகளை அடக்கி வைப்பதை விடுத்து அந்த உணர்வுகளுடனேயே மனிதர்களை வாழ விடுகின்ற போது அவன் வாழுகின்ற ஒரு வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகின்றது. உலக உயிர்கள் அனைத்தும் காதல் அல்லது காமத்துக்குள்ளேதான் அடங்கிக் கிடக்கின்றன. காமம் இல்லாது குடும்பமும் இல்லை. உலக மக்களும் இல்லை. இந்தக் காமத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவதற்காகவே திருமணம் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இதனை உடைத்தெறியும் இயக்கமாக இந்த  LGBTQ2s  உருவாகியுள்ளது. எல்லோரும் இந்த பாலின மாற்றத்துக்குள் உற்படுகின்றார்களா? என்றால், இல்லை. ஆண், பெண் என்னும் குடும்ப அமைப்புக்குள் தம்முடைய வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை.

இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

L என்றால் Lesbian:

பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது, காமம் கொள்வது Lesbian எனப்படுகின்றது. கி.மு 610 ஆம் ஆண்டு பிறந்து கி.மு. 580 ஆண்டு இறந்த சஃப்போ  (Sappho) என்ற கிரேக்கப் பெண் கவிஞரே இந்தப் பெயர் வருவதற்குக் காரணமாவார். இவர் பிறந்த இடம் Lesbian  எனப்படும் ஒரு தீவு.  இவர் தன்னுடைய மன உணர்வுகளைக் கவிதைகளாக எழுதுவார். இவரைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. நண்பர்கள், குடும்பம் பற்றியே இவருடைய கவிதைகள் அமைந்திருந்தன. இக்கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறு வாழ்கின்ற மக்கள் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றவர்கள் என்றும் கூறியதுடன் பெண்களே பெண்களைக் காம நோக்கத்துடன் அணுகினால், அவர்களை லெஸ்பியன் என்ற பெயரை வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகளில் அந்தரக் கன்னியின் குரலாக வரும் மின்னும் நாக்கு என்னும் இக்கவிதை

உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின் - கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப்
பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி

இதேபோல கவிஞர் மாலினி ஜீவரெத்தினம் எழுதிய

பேரழகே அழைத்தாயே காதலினாலே திளைத்தேனே.
நிலைக்கண்ணாடி போல எனை முழுதாக்கிக் காட்டும்.
அழகாக்கிடும் உயிர் நீதான்
ஒரு தேவதையைப் போலே
உயிர் பத்தி எரியுதே பாதகத்தி உன்னால
இது தொலையாத உறவு என்று ஊர் சொல்லிப் போகும்
உன்னைத் தொடர்ந்தே வருவேனே கடல் தாண்டி வாடி
என் உடல் தீண்டிப் போடி

இதேபோல் மருதநில குறுந்தொகைப் பாடல் ஒன்று  

“தச்சன் செய்த சிறுமா வையம்  
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉ மிளையோர்
உற்றின் புற்றெ மாயினு நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.”

என்று வருகின்றது. அதாவது

பெரியோர் இழுக்கின்ற பெரிய தேரை, இளையோர் இழுத்து இன்பம் அனுபவிக்காது விடினும் அந்தத் தேரை நினைத்துச் செய்த சிறுதேரை இழுத்து, அப்பெரியவர்கள் அடையும் இன்பத்தை இளையவர்கள் பெறுவதுபோல, பரத்தையர் பெறும் மெய்யுறு புணர்ச்சியைப் பெற்று இன்பமடையமாட்டோம் ஆனாலும், தலைவனை நினைந்து உள்ளத்தே நட்பைப் பெருக்குதலினால் அவர் பெற்ற இன்பத்தையே யாம் பெற்றேம் என்று கூறுகின்றார். இங்கு தலைவியும் தோழியும் அடையும் இன்பம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காம உணர்வுகளை பெண்கள் கவிதைகளாக வடித்திருக்கின்றார்கள்.

G என்பது Gay

ஆணும் ஆணும் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொள்வதை Gay என்ற சொல்லால் அழைக்கின்றார்கள்.

தாரகா என்பவள் முனிவர்களின் தவத்தை சோதிப்பதற்காக விஸ்ணு மோகினி உருவம் எடுத்ததாகவும் அந்த மோகினியை கண்டு சிவன் மோகித்த போது இருவருக்கும் பிறந்த குழந்தையே ஐயப்பன் என்றும் புராணக்கதை கூறுகிறது. கோயில் சிற்பங்களில் சிவனுடைய ஆண்குறியை விஸ்ணு பிடித்துக் கொண்டிருக்கின்ற சிற்பம் இருக்கின்றது. விஸ்ணு மோகினியாக மாறியது Transgender. மாறிய விஸ்ணுவும் சிவனும் கூடியது Gay.

சமூகரீதியாக வைஸ்ணவசமயத்தையும் சைவசமயத்தையும் ஒன்றாக்கவே இந்த சமய ஒருமைப் பாட்டை எடுத்துக்காட்டவே இவ்வாறான புராணக்கதைகள் உருவாகியிருக்கலாம். இவை என்னுடைய ஆராய்ச்சியிலே இந்து மதமும் வைணவ மதமும் ஒன்றாக வேண்டும். இந்துமதமாக வடிவெடுக்க வேண்டும். என்பதற்காக உருவாகிய கதையாக இருக்கலாம். ஆனாலும் ஐயப்பன் சுவாமி உருவாகிய கதை LGBTQ க்குள் அடங்குகின்றது.

B  என்பது  Bi sexual

இவர்களுக்கு ஆண், பெண் என்ற இருபாலினத்தினரின் மேலும் கவர்ச்சி ஏற்படும். ஆணைக் கண்டாலும் பாலுணர்வு மேலெழும் பெண்ணைக் கண்டாலும் பாலுணர்வு ஏற்படும். ஆனால், இது எல்லோரின் மேலும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. யாரில் பாலினக் கவர்ச்சி ஏற்படுகின்றதோ அதன்படி அவர்கள் தம்முடைய விருப்பத்தை நிறைவு செய்வார்கள்.

T என்பது  Transgender

இவர்கள் பிறக்கும் போது ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் இவர்களுக்கு உடலிலுள்ள ஹோர்மோன் இயற்கையாகவே மாற்றத்தையடைந்து பாலின மாற்றம் ஏற்படுகின்றது. ஆணாக இருப்பவர்கள் உறுப்புக்களால் ஆணாக இருந்தாலும் தம்முடைய உள் உணர்வுகளிலே தம்மைப் பெண்ணாகவே நினைக்கின்றார்கள். அதேபோல் உடல் உறுப்புக்களால் பெண்ணாக இருப்பவர்களும் மன உணர்வுகளால் ஆணாகவே தம்மைக் கருதுகின்றார்கள். அவர்களுடைய நடையுடை பாவனை மாற்றுப் பாலினமாக இருக்கின்றது. இவர்களை திருநங்கை, திருநம்பி என்று அழைப்பார்கள்.

 Q என்பது  Queer

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழும் வாழ்க்கையை நாம்  Normal என்று கருதுகின்றோம். ஆனால் இப்போது  Normal   என்பதே கிடையாது. எதை நாம் Normal என்று சொல்ல முடியும். ஆண் ஆண் போலே இருத்தல். பெண் பெண் போலே இருத்தல் என்று சொல்வது போலே நான் இல்லை என்பவர்களே Queer என்பவர்கள்.

இதைவிட போன்ற பிரிவுகளும் இருக்கின்றன. Questioning, Intersex, Assexual, Aromantic, Pansexual, Non-Binary or Envy, Genderfluid, Genderqueer, Agender, Stud, Muke, MaHu,Hetarosexism, Cisgender

Aromantic என்பவர்களுக்கு எதிலும் நாட்டம் இருப்பதில்லை. காமமோ, காதலோ எதிலுமே ஈடுபாடு இருப்பதில்லை. இவர்கள் எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவே விரும்புவார்கள். ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண்கள் இதை உடைத்து வெளிவர நினைக்கும் போது தம்மை Aromantic  ஆக இனம் காட்டுகின்றார்கள்.

தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன் என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual  தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும் என கவிஞர் மனோ மோகன் குறிப்பிடுகின்றார்.

ஆண்கள் விடுதிகளும், பெண்கள் விடுதிகளும், பிரமச்சாரிகளும், இவ்வாறான பிரச்சினைக்குள் அகப்படுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

இப்போது சிறுவயதிலேயே இதுபற்றிய வேறுபாட்டினைப் பாடசாலையில் கற்பிக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு உருவம் பிறக்கின்றது. அது மனிதப் பிறப்பில் ஆணாகப் பெண்ணாகப் பெயர் பெறுகின்றது, ஆனால், இது ஆண் என்றும் பெண் என்றும் அடையாளம் கொடுத்தது மனிதனே என்பதும் உண்மை. வளர்ப்பில் வேறுபட்ட குணாதிசயங்களை ஊட்டி வளர்த்த போது அது பெண்ணென்றும் ஆணென்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றது. அதாவது, ஒரு பிள்ளை சிறுவயதாக இருக்கும் போதே பெண்பிள்ளைகளுக்கு ரோசா நிற ஆடைகளை அணியவைத்து, பொம்மைகளை விளையாடக் கொடுத்து பெண் என்பதை பெற்றோரே மனத்தில் பதிக்கின்றார்கள். ஆண்களுக்கு வாகன பொம்மைகளை விளையாடக் கொடுத்து நீல நிற ஆடைகளை அணியக் கொடுத்து அவர்களை ஆண் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால், அந்தப் பிள்ளை ஓரளவு வயதாகும் போது. ஆண் உடைகளை அணிய ஆசைப்பட்டு அந்த ஆடைகளை அணிகின்ற பெண் பிள்ளைகளைப் பாடசாலைகளில் காணுகின்ற போது கேவலமாகப் பார்த்துக் கிண்டல் செய்கின்றது. அந்தப் பிள்ளைகளுக்கு இவ்வாறான பிள்ளைகளும் சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதைக் கற்றுத் தர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதனாலேயே தனியாக அஞ்சி அஞ்சி வாழுகின்ற பிள்ளைகளை சுதந்திரமான பிள்ளைகளாக வாழ வைக்க முடியும்.

 ஒவ்வொரு ஆணுக்கும் சில பெண் தன்மைகள் இருப்பது இயற்கை அதுபோல், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தன்மை இருப்பதும் இயற்கை. வேலைத்தளத்திலே பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு ஆண்போல் நடையுடை பாவனையில் காட்டிக் கொள்ளுவாள். சில ஆண்கள் வெட்கப்படுவதிலும் சில நடவடிக்கையிலும் பெண்போல் நடந்து கொள்வான். இது எப்படி ஏற்படுகின்றது என்றால், இயற்கையில் தாய் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம் சோடி சேர்கின்ற போது ஒரு குழந்தை உருவாகின்றது. தாயின்  xx என்னும் குரோமோசோம் தந்தையின் xy என்னும் குரொமோசோம் இணைந்து பிள்ளை வயிற்றில் உருவாகின்றது. இப்போது தாயிடமிருந்து x மட்டுமே வரும். தந்தையிடமிருந்து x  அல்லது y வரும். எனவே  முதலில் அம்மாவிடம் இருந்து வரும் குரோமோசோம் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. எனவே 42 நாட்கள் பெண்ணுக்குரிய உறுப்புகள் தோன்றுகின்றன. சூலகங்கள் கூடத் தோன்றி பின் வேறாகின்றது. பின்னரே ஆணாயின் ஆண்களின் உடல் உறுப்புக்களாக மாறுகின்றன. எனவே ஆரம்பத்தில் எல்லோரும் பெண்களாகவே உருவெடுக்கின்றார்கள் என்பது விஞ்ஞான ரீதியில் அறியப்பட்ட உண்மையாகும்.

 இவ்வாறு இயல்பாகவே பெண் தன்மையைப் பெற்ற ஒரு ஆண் தன் நிலைமையை வெளியில் சொல்ல முடியாது வேதனையை அனுபவிக்கும் நிலமையும் முடியாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளுகின்ற நிiலைமையும் பண்பாட்டுப் போர்வைக்குள் கிடக்கும் மனிதர்களுக்கு  பெரும் சவாலாக அமைகின்றன. இயற்கையை மீற முடியாது என்று சொல்லும் எம்மவர்கள் இவ்வாறான மனிதர்களை கண்டிப்பதும் அவர்களின் மனவேதனையை மேலும் தூண்டும் விதமாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு மனிதர்களும் தமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அல்லது தமது பிள்ளைகள் இவ்வாறான ஹோமோன்களின் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மகாபாரத யுத்த காலத்தில் யுத்தத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மகாவீரன் அறவான் என்பவன் தன் வில்வித்தைச் சிறப்பை கிருஸ்ணரிடம்  காட்டியபோது அவனது திறமையை உணர்ந்த கிருஸ்ணர் தனது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அறவானிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றார். உன்னுடைய இந்த அம்பைப் பயன்படுத்த முன் உன்னை நீயே கொல் என்று கூறுகின்றார். அதற்கு இறப்பதற்கு முன் எனக்குத் திருமணம் செய்யும் ஆசை இருக்கின்றது என்று அறவான் கேட்கின்றான். அதற்கு கிருஸ்ணர் மோகினி என்னும் பெண்ணாக மாறி அறவானைத் திருமணம் செய்கின்றார். இது மகாபாரத கதையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. இங்கு கிருஸ்ணர் பெண்ணாக மாறுகின்றார். இது ஒரு ஆண் பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மைக்குள் அடங்குகின்றது. இதுபோல் புராணக் கதைகளிலும் அறிந்திருக்கின்றோம். ஆகவே ஒரு ஆண் ஆணையே விரும்புவதும், ஆண் தனது உடல் உறுப்புக்களை மாற்றி பெண்ணாக மாறுவதும் தற்போது வெளிப்படையாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

 எனவே இயற்கையை மீற முடியாது. அதற்கு இடம் கொடுத்தலாகாது என்பவர்கள் காலம் காலமாகக் கட்டிக்காத்து வந்த தமது பழக்கவழக்கங்களையே காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இயற்கையாகத் தோன்றுகின்ற நரையை மறைத்து 'டை' போடுகின்றோம். இயற்கை நகத்திற்கு சாயம் பூசுகின்றோம். காதலுக்கு மறுப்புத் தெரிவித்து கடுமையாகக் கண்டித்த நாம், இப்போது காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுகின்றோம். சாதிக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த நாம், அதை மீறிப் சாதி, மத, இன பேதமின்றி பயணிக்கின்றோம். இவ்வாறு மாற்றத்திற்கு உள்ளான நாம், இயற்கையாகவே ஒரு மனிதனின் உடல்மாற்றத்தைக் கேவலமாக கருதுவது எந்தவிதத்தில் நியாயமாகின்றது.

வேறு உணர்வுகள் உள்ள இரு மனிதர்களை நாம் கட்டுப்படுத்தி இணைத்து வைக்கின்ற போதுதான் விருப்பமில்லாது எப்படியோ வாழ்கின்றோம் என்கின்றார்கள்.  இவர்கள் ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதுபோல் பல விவாகரத்துக்களும் நடைபெறுகின்றன. அதைவிட அவர்களின் மனத்துக்கு ஏற்ப வாழ்ந்தார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மனித உணர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது போகின்ற போது என்னால், என்னுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை பெற்றோர்களும் உதவி செய்கின்றார்கள் இல்லை என்று நினைக்கும் ஒரு பிள்ளைக்கு உணர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை ஏற்படுகின்றது. தம்மைத் தாமே வருத்தி கைகளிலே பிளேட்டினால் கீறித் தம்மைக் காயப்படுத்துகின்றனர். உணர்வுகள் கட்டுப்படுத்தி முறையான குடும்ப வாழ்க்கைக்குள் நுழைபவர்களாலேயே விவாகரத்துக்களும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றன.

நாம் ஆண், பெண் என்று புறக்கண்ணால் காண்கின்ற மனிதர்களுக்குள் எத்தனையோ மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை எம்மால் மேலோட்டமாக அறிய முடியாமல் இருக்கின்றது. கடவுள் தந்த உணர்வுகளை மாற்றுவது தப்புத்தானே என்கின்றார்கள். அது கொலைக்குச் சமம் அல்லவா. இது எனக்கு செட் ஆகின்றது. அதை மாற்றுவது கொலையை விட துரோகமானது என்கின்றார்கள். அதனால் இன்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியத்துக்குள் ஆளாகி இருக்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com