இவர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலுக்குப் பலியாகியவர்களில் ஒருவர். ஆனால் இவரைப்பற்றித் தமிழ் மக்கள் பொதுவாக அதிகம் அறிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர் தன்னை அதிகமாக மக்கள் மத்தியில்  வெளிப்படுத்தாம் இயங்கிக்கொண்டிருந்ததுதான். இவர் ஒரு சட்டத்தரணி. மனித உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணி. இவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இலண்டனில் வாழ்ந்து செல்வச் செழிப்பில் மிதந்திருக்கலாம்.ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை.

77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கு நோக்கிய புகலிடம் நாடி வந்த தமிழ் அகதிகளுக்கா தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கக் காரணமாயிருந்ததோடு அதன் இணைக்காரியதரிசியாகவும் இருந்திருக்கின்றார். தமிழ்ப்பகுதியிலிருந்து ஆங்கிலப் பத்திரிகையான  சர்ட்டடே ரிவியூவை வெளிவரச் செய்தார். இவர் ஈழநாடு ஸ்தாபர்களில் ஒருவரான கே.சி,தங்கராஜாவுடன் இணைந்து இவற்றை வெளியிட்டார். இவை தவிர தமிழ்ப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டார். இலண்டன், தமிழகத்தில் தமிழர் தகவல் மையத்தை உருவாக்கினார். இவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்ப்பத்திரிகையொன்றை வெளியிட வேண்டுமென்ற இவரது ஆசைக்கேற்ப 'திசை' பத்திரிகை 'சற்றடே ரிவியூ'வின் சகோதரப் பத்திரிகையாக  வெளிவந்ததாக எழுத்தாளர் அ.யேசுராசா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் அ.யேசுராசா செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'திசை'யின் பிரதான ஆசிரியராகவிருந்தவர் எழுத்தாளர் மு.பொன்னம்பலம்.

இவ்விதம் இவரது பங்களிப்பு பரந்து பட்டது.  தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்ட இவர் ஜூன் 19, 1988 அன்று வெள்ளை வானில் வந்த தமிழ்ப் போராட்ட அமைப்பொன்றினால் கடத்தப்பட்டார்.  அதன் பின் கானாமல் போனவர்களில் ஒருவராகி விட்டார். இவர்தான் கந்தையா கந்தசாமி. இவரைப்பற்றிய , இவரது பங்களிப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையொன்று திசை பத்திரிகையின் 14.1989 பிரதியில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/244/24342/24342.pdf

இவரது மறைவைப்பற்றி விரிவானதொரு ஆங்கிலக் கட்டுரையினை ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜா எழுதியிருக்கின்றார். அதில் இவரைக் கடத்தியவர்கள் ஈரோஸ் என்றும், இவர் துண்டுகளாக்கிக்கொல்லப்பட்டு மலசலக் குழிக்குள் உடலின் பாகங்கள் போடப்பட்டன என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றார். அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு - https://dbsjeyaraj.com/dbsj/?p=82444


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R