1. வீழ்ந்தவராயினும் நல்லவர் புகழ் வாழும்
காணொளி ஒன்று பார்த்தேனின்று
கதைதான் என்றாலும் கனமானது
காவியத் தலைவன் கர்ணமாவீரன்
கவிதைபிறந்ததுஒலிவடிவிலிங்கே
சின்ன வயதினில் மனதினைக்
கவர்ந்தவன்
சிந்தையில் நிறைந்த கொடைவள்ளல்
இவன்
உன்னதமான குணம் கொண்டவன்
இவன்
உலகம் போற்றும் மாவீரன் கர்ணனேயாம்
மகாபாரத மனங்கவர் பாத்திரம்
யாரெனில்
மாசற்ற குணங்கொண்ட மாவீரன்
கர்ணனே
தகாதவிடம் சேர்ந்து தனைஈந்தானே
இவன்
தரணியில் நட்பிற்கு யாருளரிவன்
போல்
வீரம் நிறைந்திருந்தும் ஒதுக்கப்
பட்டான்
விவேகம் கொண்டிருந்தும் பழிக்கப்
பட்டான்
விதியதின் வசத்தினால் பிறப்
பறியாமல்
வாழ்வினிலிவன் கண்ட வலிகள்
பலவாம்
தாயறியான் தந்தையும் பிறப்பு
மறியான்
தரணியின் தன் நிகரற்ற
வில்லாளன்
போய்ச் சேர்ந்தான் தன்மானம்
காத்தவனிடம்
போராடி வீழ்ந்தான் நன்றிக் கடனிற்காய்
வஞ்சகன் கண்ணனின் உந்து
தலினால்
வந்தாள் குந்தியும் தாயென்ற
செய்தியுடன்
நெஞ்சம் பிறப் புணர்ந்ததென
மகிழ்கையில்
பெற்றவள் கேட்டாள் வர மிரண்டினையே
உயிரையே கேட்கின்றாள் உதிரம்
தந்தவள்
உறவைக் காட்டி மதியை மயக்குகிறாள்
செஞ்சோற்று நன்றி மிக்க பெருவீரனிவன்
சொன்னான் தாய்க்கு வரமது
தருவதாய்
தன்னுயிர் போகுமென வுணர்ந்தே
யவனும்
தாயிடமிரு வரம் கேட்டா
னறிவோம்
அவ்விரு வரத்தின் தன்மையைக்
காணீர்
அங்கத வரசனின் பெருமையை
யுணர்வீர்
இளவயதினில் என் மனங்
கொண்டவன்
இதயத்தில் நட்பிற் கிலக்கணம்
ஆனவன்
கொண்ட கொள்கையில் உறுதி
யானவன்
கொடை வள்ளல் கர்ண
மாவீரனேயாம்.
அர்ச்சுனன் வென்றான் என்றாலும்
உலகில்
அங்கத வரசன் கர்ணன் புகழ்
வாழ்கின்றது
விதியதின் எழுத்தினை யெவர்
அறிந்திடுவர்
வீழ்ந்தவராயினும் நல்லவர் புகழ்
வாழும்.
2. இளையவர் உலகவரங்கில் போராடிடுக.
அரசியல் ஆய்வுகள் பலதும் வருகுது
அறத்தோடு எழுதும் எழுத்தாயில்லை
அரிசியில் கல்லினை களைவதுபோல்
அவரவரெழுத்தினுண்மைகாண்போம்
எழுபத்தாறாண்டாய் சிங்கள மெமை
எதிரிகளாகவே நடத்துது நாளும்
அழிவுகள் அவலங்கள் தொடருது
அநீதிகள் அடுக்கடுக்காய் நடக்குது
அரசியல் தீர்வும் கிடைக்கலை
ஆயுதப் போரும் தோற்றேபோனது
அகிலத்தில் நமக்காரும் உதவலை
அயல்நாடதுவோ அநீதியே செய்குது
உலகவரசியல் உணர்த்துவது என்ன
உண்மைக்கும்நீதிக்குமுயர்வில்லை
சொந்தவரசியல் இலாபம் கொண்டே
சர்வதேசமும் இயங்கிடுது இங்கே
இருபதாண்டு அரிசியல் போராட்டம்
இனத்துரிமைகள் பெற்றிட முடியலை
நாப்பதாண்டு ஆயுதப் போராட்டம்
நாடுகள்பலதால்அழிந்ததுபோரும்
இந்தப்பதினைந்தாண்டுகளாய்நாம்
இறுதிப்போர்பற்றியேவிவாதம்செய்து
அந்தப்போரின் சரிபிழை பேசியே
அரசியல் செய்து பிழைக்கின்றோம்
இனவழிப்பிற்கு நீதி கேட்டிடவோ
இனவுரிமைக்கு வழி காட்டிடவோ
இங்கு தலைவரெவரும் வரலை
இன்றும்பதவிக்காய் சண்டைகளங்கே
புலம்பெயர்தேசத்துபுகலிடத்தமிழர்
பன்னாட்டு அரங்குகளிலும் தமிழர்
அவலத்தை எடுத்துரைத்து அரசியல்
அறிவுடன் வாதிடமுன்வரல் வேண்டும்
புலத்துதமிழர்அரசியல்தலைமையை
பொறுப்புடனரசியலறிவுடன்தெரிந்து
அயல்நாட்டின் ஆதரவினைப் பெற்று
அறவழியே போராடிடல் வேண்டும்
உரிமையென்பது கேட்டுப் பெறலன்று
உறுதியோடு அறவழியில் போராடியே
இன்னல்கள்களைந்தறிவுகொண்டே
இளையவருலகவரங்கில்போராடிடுக