ஜெயமோகன் வழியை முத்துலிங்கமும் பின்பற்றுகின்றார் போல் தெரிகிறது. உடனடியாகத் தன்னைப்பற்றிப் பலர் கதைக்க வேண்டுமென்றால் மிகவும் பிரச்சினையான ஒரு கருத்தை அவர் கூறுவார். உடனே அது தீ பற்றியெரியும். விகடனில் எம்ஜிஆர்/சிவாஜி பற்றி அவர் எழுதியதை உதாரணத்துக்குக் கூறலாம். அ.மு.வும் அந்த வழியைப் பின்பற்றி 'பதினொரு பேய்கள்' கதையை எழுதினாரோ தெரியவில்லை. ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பொன்றான 'ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினை இவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதை அவர் தனது கருத்துச்சுதந்திரம் என்று கூறலாம். ஆம், அது அவரது கருத்துச்சுதந்திரம். . தகவல்களைத்திரித்து, பிழையான தகவல்களை, ஊகங்களை மையமாகக்கொண்டு, விடுதலைக்குப் போராடிய அமைப்பொன்றினைச் சிறுமைப்படுத்தி, ( போராடிய அமைப்புகள் யாவும் மனித உரிமை மீறல்கள் பலவற்றைப் புரிந்துள்ளன. அவற்றில் ஏதாவதொன்றினை மையமாக வைத்து அவர் இக்கதையினை எழுதியிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும்)புனைவென்ற பெயரில் இவ்விதம் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதென் கருத்து. இதனைக்கூறுவது எனது கருத்துச்சுதந்திரம். பதினொரு பேய்கள் சிறுகதையைப் படிக்க: http://www.kalachuvadu.com/issue-181/page86.asp
அலன் தம்பதி கடத்தல் பற்றிய தகவல்கள் சில....
அ.மு.வின் சிறுகதையான 'பதினொரு பேய்கள்' பற்றி இணையத்தில் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. அது பற்றி எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவு பற்றி எழுத்தாளர் செழியன் எழுதிய கடிதத்தில் "யமுனா நீங்கள் எழுதியபடி இதற்கு உத்தரவு இட்டது தோழர் பத்மநாபாவோ டக்ளஸ் தேவா மற்றும் வரதராஐh பெருமாளோ இல்லை. அவர்கள் இந்த விடயத்தை நெரிவு படுத்தவும் இல்லை. உண்மையில் கடைசி நேரத்தில் தான் அவர்களுக்கு இப்படி ஒரு விடயம் நடந்து விட்டது என்பது தெரிய வந்தது." என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுபற்றி ஏற்கனவே வெளியான பத்திரிகைச்செய்திகள், தமிழகக் காவல்துறை அதிகாரியான மோகனதாஸ் எழுதிய எம்ஜிஆர் பற்றிய ஆங்கில நூல் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் இதற்கு மாறாக இருக்கின்றன. அவற்றைத் தொகுத்துக் கீழே தருகின்றேன். செழியன் ஈழப்புரட்சிகரவிடுதலைமுன்னணியின் முக்கிய உறுப்பினராக அக்காலகட்டத்திலிருந்தவர். எனவே அவரது கருத்தினையும் அப்படியே ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. மேற்படி அலன் தம்பதி பற்றி வெளியான தகவல்களுக்கு மாறானவையாக அவரது கருத்து இருப்பதால் அது பற்றிய விரிவான சான்றுகளுடன் கூடிய விளக்கத்தினை அவர் வெளியிடுவாரென்றால் அது வரலாற்றைச் சரியாக அறிந்துகொள்ள உதவியாக இருக்குமென்று கருதுகின்றேன். செழியன் செய்வாரா? மேலும் அ.மு.வின் சிறுகதைக்கு ஏற்பட்ட தீவிரமான எதிரொலிக்குக் காரணம் அவரது சிறுகதையில் கூறப்பட்டிருக்கும் அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் அல்ல; மாறாக அதில் அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கும், பெண் போராளிக்கும் இடையிலான தொடர்பு பற்றி விபரிக்கப்பட்டிருக்கப் பாவிக்கப்பட்டிருக்கும் கதாசிரியரின் எழுத்தே.
அதே நேரத்தில் தமிழகத்தின் கியூ பிராஞ்ச் மோகனதாஸ் EPRLF தலைவர்கள் அனைவரையும் ஹொட்டல் ஒன்றில் அடைத்து வைத்து, அங்கு அலன் தம்பதியினர் கொல்லப்பட்டால் இங்குள்ள நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள்' என்று எச்சரித்ததைத்தொடர்ந்து மறுநாளே பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலொன்றினை இணையத்தில் வாசித்திருக்கின்றேன்.
எழுத்தாளர் தமயந்தியும் தனது முகநூற் குறிப்பில் இவ்விடயம் பற்றிக் கடுமையான கருத்துகளை முன் வைத்திருக்கின்றார். அலன் தம்பதி கடத்தல் பற்றி வெளியான தகவல்கள் சில (இணையத்தில் கூகுளில் தேடினால் கிடைக்கக்கூடியவை இவை):
1. Frontline Volume 17 - Issue 02, Jan. 22 - Feb. 04, 2000, India's National Magazine, from the publishers of THE HINDU | COVER STORY: A tale of shattered credibility ; How the Government emerged from the crisis with its incompetence exposed and its credibility in the mud. - A. G. NOORANI -
States which sponsor such groups do bear ultimate responsibility, but not specifically for each operation that the group conducts. We ought to know that. On May 11, 1984, 11 armed Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) member s abducted a newly-wed American couple from their home at Jaffna beachside - Stanley Bryson Allen (30) and Mary Elizabeth (18). A note in the name of its armed wing, the People's Liberation Army, delivered the next day, demanded the release of 20 "politi cal prisoners" and Rs. 50 million in gold as ransom by noon on May 14, failing which the couple would be executed.
India was embarrassed for three reasons. First, the EPRLF was haplessly dependent on the Research and Analysis Wing (RAW) and had joined Tamil Eelam Liberation Organisation (TELO) and Eelam Revolutionary Organisations (EROS) to form the Eelam National Li beration Front (ENLF) with "Indian blessings", as M. R. Narayan Swamy of AFP records in his definitive book Tigers of Lanka (1994). Secondly, "to cap it all, the EPRLF - whose members were then undergoing training in India - had virtually implicat ed New Delhi by demanding that the ransom be paid to the Tamil Nadu Government". Lastly, it took place on the eve of U.S. Vice-President George Bush's visit to India.
But, of course, only an idiot would have held India responsible for this crime. Prime Minister Rajiv Gandhi appealed to the EPRLF to release the couple, saying that the abductions had caused India "great concern". He did not denounce the EPRLF. The U.S. did not denounce India either. Such indulgence is out of place in the midst of a crisis.
An angry M. G. Ramachandran (MGR), the Chief Minister of Tamil Nadu, put his trusted Director-General of Police (Criminal Investigation Department), K. Mohandas, to work. His memoirs MGR: The Man and the Myth (Panther Publishers, Bangalore, 1992) record (pages 91-93) how Varadaraja Perumal and colleagues were arrested and duly made to work on their followers. They ordered the Allens' release. "Four hours and 68 cigarettes later," the couple were free. U.S. President Reagan thanked the Prime Minis ter and MGR.
2. Online Asia Times: SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence By K T Rajasingham March 9, 2002
The Indian government was embarrassed over the incident. Abduction took place on the eve of the visit to India of George Bush, the US vice president. The Tamil Nadu Chief Minister disclaimed responsibility for the kidnapping and Mohandas, the Tamil Nadu's director general of police, summoned the EPRLF leaders and demanded the immediate release of the Allens. The RAW threatened to do away with the training program for the EPRLF cadres if the Americans were not freed. Pathmanabah, the secretary general of the EPRLF, was arrested and taken into custody by the Q branch of the Tamil Nadu police. M G Ramachandran, the chief minister, fumed over the incident and said, "I am afraid that the stage may be reached when the militants will lose the sympathy and support of the people of Tamil Nadu."
Indira Gandhi appealed to the EPRLF to release the Americans immediately. Her message demanding the release of the Allen couple on humanitarian grounds was broadcast over the Tamil service of the All India Radio's Madras station every 30 minutes for about nine hours. In the meantime, Intelligence Bureau officials (IB) handed a typed note from Indira Gandhi to Pathmanabah, which read, "Release the Allen Couple. I will provide all help to you."
On the evening of the 14th, the Allen couple surfaced before the Bishop of Jaffna. They were brought there by some EPRLF members and handed over to the Bishop. The couple before their departure to United States said, "The abductors said they were not terrorists but freedom fighters. If they were terrorists, they would have killed us." Those were the parting words of the Allens.
3. Douglas Devananda; From Wikipedia, the free encyclopedia
Allen kidnappings
On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allens unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allens were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities.
On 5 May 1985 the PLA led by Devananda attacked the Sri Lankan Navy base at Karainagar.[5] It was a disaster: Devananda's cousin Shobha (alias Mathivathani) and PLA second-in-command Sinnavan were amongst the PLA cadres killed.
By early 1986 disputes had arisen between Devananda and Padmanaba, the EPRLF's political leader. The EPRLF leadership split into two factions: EPRLF (Ranjan) and EPRLF (Douglas). Devananda was replaced by Gaffoor as the EPRLF's military commander. In late 1986 Devananda traveled to Madras (now Chennai) to meet Padmanaba.