டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று. அவருடைய ஆளுமை, எழுத்தாற்றல், மொழிபெயர்ப்புத்திறன், சமூக அக்கறை ஆகியவற்றை நினைவுகூரும் எளிய அஞ்சலிக்கூட்டம் ஒன்று புதுப்புனல் பதிப்பக அலுவலகத்தில் 24.10.2021 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. டாக்டர் .கே.எஸ்.சுப்பிரமணியனின் மகனும் மகளும் அயல் நாட்டில் கல்வித் துறையில் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். தங்கள் தந்தைக்கான எளிய அஞ்சலியாய் ஒரு நூல் அவருடைய நினைவுநாளன்று வெளி யிடப்பட வேண்டும் என்று விரும்பி அந்தப் பொறுப்பை என் கையில் கொடுத்தனர்.
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் தன் கணீர் குரலில் அவர் முதலில் சொல்வது இதைத்தான் : ”நான் கே.எஸ். பேசறேன்’’
கடந்த அக்டோபர் 24இல் அமரராகிவிட்ட அவருக்கு செய்யும் எளிய மரியாதையாக அவருடைய எழுத்தாக் கங்கள் சிலவும், அவரைப் பற்றிய சிலரது நினைவுகூரல்களும் இடம்பெறும் நூல் ஒன்றை அவரது முதலாம் ஆண்டு நினைவுநாளன்று கொண்டுவர வேண்டும் என்று அவருடைய மகனும் மகளும் கேட்டுக்கொண்டபோது உடனடியாக எனக்குத் தோன்றிய தலைப்பு இதுதான்: நான் கே.எஸ். பேசறேன்.
அதன்படி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியனின் தமிழ்க் கட்டுரைகள் சிலவும், தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் என்று இருமொழித் தொகுப்பொன்றை உருவாக்கி அதை நூலாக்கும் பொறுப்பை புதுப்புனல் பதிப்பகத்திடம் கொடுத்தேன். இந்த நூலில் கே.எஸ்.சுப்பிரமணியனைப் பற்றி அவருடைய நெடுநாள் நண்பர்களும் எழுத்தாளர்கள் சிலரும் எழுதியுள்ள 10 அஞ்சலிக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் ரவி சுப்பிரமணியன், கவிஞர் இளம்பிறை, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர் கருணாகரன் சிவராசா (ஃபேஸ்புக் கில் அவர் பதிவேற்றியிருந்தது ஆகியோரின் நினைவஞ்சலிக் கட்டுரைகளும் இவற்றில் அடக்கம். இந்த நூலும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான (நேற்று) 24.10.2021 அன்று புதுப்புனல் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கவிஞர் இளம்பிறை, கவிஞர் நந்தமிழ்நங்கை, எழுத்தாளர் திரு (இந்த நூலை வடிவமைத்துத் தந்தவர் இவரே), இன்னும் சிலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வை புதுப்புனல் பதிப்பக உரிமையாளரும் பன் முகம், புதுப்புனல் இலக்கிய இதழ்களை நடத்தியவரும், தன்னளவில் ஓர் எழுத்தாளருமான திரு.ரவிச்சந்திரன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.
திரு.கே.எஸ். சுப்பிரமணியனின் புகைப்படமும் அவருடைய நூல்களும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.
‘நான் கே.எஸ். பேசறேன்’ என்ற தலைப்பிலான தொகுப்பு அரங்கில் வெளி யிடப்பட்டது.
டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் தனக்குத் தந்தை போன்றவர் என்று தொடங்கி அவரைப் பற்றிய நினைவுகளை நெகிழ்வோடு அவையில் பகிர்ந்து கொண்டார் கவிஞர் இளம்பிறை.
(கவிஞர் இளம்பிறையும் புதுப்புனல் பதிப்பக உரிமையாளரும் திரு.ரவிச்சந்திரனும்)
இந்தத் தொகுப்பை வடிவமைத்த எழுத்தாளர் திரு. குறிப்பிடத்தக்க தமிழ்ப் படைப்புகளை, குறிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளையும் நவீன தமிழ்க் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் ததன் மூலம் தமிழிலக்கியத்தின் உலகத் தரத்தை எடுத்துக்காட்டியவர் திரு.கே.எஸ் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
(கவிஞர் இளம்பிறையும் நூலை வடிவமைத்துத் தந்திருக்கும் எழுத்தாளர் திருவும்)
இந்தத் தொகுப்பில் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தமிழில் எழுதிய கட்டுரைகள் சில, அவருடைய தமிழ் மொழிபெயர்ப்பான கடவுளின் கையெழுத்து(CODE NAME GOD) என்ற உலகப்புகழ் பெற்ற டாக்டர் மணி பௌமிக் கின்னுடைய நூலிலிருந்து இரண்டு அத்தியாயங்கள், டாக்ட கே.எஸ்.ஸின் நேர்காணல்(ஆங்கிலத்தில்), டாக்டர் கே.எஸ்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில, (உ.வே. சாவின் தன் வரலாற்று நூலிலிருந்து இரண்டொரு அத்தியாயங்கள்) அவர் மொழிபெயர்ப்பில் தமிழ்க் கவிதைகள் சில, டாக்டர் கே.எஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் சில, மற்றும் அவரைப் பற்றி 10 பேர் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரைகள் _ டாக்டர் கே.எஸ்ஸின் மகன் திரு.நரேந்திர சுப்பிரமணியன், மகள் திரு. அஜந்தா சுப்பிரமணியன், கவிஞர் ரவி சுப்பிரமணியன், கவிஞர் இளம்பிறை, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர் கருணாகரன் சிவராசா(ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தது) _ மற்றும் கே.எஸ்.ஸின் நீண்டகால நண்பர்கள் திரு.பி.ஆர்.சுப்பிர மணியன், மொழி அறக்கட்டளை, திரு டி.ராமச்சந்திரன் – MADRAS YOUTH CHOIR சார்பாக, திரு. ஜவஹர் வடிவேலு, Dr. கிருஷ்ணஸ்வாமி(Krishnaswami Associates) எழுதியவை இடம்பெற்றிருக்கின்றன.
(கவிஞர், பேராசிரியர் நந்தமிழ்நங்கை நூலின் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
நூலில் இடம்பெறுவன:
அ) டாக்டர் ஏ.எஸ். தமிழில் எழுதி வெளியாகியுள்ள கட்டுரைகள்
( அவருடைய கட்டுரைத்தொகுதிகளில் இடம்பெறுபவை) சில
1. பாரதியின் மனிதநேயம்
2. ஜெயகாந்தனின் படைப்புலகம்
3. ஜெயகாந்தனின் முன்னுரைகள்
4. பிச்சமூர்த்தியின் கவிதையுலகம்
5. சிந்தனை ஒன்றுடையாள்
6. இலக்கிய மொழிபெயர்ப்பு – ஓரு அனுபவப் பகிர்தல்
ஆ) கடவுளின் கையெழுத்து என்ற தலைப்பிலான டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் தமிழ் மொழியாக்க நூலிலிருந்து (டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற CODE NAME GOD நூலின் தமிழாக்கம்) இரண்டு அத்தியாயங்கள்
இ) A FACE-TO-FACE SESSION WITH DE. K.S.SUBRAMANIAN
ஈ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரை கள் சில.
1. A PEERLESS SPIRITUAL MENTOR
2. HOMAGE TO MBS
3. C.S.SUBRAMANIAN – A QUINTESSENTIAL PORTRAIT
4. PHILIPPINES – LAND OF SMILES
5. THE ALLURE OF SANGAM WOMEN POETRY
6. Dr.K.S.SUBRAMANIAN on his volume LOCKDOWN LYRICS
உ) டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில
1.FROM U.VE.SA’S THE STORY OF MY LIFE
2. FROM ASOKAMITHRAN’S CHENNAI, A KALAIDOSCOPE
3.FROM MENTORS, A forthcoming ESSAY-COLLECTION BY BAVA CHELLADURAI
a) Preface and b) (A Face-to Face Session with Writer Bava Chelladurai, published in the e-magazine KANALI )
ஊ) A HANDFUL OF CONTEMPORARY TAMIL POEMS TRANSLATED INTO ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN
எ) நினைவஞ்சலிக் கட்டுரைகள்
1. DR. NARENDRA SUBRAMANIAN
2. DR.AJANTHA SUBRAMANIAN
3. POET SIRPI BALASUBRAMANIAN
4. P.R.SUBRAMANIAN – MOZHI TRUST
5. MR.D.RAMACHANDRAN ON BEHALF OF MADRAS YOUTH
CHOIR
6. DR.JAWAHAR VADIVELU
7. POET RAVI SUBRAMANIAN
8. POET ILAMPIRAI
9. POET KARUNAKARAN SIVARASA
10. DR. KRISHNASWAMI
விலை: ரூ.300 பிரதிகள் இன்னும் ஒரு வார காலத்தில் தயாராகிவிடும்.
முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை : ரூ.250(தபால் செலவு தனி)
தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
பாத்திமா டவர்(முதல் மாடி)
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
(ரத்னா கபே எதிரில்)
சென்னை – 600 005
அலைபேசி எண்கள் : 9884427997, 9962376282
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ANAAMIKAA ALPHABETS CHENNAI: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.