- எழுத்தாளர் மாத்தளை சோமு -
ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் இன்று கனடா நேரம் அதிகாலை 4 மணி தொடங்கி ஏழு மணி வரை நடைபெற்றது. சங்கத்தலைவர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் வரவேற்புரையினை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியை எழுத்தாளர் நடேசன் சிற்ப்பாக நெறிப்படுத்தினார். நிகழ்வில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் புகலிட நாவல்கள் பற்றி\யும், எழுத்தாளர் வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (குறிப்பாகக் கனடாச் சிறுகதைகள்), மற்றும் எழுத்தாளர் சிவராசா கருணாகரன் புகலிடக் கவிதைகள் பற்றி உரையாற்றினார்கள்.
நிகழ்வின் பிரதான அம்சம் மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களைக் கெளரவித்தலாகும். அவரை பற்றிய கெளரவிப்பு உரையினைப் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் மிகவும் சிறப்பாக ஆற்றினர். தொடர்ந்து ஏற்புரையினை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நன்றியுரையினை ஆற்றினார். தொடர்ந்து கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.
எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு, மலையகத்தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த பங்களிப்பு செய்த ஒருவர். நாவல், சிறுகதை , பயண இலக்கியம் என அவரது இலக்கியப் பங்களிப்பு விரிந்தது. அவரது கண்டிச்சீமை முக்கியமான நாவல்களில் ஒன்று. வாழ்த்துகள்.
நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக தனது உரையினை முழுமையாக ஆற்ற முடியவில்லை . விரைவில் ஆற்றவிருந்த உரையினை முழுமையாக்கிக் கட்டுரையாக எழுதுவேன், பகிர்ந்துகொள்வேன்.