அப்பா உலகைப் பிரிந்த நாளதிலிருந்து
எழுதுகோல் தாளுடன் உறவாடவில்லை.
சூரியக்கதிர்கள் வெளியை மஞ்சளாக்க
நிலவின் கதிர்கள் நீலம் காட்ட
காலங்கள் கடந்தன.
குறுந்தாடிச் சகோதரனவன்
நிலவது வட்டம் தோற்கும் அழகின் முகம்
பெண் மொழி பேசுவான்.
பெண் மொழியச் சொல்வான்.
மலர் நிறை தடாகத்தில் துள்ளும் மீன்களது நீச்சலென
மொழி புனையும் பெண்ணெழுத்தைக் காதல்கொள்பவன்.
என்னிலும் காதல் தளிர்விட்டது.
சகோதரம் பேசும் அலைபேசியின் பொழுது
நீ சமைத்துச் சாப்பிடு
மனமறியாது ஏவிவிட,
இல்லை அம்மாவின் சமையல்தான்
மெல்லிய குரலில் மனம் தடுமாற,
மின் அடுப்பு என்றாலும்
அம்மாவின் சமையல் சுவைக்கும்.
கொடுப்பினை பேசிய பின்
மீண்டும் நான் எழுதத்தொடங்கியிருந்தேன்.
smekala10@gmail.com