அண்மையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தைக் கொசுவை அழிப்பதுபோல் அழிக்க வேண்டுமென்றூ கூறியது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பலத்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதவெறி பிடித்த இந்து மதகுரு ஒருவர் உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி என்று அறிவித்திருக்கின்றார். நல்லவேளை உதயநிதி வட இந்திய மாநிலங்களில் வசிக்கவில்லை. வசித்திருந்தால் அந்தச் சாமியாரின் கட்டளையை ஏற்று ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக உதயநிதி இந்த எச்சரிக்கையை இலேசாக எண்ணிவிடக்கூடாது.  அவதானமாகவுமிருக்க வேண்டும்.  இவ்விதம் கொலை அச்சுறுத்தல் விட்ட அந்தச் சாமிக்கெதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

இந்தச் சர்ச்சையையைக் காரணமாக வைத்து தமிழகத்தின் ஆட்சியைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியற் கோமாளியான சுப்பிரமணியன் சுவாமி அதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே விட்டிருக்கின்றார்.  போதாதற்கு ஆளுநர் ரவியுடனான தமிழக அரசின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. அப்படியேதும் நடந்தால் மிகப்பெரிய வெற்றியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.  இன்றுள்ள திமுகவின் வசீகர ஆளுமைகளில் முன்னிலை வகுப்பவர்கள் உதயநிதியும், கனிமொழியும்தாம். ஸ்டாலின் தன் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளால் இன்றுள்ள நிலைக்கு உயர்ந்திருப்பவர்.  ஆனால் உதயநிதி, கனிமொழி போல் மிகுந்த வசீகர ஆளுமை மிக்கவரல்லர். கனிமொழியின் 'தமிழ்', 'ஆங்கிலப்புலமை, உதயநிதியின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தோற்றம், கலைஞரைப்போல் சமயத்துக்கேற்ப உதிர்க்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் பதில்கள், திரைப்பட நடிப்பு  காரணமாக திமுகவின் முக்கிய பலமாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் பலமும் இவர்கள்தாம்.

உதயநிதி ஸ்டாலின் விட்ட தவறு ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறியதுதான். பல்  மத மக்கள் வாழும் தமிழகத்தில் இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையினர்.  அவர்கள் தாம் விரும்பும் மதங்களைப் பின்பற்றுவது அவர்களது உரிமை. சானதனதர்மம் என்பது இந்துக்களின் புனித நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்றும் கருதலாம்.  அதிலுள்ள மனுதர்மம் வகுத்துள்ள வர்ணக் கோட்பாடு மக்களை சாதிரீதியாகப் பிரித்து, வேறுபாடுகளை உருவாக்கியுள்ளதால் அது சமத்துவத்துகு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. அவற்றையே ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருக்க வேண்டும். அவ்விதம் பேசியிருந்தால் அதற்கு  இவ்விதமான எதிர்ப்பு பாஜக கூடாரத்திலிருந்து கிளம்பியிருக்காது.

உண்மையில் அதனையேதான் அவ்விதம் கூறியதாக உதயநிதி விளக்கமளித்துள்ளார்.  ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுவே திமுகவின் கொள்கை என்றும் கூறியுள்ளார்.  இவ்விளக்கங்களுடன் சனாதன தர்மத்தின் ஒரு பகுதியான மனுதர்ம சாத்திரம் வகுத்துள்ள வர்ணக் கோட்பாட்டைக் கொசுவை நசுக்குவதுபோல் ஒழிக்க வேண்டுமென்று கூறியதைத்தான் பொதுவாக அன்று கூறி விட்டேன் என்னும் விளக்கத்தையும் சேர்ப்பதன் மூலம் சர்ச்சையின் சூட்டை ஓரளவு தணிக்கலாம்.

சில இந்துத்துவவாதிகள் மக்கள் வாழ்வதற்குப் பல் தொழில் செய்பவர்களும் வேண்டும். அதைத்தான் மனுதர்மம் கூறுகிறது. சாதிப்பிரிவுகள் தேவை  என்பதையல்ல என்று பதிலுக்கு வாதிடுகின்றார்கள். அப்படிக் கூறுபவர்களைப் பார்த்துக் கேளுங்கள்: 'அதுவே சரியென்று வைத்துக்கொண்டால், பார்ப்பனர்கள் சூத்திரரர்கள் செய்யும் வேலைகளைச் செய்யட்டும். சூத்திரர்கள்  பார்பபனர்கள் செய்யும் வேலையைச் செய்யட்டும்.' அதற்கு மனுநீதி வெறும் தொழிற் பிரிவுகளையே குறிப்பிடுகிறது என்று வாதம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R