’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். .தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது. அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள் என்பதை குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது. இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் இடம்பெற்றது,
தெலுங்கு இலக்கிய உலகில் 1910 காலத்திய குரஜாட அப்பாராவின் தித்துப்பாட்டு ( சீரமைப்பு) என்ற கதை புதிய வடிவச் சிறுகதைக்கு முக்கிய உதாரணம் எனப்படுகிறது. ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டில், பரிணய, கல்யாண மற்றும் விவாஹா என்ற தலைப்பின் கீழ் கதாநாயகர்களின் திருமணங்களைப் பற்றி எழுதப்பட்டது.[] சமய இலக்கியங்கள் மற்றும் மத நூல்களில் மதத்தின் நிறுவனர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அவர்களின் போதனைகளை உள்ளடக்கியிருந்தது.[] பிரபந்தம், சம்பூ, காவியம், கவிதா[] , சடகம், தசகா, அவதானம்[] , நாடகம் மற்றும் நானேலு போன்ற பல்வேறு வடிவிலான இலக்கியங்கள் தெலுங்கில் காணப்படுகின்றன
கவிதை வடிவத்திலிருந்து தெலுங்கு உரைநடைக்கு மாறியதில் பெருத்த சிரமங்கள் இருந்தன என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள் 1819 இல் ராவிபாட்டி குருமூர்த்தி சாஸ்திரியின் விக்ர மார்க்க கதலு தொடங்கியது .1909இல் பனப்பாக்கம் ஸ்ரீ்நிவாசாயாலுவின் ன் போஜன் மகள் கல்யாணம் போன்றவற்றில் தழுவல்கள் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றின் மூலம் தெலுங்கு உரைநடையில் பல படைப்புகள் அறிமுகமாகியுள்ளன. மதனகாமராஜன் கதைகள் தெனாலிராமன் கதைகள் போன்றவை கிரந்த தெலுங்கு வடிவில் இருந்தன. பஞ்சதந்திர கதைகள் பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் தாத்தாச்சாரி கதைகள் போன்றவை பேச்சுவழக்கு நடையில் இருந்திருக்கின்றன. வேதம் வெங்கட்ராம சாஸ்திரி கதா சரித சாகரம் என்பதை முதலில் மொழிபெயர்திருக்கிறார். செயின்ட் ஜார்ஜ் கல்லூரியில் முதன்மை பேராசிரியரான ராவி பாட்டி குருமூர்த்தி 1819 இல் விக்கிரமாதித்தன் கதைகள் எழுதினார் 1834 பஞ்சதந்திரக் கதைகளை அவர் எழுதினார் ., 1842 துர்ஜடிலட்சுமிபதி அவர்கள் கம்ச விம்சதி தெலுங்கு உரை நடையில் எழுதி வெளியிட்டார்.
தெலுங்கு உரைநடை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் முதலாகத் தொடர்ந்து நடைமுறை வாழ்க்கையை கருப் பொருளாக ஆக்கிக் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தற்கால தெலுங்கு சிறுகதை உருவெடுத்தது. 1910 ஆம் ஆண்டில் அய்யங்கி வெங்கடரம்ணய்யாவை ஆசிரியராக்க் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஆந்த்ரபாரதி இதழில் பிரசுரமான குரஜாட அப்பாராவின் கதை “ தித்துப்பாட்டு ( சீரமைப்பு ) வெளிவந்தது. தொடக்க முயற்சி என்றாகிறது .புதிய வடிவ சிறுகதைக்கு முதல் பாடமாகவும் அடிப்படையாக இருக்கிறது. ( பக்கம் 182 தெலுங்கு நாவல்கள் சிறுகதைகள் இராசபாளையம் சந்திரசேகரன் ரெட்டி)
ஆந்திராவில் கடலோர ராயலசீமா பகுதிகளில் கூட்டமைப்பான மதராஸ் ராஜதானியில் ஹைதராபாத் பகுதியிலும் இருந்த தெலுங்கு மக்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளால் சிறுகதை என்பது மூன்று வட்டாரங்களிலும் பல்வேறு சமயங்களில் பிறந்துள்ளது .கடலோரப் பகுதிகளில் 1902-இல் சிறுகதை பிறந்திருக்கிறது தெலுங்கானா பகுதியில் 1912ல் சிறுகதை வந்திருக்கிறது ராயலசீமா சிறுகதை 1941இல் வந்திருக்கிறது ராயலசீமா பகுதியில் தற்காலத்திய உணர்வு பிரவேசிப்பதற்கு தாமதம் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது அங்கே நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வலுவாக இருந்தாலும் இலக்கிய வடிவங்கள் வெளியிட வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது ராயலசீமா பகுதியில் சிறுகதைகள் உருப்பெற ஆரம்பித்தபோது அது கடலோரப் பகுதிகளில் அற்புதமான உணர்ச்சி நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது தெலுங்கானா பகுதியில் அந்த காலகட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருக்கின்றன
சமூக சீர்திருத்த போராட்டங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பெருமளவில் ஆரம்பத்தில் வந்திருக்கின்றன . பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து அப்போதைக்கப்போது பால்க்குர்கீ சோமன, போத்தன , அன்னமய்ய, வேமனா, வீரபிரம்ம்ம போன்ற கவிஞர்கள் சமூக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றை சமுக இயக்கங்களில் தீய சக்திகளாக பரவாமல் இருக்க சமூக இயக்கங்களில் உள்ளவர்கள் பலர் அந்த மையங்களை வைத்து சிறுகதைகள் எழுதினார்கள் .பல பெண் எழுத்தாளர்கள் கூட அவ்வகையான போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பண்டாரு அச்சமாம்பா ஸ்திரிவித்ய என்ற தனது கதையில் மனைவிதான் படிக்க வேண்டிய தேவையை அவசியத்தை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் .ஒரு பெண் குடும்ப பராமரிப்பிற்காக தவறான வழியில் பணம் சம்பாதித்து வந்த தனது கணவனை கெட்டிக்காரத்தனமாக திட்டம் போட்டு திருத்துகிறார் .கதைகள் மூலம் சமூக போராட்ட கதைகளுக்கு சரியான வடிவமும் நோக்கமும் கொடுத்திருக்கிறார்
குரஜாட அப்பாராவ் எழுதிய ‘தித்துபாடு’ (didhubaatu) 1910ல் வெளிவந்த சிறுகதையை தெலுகில் முதல் சிறுகதையாக ஆய்வாளர்கள் கருதி வந்தனர். அதற்கு முன்பே, பண்டாரு அச்சமாம்பா என்கிற பெண்மணி எழுதிய ‘தன த்ரயோதசி’ கதை 1902ல் வெளி வந்துள்ளது.
1900-க்கு முன்பே எழுதப்பட்ட குரஜாட அப்பாராவின் ‘கன்யா சுல்கம்’ என்கிற நாடகம் ஒரு புரட்சியாகக் கருதப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தைகளை கிழவர்களுக்கு மணம் செய்து கொடுப்பது அக்காலத்தில் நிலவி வந்த ஒரு நடைமுறை. குர்ஜாட அப்பாராவுக்குப் பிறகான கதைசொல்லிகள் கந்துகூரி வீரேசலிங்கம் கிடுகுல ராமமூர்த்தி ஆகியோர் வழியில் பயணம் செய்து சமூக பொறுப்புகளை கதைகளில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் துயர வாழ்க்கையை அந்த காலகட்டத்தில் எழுதியவர்களில் ஸ்ரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி சலம் என்பவர் சீர்திருத்தப் போராட்ட எழுத்தாளர்களைப் போலவே மாறுபட்ட நிலையில் மக்களின் வாழ்க்கை குறித்தும் குடும்பம் திருமண அமைப்புகள் பெண்கள் படும் சிக்கல்கள் குறித்தும் கதைகள் எழுதியுள்ளார் .விதவைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு பல கதைகள் அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன.
குழந்தை திருமணம் பற்றிய விமர்சனங்களை செருகுபள்ளி சிவராமய்யா கொடவட்டி குடும்பராவ் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் எழுதி இருக்கிறார்கள் .ஸ்ரீபாத எழுதிய கலுபு மொக்கலு - இணைந்த தளிர்கள் என்ற கதை தீண்டாமை பிரச்சனை சமூக சீர்திருத்த போராட்டத்தில் சற்று வேகம் குறைந்திருக்க, சுதந்திர போராட்டம் கலந்து வேகம் பெற்ற காலத்தில் இந்தப் போராட்டங்களின் உணர்வுகளை சரியாக சொல்லியுள்ளன. ஹிந்து தலித்துகள் ஆக இருந்தபோது குளத்தில் தண்ணீர் மொள்ள அனுமதிக்காத மேல்சாதியினர் முஸ்லிமாக மாறி குளத்தில் குதித்த போது அதே மேல்சாதியினர் வாய் திறக்காத விஷயத்தைப் பற்றி ஸ்ரீபாத உள்ளிட்டவர்களால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் உலகப்போரும் அதன் பாதிப்பும் முக்கிய பங்கு வகித்தது .தேசியப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. இதற்கு மத்தியில் நிகழ்ந்த பொருளாதார மந்தநிலை உலக நாடுகளை தடுமாற செய்தது இந்த காலத்தை “ ஆகலி முப்பது “ என்று “ பசி முப்பதுகள் “ என்று சொல்கிறார்கள். தெலுங்கு கதை சொல்லிகள் முதல் உலகப் போரைப் பற்றி அதிகமாக எழுதி உள்ள்னர். அதனால் பொருளாதார சீர்குலைவு பற்றி வேலூரி சிவராம சாஸ்திரி டிப்ரசன் செம்பு போன்ற கதைகளை எழுதி இருக்கிறார்கள் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக நல்ல மனைவியான துளசி பெண்டாட்டி பிள்ளைகளை காப்பாற்ற முடியாத நிலை கல்யாணத்தை ஏன் பண்ணிக்கிட்டு என்று கேட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது கடைசியில் மனைவி தாலியை அறுத்து கணவன் கையில் கொடுத்தாள் ஒரு கல்லூரி முதல்வரிடம் போய் வேலை வேண்டும் என்று ராமாராவ் பணிவுடன் வேண்டிக் கொண்டிருக்க துளசி தாமிரச் செம்பின் மீது மிசஸ் ராமாராய் த்விவேதி என்று தாரினால் எழுதிக்கொண்டே பிச்சை எடுக்க கிளம்புகிறார் .நடுத்தர குடும்பத்து பொருளாதார நெருக்கடி அப்போது குடும்பத்துக்குள் ஏற்பட்டிருந்த சிரமங்களை அந்த கதை சொல்கிறது .
யுத்தகால கதை என்று சிந்தனை கதைகளை சிந்த்லபாட்டி ஸ்ரீராமுலு எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் கொட வட்டி கன்ட்டி குடும்பராவ் பல கதைகளில் இருக்கிறார் .யுத்த அனுபவங்களை சொன்ன ஒரு மிலிட்டரி கேப்டனின் கதையை க்ரொவிடி லட்சுமணா வெற்றித் திருவிழா என்ற கதையாக்கி இருக்கிறார் .. யுத்தகாலத்தில் ரஷ்யா வெற்றி காண்பது போலவும் இந்தியாவில் சோசலிச அரசு அமைப்பது போலவும் கனவு கண்ட வக்கீல் குமாஸ்தா குரு ஐயாவின் கதையை எழுதியுள்ளார்
சுதந்திரப் போராட்ட காலநிலை என்பது தெரிந்து எழுத்தாளர்களின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறது முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத எழுச்சி பின்னர் சுந்தர போராட்டத்தில் வந்ததை பல எழுத்தாளர்கள் கதைகளாக சொல்லி இருக்கிறார்கள். இந்த வகையை கதைசொல்லிகள் 1925 இலிருந்து பல கதைகள் எழுதி இருக்கிறார்கள் .
தனி நபர் மகிழ்ச்சியே நாட்டு நலத்தை விட முக்கியம் என்று எண்ணும் ஒரு பெண்மணி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் தன் கணவன் கலந்து கொண்டு சிறை கைதியாகி காச நோய்க்கு ஆளாகி மரணத்தை ஏற்றுக் கொண்ட அனுபவத்தை சலம் , சுசீலா என்ற கதையில் சித்தரித்திருக்கிறார் .தான் பிழைத்து இருந்தால் தன் மகன் சுதந்திரப் போராட்டத்திற்கு போக மாட்டான் என்று உணர்ந்து கிணற்றுக்குள் குதித்து மரணம் அடைந்து மகனை போராட்டத்திற்கு அனுப்பும் தாயின் கதை தியாகப் பெண் . காதலித்து மதம் தாண்டி கலப்பு மணம் செய்து கொண்ட வளை மாமியார் வீட்டார் துரத்திவிட சுதந்திர போராட்டத்தில் மீதி வாழ்க்கையைக் கழித்த பெண்ணின் கதை யாருடைய அதிர்ஷ்டம் எழுதியவர் பசவராஜ் வேங்கட ராஜலட்சுமி
ஒரு சிறுமி விளையாடும் வயதில் ஒரு சுதந்திரப் போராட்டகாரனின் அறிமுகத்தால் உணர்வு பெற்று அந்த போராட்டத்திற்கு தலைமை வைக்கும் நிலைக்கு உயர்ந்தது ராயசம் வெங்கடசிவுடு நீலவேணி கதையில் கொடுத்திருக்கிறார் .சுரண்டல் அடக்குமுறை எதிர்ப்பு உழைக்கும் மக்களுடைய வாழ்க்கை நிலை யுத்த எதிர்ப்பு பொருளாதார சமத்துவம் ஆகிய முற்போக்கு அம்சங்கள் கொண்டு பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன .ருசிய புரட்சிக்கு பின்னர் அதன் தாக்கம் இந்தியாவில் படிந்து முற்போக்கு இலக்கியத்திற்கு பாதை காட்டி இருக்கிறது. அப்படி தெலுங்கில் அடித்தட்டு மக்களைப் பற்றி முதன் முதலில் எழுதிய எழுத்தாளர் சிந்தா தீக்ஷிதுலு.
சலம் மார்க்சியவாதி இல்லை என்றாலும் ஆண் பெண் உறவுகளில் புரட்சிகர மாற்றங்களை வேண்டுவதாக பல கதைகளை எழுதினார். முற்போக்கு கதை அம்சங்களையும் மார்க்சிய சித்தாந்தங்களின் பின்னணியும் கொண்டு எழுதிய முக்கியமான எழுத்தாளர்களில் கொடவட்டி கண்டி குடும்பராவுடையது .
மனிதன் நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் சமூக சக்திகளை பற்றி அவர் பல கதைகள் எழுதி இருக்கிறார் குடும்பமும் ஆதிக்கச் சக்திகள் சூழ்ந்திருக்கும் ஆட்சி இதன் காரணமாக பல போராட்டங்களை பற்றி எல்லாம் கதைகள் எழுதி இருக்கிறார் .பின்னர் அந்த காலகட்டத்தில் கோபிசந்த் , மாகோகலெ,ரவிசாஸ்திரி , முப்பள ரங்கநாயகி அம்மாள் ,வாசிரெட்டி சீதாதேவி சாரதா போன்றோர் முற்போக்கு விஷயங்களை சிறுகதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
ராவி சாஸ்திரியின் எறும்பு என்ற சிறுகதை வர்க்க சமூக இயல்பை புலப்படுத்தி போராட்டத்தை தீர்வாக காட்டிய கதைகளாகும்.அந்தா எழுத்தாளனின் பாதிப்பில் பல கதைகள் எழுதப்படுகின்றன, சாரு எழுதிய சிறுகதை ஒரு உலகத்தில் சகோதரிகளின் வாழ்விலும் கூட பொருளாதார சூத்திரம் எப்படி வேலை செய்கிறது என்று உரைக்கிறது
சாரதா - புதுக்கோட்டை நடராஜன் என்பவர் எழுதிய ரத்தத்தொடர்பு போன்ற சிறுகதை முற்போக்கு கதைகளின் அடிநாதமாக இருக்கின்றன . 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு மக்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக தெலுங்கானா போராட்டம் மிக முக்கியமான பங்கை வகித்தது விஷ்ணுரி ஒரு பண்ணையார் எதிர்ப்பில் கொத்தடிமை வாழ்க்கையை வெங்கடேஸ்வர ராவ் -ரஹீம் பாய் கதையில் எழுதி இருக்கிறார். உடல் நலம் கெட்டுப் போயிருந்த மகளை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி போராட்டத்திற்கு அனுப்பிவைத்த பெண்மணியையும் வேறொரு பெண்ணை காப்பாற்றுவதற்காக கட்டையை ஆயுதமாகக் கொண்டு இரண்டு படை வீரர்களைக் கொன்றது .தொடர்ந்து துப்பாக்கி குண்டுகளுக்கு இரை யான மற்றொரு பெண்மணியையும் நீங்கள் வெற்றி அடைவீர்கள் எந்த கதையில் தும்பல வெங்கட்ராம் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார்
தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் வீர்யம் அறியாத காரணத்தினால் 1951ல் தெலுங்கான விடுதலைப் போராட்டம். விலக்கிக்கொள்ளப்பட்டது அந்த காலகட்டத்தில் மார்க்சியம் லெனினியம் மாவோயிசம் சிந்தனையின் அடிப்படையில் சிரிக்கா குளத்திலும் வடக்கு தெலுங்கான மாவட்டத்திலும் பல குழுக்கள் ஏற்பட்டன மேற்கு வங்காளத்தில் இருந்த நக்சல்பாரி போராட்ட உணர்வு ஆந்திர பிரதேசத்திற்கு பரவியது .தெலுங்கானா போராட்டத்தில் இனப்பிரச்சினை பிரதானமாக இருந்தது நக்சல்பாரி போராட்டத்தில் நிலம் சார்ந்த போராட்டம் மட்டுமில்லாமல் சிங்கரேனி கனிம சுரங்க எதிர்ப்புப் போராட்டம் மலைவாழ் மக்கள் போராட்டம் ஆகியவற்றின் முக்கிய இடங்களை குறிப்பிட்டன. அரசாங்கத்தின் தடைக்கு பயந்து பல குழுக்களும் பின்வாங்கினர். ஆனால் தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டன .இது பின்னால் பெரிய போராட்டமாக உருப்பெற்றது இந்தப் போராட்டங்கள் எல்லாம் ஆதரித்தும் ஸ்ரீகாகுளம் வட்டாரத்தில் புரட்சிக்கான சூழல் அனுகூலமாக உள்ள உண்மையை காளிபட்னம் ராமாராஅவ் 1964 ல் யக்ஞம் கதையை எழுதினார்
கிராமங்கள் சுரண்டல் நிலையங்களாக மாறி சுதந்திரத்திற்குப் பின்னான வளர்ச்சி ஆட்சியாளர்களுக்கு பயன்பட்டு கொண்டிருக்க சமூகத்தில் தீவிரமான மாற்றங்கள் வர வேண்டிய தேவையை இந்த கதை குறிப்பிட்டது குண்டூர் மாவட்டத்தில் குத்திக்கொண்ட குகைப் பகுதியில் நடந்த புரட்சி மாநாட்டுக்கு வங்காளத்தைச் சேர்ந்த சாரு மஜூம்தார் 1969ல் வந்தார் .அந்த பாதிப்பில் பல கதைகள் எழுதப்பட்டன. நில போராட்டத்தின்போது ஒன்றிணைந்த எதிர்ப்பின் தேவையை சொல்லும் கதை அல்லம் ராஜ் அய்யா எழுதிய மாற்றம் , காளையின் திமிறலை நிலச்சுவான்தார் அடாவடித் தனம் பிடித்த்தை எதிர்த்த்து பற்றிய கதை புரட்சிகர கதைகளில் மிக முக்கியமானதாகும் .போராட்டத்தில் நுழைந்த வெடிமருந்து வழிமுறையை பல கதைகள் வெளிப்படுத்தியுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை கொண்ட களவு நீலத்தாமரை நிலக்கரி சுரங்க தொழிலாளர் உடைய வாழ்க்கை போராட்டத்தை சித்தரித்து ஒரு முக்கியமான தொகுப்பாக சொல்லப்படுகிறது .அதேபோல மக்களின் போராட்ட வாழ்நிலை பிரச்சனை பற்றி பல கதை சொல்லியிருக்கிறார்கள்
காட்டில் வெண்ணிலா என்ற பிஎஸ்ராமுலுவின் கதைத்தொகுப்பு அதில் முக்கியமானதாகும் புரட்சிப் போராட்டம் தெலுங்கானாவுக்கு மாறியிருந்தாலும் வட ஆந்திராவின் புரட்சி சூழலை பல எழுத்தாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள் .ராயலசீமாவில் இருந்து சக்கரவர்த்தி என்பவர் கொத்த சத்துவு- புதிய படிப்பு போன்ற கதைகள் இந்தப் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்றன .தெலுங்கில் சிறுகதை பெண்களின் வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன . ஸ்ரீபாத, சலம் விஸ்வநாத சத்தியநாராயணா போன்றவர்கள் பெண்களைப் பற்றி வெவ்வேறு நோக்கில் சிறுகதைகள் எழுதினார்கள் .அதைத்தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக பெண்ணிய பார்வையுடன் பெண்களும் நிறைய எழுதி இருக்கிறார்கள்.
வீட்டிலும் வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அல்லல்களை ஓல்கா ,கொண்டபடி நிர்மலா , ப்போது சாயாதேவி சுஜாதா சுஜாதா ரெட்டி பிரதிமா போன்ற எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள் சுஜாதா ரெட்டி எழுதிய சிறுகதை தொகுப்பு தெலுங்கானா பெண்களில் வாழ்க்கை துயரங்களை புலப்படுத்துகிறது
1956 இல் விசால ஆந்திரா கொள்கை அடிப்படையில் அரசியல் ரீதியாக ஆந்திர பிரதேசம் மாநிலம் ஏற்பட்ட பிறகு மாநிலத்தின் பின்னடைந்த பகுதிகளில் ஏற்படும் வேண்டிய வளர்ச்சி ஏற்படாததால் தனிப்பட்ட மாநில போராட்டங்கள் நடந்தன அதனால் வட்டார இலக்கிய வகையும் அதிகரித்தது. தெலுங்கானாவை நிராகரிப்பது பிற பகுதிகளில் சாதி அதிகம் போன்றவை அரசியல் ரீதியாக வெளிப்பட்டன .சிறுகதைகளில் தெலுங்கானா பகுதி வாழ்க்கை சார்ந்த கருப்பொருளை எழுதியவர்களின் சிறுகதைகளில் பெண்களின் குரலைக் காணலாம் .
நூறாண்டு கால தெலுங்கு சிறுகதை இலக்கிய வரலாற்றில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது ஆனாலும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. தலித் வாழ்க்கையை சித்தரித்து கதைகளில் தெலுங்கிற்கு முக்கிய பங்கு இருக்கிறது
.தெலுங்கானா மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன லூரி சுதாகரின் மல்லி முகம் மூக்கு மல்லிகை மொட்டு என்ற சிறுகதை தலித் வாழ்க்கையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது . நமக்கு இல்லாத நிலங்கள் ரெட்டி மார்களுக்கு எப்படி வந்து செய்ய மத்தவங்களுக்கு இப்படி வந்து இருக்கிறார் இந்த தேசத்தின் விளை நிலங்களுக்கு ஜாதி இருக்கு என்ற கருத்தை சொல்லி இருக்கிறது
.எங்களுக்கு வேண்டாம் இந்த வெள்ளையர் அரசாங்கம் என்று தெலுங்கு கவிஞர் கரிமல சத்யநாராயணா பாடினார். எங்களுக்கு வேண்டாம் என்று இந்த கருப்பு அரசாங்கம் என்று குசும்பன் என்ற இன்னொரு தெலுங்கு கவிஞர் பாடினார் . இவை கதைகளிலும் பிரதிபலித்தன, சமூகத்தில் நிகழும் பொருளாதார சமூக அரசியல் மாற்றங்களில் மேல்தட்டு வர்க்கம் ஆதிக்கம் செலுத்துவதையும் கட்சிகள் தேர்தல் ஜனநாயகம் போன்றவை இந்த ஆதிக்க ஜாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்வதும் மையமாகக் கொண்டு பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன
தலித் சிறுகதைகள் 1925 முதற்கொண்டே பிரசுரமாகியுள்ளன. சுப்ரமண்ய சாஸ்திரி போன்றோர் எழுதியுள்ளனர். 1935ல் கொட்டு முழக்கம் என்ற கதையை மங்காய்மா எழுதினார் . தமிழ் ஒளியின் கதைகள் சில தலித்திய வாழ்வியலைக் கொண்டவி. அன்பாதவன், சிவகாமி, இமயம், விழி பா இதயவேந்தன் உட்பட பலர் தமிழில் தலித் கதைகளைச் சிறப்பாக எழுதியுள்ளனர். ரங்கநாயகம்மா அவர்களின் படைப்பில் ஜாதி வேற்றுமைகளை கருத்தாக கொண்ட விசயங்கள் முன்னணியில் நிற்கும் .
1970 வரையிலான காலகட்டங்களில் வந்த இந்தியச் சிறுகதைகளில் தெலுங்கின் சிறுகதைகளும் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. நவீனத்துவத்தின் அடிப்படி அம்சங்களை அவற்றின் உள்ளடக்கத்தில் கொண்டு விளங்கிய்யிருக்கின்றன
ஆதாரம் :
1.தெலுங்கு நாவல்கள் சிறுகதைகள் இராசபாளையம் சந்திரசேகரன் ரெட்டி- சாகித்ய அகாதமி)
2. ஒரு த்லைமுறை தெலுங்குச் சிறுகதை – ராமலிங்கம்- சாகித்ய அகாதமி வெளியீடு
3. தெலுங்கு நாவல்கள் , சிறுகதிஅகள் ( ருத்ரதுளசிதாஸ்- சாகித்ய அகாதமி வெளியீடு
4. தெலுங்கு மொழிச் சிறுகதைகள் ( பூ அ துரைராஜா , பூங்கொடி பதிப்பகம் )
5. கவுரி கிருபானந்தம் வலைத்தளம்
6. மாலன் வலைத்தளம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.