1906 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் சஞ்சிகையொன்று வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதுதான் இலங்கை அரசின் கமத்தொழில் திணைக்களத்தால் வெளியிடப்படும் 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகை. தமிழ் விவசாயிகள், பண்ணைகள் நடத்துவோர் போன்ற பலருக்கும் மிகுந்த பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வரும் சஞ்சிகை.  'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகையின் பழைய பிரதிகள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.

பழைய 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ட ஒரு தகவல் என்னை வியப்படைய வைத்தது. 1974இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் அமெரிக்க இளம் விவசாயிகள் நிறுவனமான 4-ஏச் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பண்ணை வாலிபர் மாற்றீட்டுத் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றார்.  அவர் அமெரிக்க இளம் விவசாயிகளின் விருந்தாளியாக அமெரிக்காவில் ஆறு மாத காலம் வரை தங்கியிருந்திருக்கின்றார்.

அவர் இணுவில் ஜோதி இளம் விவசாயிகள் கழகத்தின் தலைவர். சொந்தத்தில் மிகப்பெரிய நாற்றுப் பண்ணையை நடத்தி வந்திருக்கின்றார்.  நல்லின மாங்கன்றுகளை ஒட்டு முறை மூலம் இன விருத்தி செய்வதில் இவர் கை தேர்ந்தவரென்று 'கமத்தொழில் விளக்கம்' கூறுகின்றது.

என்னை வியப்படைய வைத்தது இச்செய்தியல்ல. இவ்விதம் அமெரிக்காவுக்குச் சென்ற இளம் விவசாயி ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை ஆசிரியர் என்பதுதான். எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நகைச்சுவைச் சஞ்சிகையான 'கலகலப்பு' சஞ்சிகையைப் பலரும் அறிந்திருப்பார். அந்தக் 'கலகலப்பு' சஞ்சிகையின் ஆசிரியர் தான் மேற்படி இளம் விவசாயி என்னும் விபரத்தையும் 'கமத்தொழில் விளக்கம்'சஞ்சிகை கூறுகின்றது.

மேற்படி தகவல் 1974 ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது 'கமத்தொழில் விளக்கம்' சஞ்சிகையில் 'கலகலப்பு' தீசனின் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. 'கலகலப்பு' தீசனின் இயற்பெயர் சீவரத்தினம் கேதீஸ்வரன் என்னும் தகவலையும்

'கமத்தொழில் விளக்கம்' தருகின்றது.  சஞ்சிகையை வாசிக்க விரும்பும் பாவிக்க வேண்டிய இணையத்தள முகவரி: https://noolaham.net/project/304/30338/30338.pdf


முகநூல் எதிர்வினைகள்:

Narayana Moorthy: 10வது படிக்கும்போது நான் ஓரு cartoon வரைந்து அனுப்பி அது அதில் பிரசுரமானது.

Vickneaswaran Sk:  நான் தொடர்ந்து வாசித்து வந்த இதழ் அது. அதில் திருஞான சம்பந்தபிள்ளை எழுதிய 'ஓம் நான் சொல்லுகிறேன்' என்ற கதையும் ஒரு இதழில் மறுபிரசுரமாகியிருந்தது. கிராம விவசாயிகள் மத்தியில் இதை விநியோகிப்பார்கள். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வாராவாரம் வெளிவரும் முகத்தார் வீடு நிகழ்ச்சியும், இதுவும் எங்களுர் விவசாயிகளுக்கு முக்கியமான தகவல்களை தந்தவை. இப்போது எழுத்தாள நண்பர் Vadakovay Varatha Rajan ' இன் விதானையார் வீட்டு முற்றம்' போன்ற நிகழ்ச்சி முகத்தார் வீடு!

Vickneaswaran Sk: கலகலப்பு சிரித்திரனுடைய பாதிப்பால் உருவான இன்னொரு நகைச்சுவை இதழ். மாணவர்கள் சம்பந்தப்பட்ட, படிக்கும் பாடங்கள் சம்பந்தப்பட்ட நகைச் சுவைக் கதைகளையும் துணுக்குகளையும் அது வெளியிட்டது. அதன் ஆசிரியர் தீசன் எங்கள் மத்தியில் மிகப் பிரபலமானது அவரது ' வட்டு எம்பீயும் சுட்ட தீசனும்' என்ற தலைப்பினால் ????

Murugesu Kanagalingam: படித்துள்ளேன்.

Siva Sivapalan: நான் 6ம் 7ம் வகுப்பு படிக்கும்போது எமக்கு விவசாயம் என்றொருபாடம் இருந்தது. அவ்வகுப்பிற்கு எல்லோரும் கமத்தொழில் என்னும் சஞ்சிகை மாதாமாதம் வாங்கவேண்டும். அதில் இருந்துதான் கேள்விகள் வரும். மேலும் நாம் உயர்தரம் படிக்கும் காலங்களில் கலகலப்பு பத்திரிகை எம்மிடம் பிரபல்யம். காரணம் ஆசிரியர் தீசன் அவர்கள் எங்கள் பாடசாலை பஸ்சில் அடிக்கடி வருவார். ஒருமுறை கேட்டதற்கு தனது எழுத்துகளுக்கு கருவும் நகைச்சுவை சம்பவங்களும் கிடைப்பது பஸ்சில்தான் என்று சொன்ன ஞாபகம். அப்போதெல்லாம் அவருடன் நட்பாகப் பேசுகிறமாதிரிப் பழக்கம் இருந்ததுண்டு.

Parathan Navaratnam: வேம்படி மாணவிகள் பாடசாலை கட் பண்ணி வெளியே போனதை இவர் போட்ட கார்ட்டூனால் பெரிய பிரச்சனையானது. தீசன் ஊரிலேயே பல வருட பழக்கம் அயலில் வந்து மினக்கெட்டதால்????நியுசீலாந்தும் போய் வந்தார்.

Giritharan Navaratnamள: 'கலகலப்பு' இதழ்கள் சில: http://www.noolaham.org/.../%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81...

Narayana Moorthy: தீசன் அப்போ ஒரு 'நாயகபிம்பம்'.. "விசுவலிங்கம் ரீச்சரின் மகன் ஒரு வருடம் அமெரிக்கா ஸ்கொலர்ஷிப் கிடைச்சு அமெரிக்கா போயிட்டானாம்..." என்பது முதலில் அவர் மீது பொறாமை கொள்ள வைத்தது... பிறகு தீசனை ஆசிரியராக வைத்து 'கலகலப்பு' சஞ்சிகை வந்து சக்கைபோடு போட்டது... அதில் வரும் பாடல் ஒன்று Bom bom bom.. bombay meri hai என்ற பாடலை மாற்றி 'பார்.. பார்.. பார்.. சீரழிவைப் பார்...' என்று வந்தபோது சிரிப்போ சிரிப்பு.. 'கலகலப்பு' இரண்டாக பிரிந்து 'சிரிப்பொலி' என்ற பத்திரிகையும் வந்தபோது சிவாஜி படம் எம்ஜியார் படம்போல அவற்றிற்கும் இரண்டு 'ரசிக'ர் கூட்டம் வந்தது.. வட்டுக்கோட்டை எம்பியாக இருந்த ஆ.தியாகராஜாவை கொழும்பில் சுடச் சென்றவர்கள் (சென்றவரையும் தெரியும்) தாங்கள் "கலகலப்பு நிருபர்" என்று சொல்லித்தான் பேட்டி எடுக்கவென உள்ளே போய் சுட்டார்கள்.. 'கொலையாளிகள்' சுட ஆரம்பித்ததும் தியாகர் கட்டிலின் கீழே ஒளித்து தப்பிவிட்டார் என பின்னர் செய்திகள் வந்தன..

Arun Ambalavanar: எனது முத்த மாமா சிறீஸ்கந்தராஜா குண்டசாலை விவசாயக்கல்லூரியில் கற்றவர். ஒரு தடவையல்ல. இரு தடவைகள் இதே திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்றுவந்தவர். அதுவும் 1974 க்கு பல வருடங்கள் முதல்.

Kunapalan Selvaratnam: He is from my village, gave English classes for free to our village boys.I was one his student. He is Very nice and funny person.

Indran Rajendran: அருமை

Sinnakuddy Mithu: கலகலப்பு சஞ்சிகையில் செங்கையாழியனின் கொத்தியின் காதல் என்று கதை தொடராக வந்தது

Giritharan Navaratnam: Sinnakuddy Mithu கொத்தியின் காதல் சிரித்திரனில் தொடராக வெளியான நாவல்.

Vickneaswaran Sk: Sinnakuddy Mithu இல்லை சின்னக்குட்டி. அது சிரித்திரனில் தான் வந்தது ????

Seerangan Periyasamy: புதிய கமத்தொழில் விளக்கம் சஞ்சிகையை விவசாய திணைக்கள இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

Sinnakuddy Mithu: வசந்த மாளிகை திரைபடத்தில் வரும் இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலை நகைச்சுவை யாக மாற்றி கலகலப்பில் எழுதி இருப்பார்கள் அந்த நேரம் அதை மாற்றி முணு முணுக்க நல்லா இருந்தது

Jaya Palan: உங்கள் ஓய்வு ஒழிச்சலில்லாத தேடல் வியக்க வைக்கிறது. கலகலப்பு தீசனை எனக்கு தெரியும். இப்ப எங்கிருக்கிறார்?

Giritharan Navaratnam: Jaya Palan "டொராண்டோ'வில் . .... https://www.facebook.com/sktheesan

Satheeshvaran Parakiramasingam: சிறந்த பன்முக தகவல். வாசித்துப் பார்க்கிறேன்

Kovinthamoorthy Kannan: Theesan SK

Thavarajah Arulkumaran: நல்ல பதிவு.


நகைச்சுவை மாத இதழ் 'கலகலப்பு'

நகைச்சுவை மாத இதழ் 'கலகலப்பு'

ஒரு சஞ்சிகை இலக்கிய உலகில் தடம் பதிப்பதற்கு அதில் வெளிவரும் ஆக்கங்களுடன், அதன் பெயருக்கும் முக்கிய இடமுண்டு. சஞ்சிகையின் நோக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தும் பெயர் அதனை வாசகர் நினைவில் நிலைத்து நிற்கச் செய்து விடுகின்றது. அவ்வகையான சிறப்பான பெயர்கள் அமைந்த சஞ்சிகைகளிலொன்று 'சிரித்திரன்'. சிரித்து இரன் என்பதை சிரித்திரன் என்று ஒன்றாக்கி உருவான பெயர். சஞ்சிகையின் நோக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தும் பெயர். அது போல் சிறப்பான பெயர் அமையப்பெற்ற நகைச்சுவைச் சஞ்சிகைதான் 'கலகலப்பு'  'சிரித்திரன்' போல் அதிக இதழ்கள் வெளிவராவிட்டாலும், குறைந்த இதழ்களே வெளியானாலும் , வாசகர்கள் நினைவில் இன்னும் நிலைத்து நிற்பதற்கு 'கலகலப்பு' என்னும் பெயரும் முக்கிய காரணங்களிலொன்று.

நகைச்சுவை இதழான 'கலகலப்பு' சஞ்சிகை இதழ்கள் சிலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்:


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்