1.
சமூக நீதிக் காவலர் கலைஞர்!
திருக்குவளையில் பிறந்தவரே,
திருக்குறளை மீட்டவரே!
பதினான்கு வயதில் அரசியலில்
புகுந்தவரே. செயற்
பட்டவரே!
திராவிடத்தின் அணையா விளக்கே!
தமிழரின் கலங்கரை விளக்கே!
கலைஞருக்குப் பிடித்த கலைஞர்!
காளையரைக், கன்னியரைக்
குழந்தைகளைக் கவர்ந்த கலைஞர்!
கலைஞரின் பேனா,
காகிதத்தில் அலைபாடும்
தானா!
கலைஞரின் கண்ணாடி,
பார்க்கக் கூடாது என்பவரைப்
பார்க்க வைக்கும்
பின்னாடி!
கலைஞருக்குத் தமிழ்
அவர்தன் உயிர் மூச்சு!
அவர் பேச்சோ
அனைவர்தம் எதிர்பார்ப்பு.
செம்மொழியின் நாயகனே,
தமிழ் மக்களின் முதல்வனே!
பெண்ணுக்குச் சொத்துரிமை,
மக்களுக்குச்
சமூக நீதி, சுய மரியாதை தந்தாய்.
தமிழ் நாட்டின் பெருமை அது.
கலைஞர்! சமூகநீதிக்காவலர்!
கலைஞர்! சுயமரியாதைப் பெருந்தலைவர்!
கலைஞர்! சமத்துவத்தந்தை!
2.
புலவர் செ.ராசு - எம் இதய வான் கண்ணீர் அஞ்சலி!
கொங்கு வரலாற்றின் தந்தையே,
நடமாடும் பல்கலைக்கழகமாய் திகழ்ந்தவரே!
ஈரோடு மாவட்ட பெருந்துறையே,
கல்வெட்டுக்கு கலங்கரையே!
தமிழ்ப் புலமை பெற்ற புலவரே,
கொங்கு வரலாற்றின் காவலரே!
புகழ் ஓங்கிய கல்வெட்டறிஞரே,
பேரூராதீனப் புலவரே! கலைச்செம்மலே,
திருப்பணிச்செம்மலே!
நூற்றுக்கு மேல் நூல் வெளியிட்டவரே,
உ.வே.சா.விருது பெற்றவரே!
நற்குணமாக வாழ்ந்தவரே,
தொல்லியலில் ஆர்வம் கொண்டருக்கு
வழிக்காட்டியாக இருந்தவரே!
உங்கள் இறப்பு
தொல்லியல் துறைக்கே பேரிழப்பு,
தொல்லியல் அறிஞர் நீர்
கொங்கு நாட்டவர்களின் இதய துடிப்பு!
இவ்விதப் புகழுக்கு சொந்தகாரரே!
உன் மறைவுக்கு எம் கண்ணீர் அஞ்சலி!
உன் மறைவுக்கு எம் இதய வானும் கண்ணீர் வடிக்கும்!
3.
சாதித்தீயால் சாய்ந்து விட்டதா சமூக நீதி!
பார் போற்றும் சங்கத் தமிழர் எங்கே?
அண்மைக்கால சாதியத் தமிழர் இங்கே!
உயிர் வாழ்கிறதா அன்பு நெறி?
தமிழ் நாட்டின் பெருமை எங்கே?
சாதிவெறி உச்சத்தில் நாங்குநேரி.
இளைஞர் மனஹ்தில் புகுந்து விட்டதா சாதிவெறி?
கல்வி போற்றிய மாணவச் செல்வங்கள்,
மாணவர்கள் செயலில் ஊடுருவி விட்டதா
சாதிய வன்மங்கள்?
வகுப்பறையில் படிப்பு
அதில்தான் இருத்தல் வேண்டும் உயிர் நாடி!
மாணவனுக்கு அரிவாளால் வெட்டு,
தமிழ் நாட்டில் இடம் பெற்றது சூப்பர் ஹிட்டு!
ரத்தக்கரை படிந்த படி
மறைந்து விட்டதா அறநெறி?
நிகழ்கிறது ஆணவக் கொடூரங்கள்,
வேடிக்கை பார்க்கிறது மானிடக் கூட்டங்கள்!
தமிழ் மண்ணில்
சாதித் தீயால்
சாய்ந்து விட்டதா
சமூக நீதி!
சாதிதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில்
விஷம் பரவட்டும்.
4.
இணைந்தாலோ வெடிக்கும் மக்கள் புரட்சி!
வெறிபிடித்த அதிகார வர்க்கமே!
விவசாய நிலங்கள்
தமிழ் மக்களின் சொர்க்கங்கள்!
தமிழ்நாட்டின் வளமே
விவசாய நிலமே!
நிலத்தைப் பிடுங்கி
நிலத்தில் ஓட்டை போடும், மருத
நிலத்தோற்றம் அறியாத
நிலத்தைச் சீர்குலைக்கும் மத்திய அரசே!
மதில்மேல் பூனையாய்
வேடிக்கை பார்க்கும் ,
மண்ணின் பசுமை வளம்
கண்டுக்கொள்ளாத மாநில அரசே!
தமிழ் நாட்டுக்கு அழகு பசுமையே!
அதனை அழிக்க துடிக்கும் என்.எல்.சியே!
விவசாயம் இல்லையெனில் பஞ்சம் பசியே!
தானியங்கள் உற்பத்தியாகும் நிலமே!
அதன் மதிப்பு தெரியாத
ஆதிக்கக் கூட்டமே!
விளைநிலத்தில் கால்வாய்
எதற்கு நீ போடுவாய்?!
போராட்டத்தில் கைதாகியது பாட்டாளிகளே!
குரல் கொடுங்கள் தமிழ் கூட்டாளிகளே!
என்.எல்.சி எதிர்க்கும் தமிழ் நாட்டுக் கட்சி!
எங்கும் இணைந்து மத்தியை
எதிர்த்தாலோ மக்கள் புரட்சி!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.