ECONOMYNEXT – A view that is widely propagated that ancient Sri Lanka was simply based on agriculture is false, but the island was trading actively along East West trade routes, which contributed to its prosperity, a top economist has said, a phenomenon that is also supported by accounts of ancient visitors to the island. "From ancient times, Sri Lanka was a country which had depended on both agriculture and trade for prosperity," W A Wijewardene, wrote in his weekly column in Sri Lanka’s Daily FT newspaper.
வரலாற்று ஆய்வாளர்கள் பலர் பண்டைய காலம் முதல் ஈழம் வர்த்தகத்தில் முதன்மை வகித்துவந்துள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றனர். மொகஞ்சதாரோ ஹராப்பா நாகரிக காலத்திலிருந்தே லங்கையுடனான வர்த்தகத் தொடர்பு பல்வேறு நாடுகளோடும் தொடர்பு பட்டதாக காணப்படுவதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆபிரிக்க நாடுகளான எதியோப்பியா, கிறீஸ், உரோம், பாரசீகம், சீனா மற்றும் யாவா, சுமாத்திரா போன்ற நாடுகளோடு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்களைக் காணமுடிகின்றது. இலங்கை வங்காள விரிகுடாவின் மையத்தில் அமைந்திருப்பதும் பல்வேறு துறைமுகப்பட்டினங்களைக் கொண்டிப்பதோடு இலங்கையில் காணப்படும் வளங்களும், விவசாய உற்பத்திகளும் காரணிகளாகின்றன. இலங்கை உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கும் செய்தி சங்க இலக்கியங்களிலேயே இடம்பெற்றுள்ளன என்பதைக் காணமுடிகின்றது. பட்டினப்பாலையில் வரும்.
நீரின் வந்த நிமிர்பரிப் புலவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும்பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரிதியும், காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு ( பட்டினப்பாலை 185-197)
என்னும் செய்யுள் வரிகள் தொனறு தொட்டு ஈழத்தோடு வர்த்தக் தொடர்பைக் கொண்டுள்ளது, தமிழ்நாடு
என்பதை தெளிவுபடுத்தகின்றது. தென் கடலில் இருந்து முத்துக்களும், குணக் கடல், குணக்கு என்றால் கிழக்கு, எனவே கிழக்குக் கடலில் இருந்து சீனப் பட்டும், கங்கையில் இருந்து வாரியும், வருவாயும், காவிரியாற்றால் விளைந்த பொருள்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவும், காழகத்து, (காழகம் என்றால் கடாரம்) கடாரத்துப் பொருள்களும் வந்து குவிந்து கிடக்கும் தெருக்களை உடையது காவிரிப் பூம்பட்டினம் எனப் பெருமை பொங்க முழங்குகிறது பட்டினப்பாலை. இதனைச் சிலப்பதிகாரமும உரைக்கின்றது. உற்று நோக் கும் போது ஈழத்திற்கும் இந்தியாவிற்கு மட்டுமல்ல கிழக்காசிய நாடுகளுக்கும் தீவகம் உற்பத்திப் பொருட் களை அனுப்பியுள்ளமை தெரியவருகின்றது. புகையிலை மற்றும் நெல் உற்பத்தியில் புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு, ஊரெழு என்பன முதன்மை பெற்றவையாக காணப்பட்டுள்ளன. புகையிலை ஏற்றுமதியில் புங்குடுதீவு ஐரோப்பியரின் வருகை வரைக்கும் முதன்மை பெற்று விளங்கியுள்ளது. இஸ்லாமியர் யாழ்ப் பாணத்தில் நல்லூரை அண்டிய பகுதிகளில் குடியேறி வர்த்தகத்தில் ஈடுபட்டமையோடு சாட்டியை அண்டிய துறைமுக நகரங்களிலும் இஸ்லாமியர் இன்றும் வாழ்ந்துவருவதற்க அவர்களின வர்த்தகத் தொடர்பே காணமாகும். இவற்றை மேலோட்டமாக அலசுகின்றது இக்கட்டுரை என்னும் வரலாற்றாய்வாளர் “விஜனின் வருகைக்கு முன்னர் இலங்கை ஒரு சுதந்திரமான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது” எனக்கு குறிப்பிடுகின்றார்.
சங்க இலக்கியங்களான அகநானூறு, குறுந்தொகை மற்றும் நற்றினையில், ஈழத்துப் பூதந்தேவனாரின் பாடல்களும் இடம்பெற்றிருப்பது, ஈழத்து இலக்கியச் செழுமையையும், அதன் தொன்மையையும் உணர்த்துகிறது.
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விஜயன் அங்கு அரசாட்சி செய்த இயக்க குல அரசகுமாரி ‘குவேனியை’ திருமணம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையைக் கெண்டுவந்துவிடுகின்றான் என்பதையும். குவேனி என்னும் அவனது மனைவி அவனுக்கு நெல் அரிசிச் சோற்றை சமைத்து கொடுக்கும் செய்திகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. மகாவம்சம், சூளவம்சம் போன்றவற்றில் இப்பதிவுகளைக் காணமுகின்றது. சங்ககாலத்து வணிகர்கள் மிகவும் நேர்மை மிக்கவர்கள் என்பதை பின்வரும் பாடல் வரிகள் கொண்டுள்ளன.
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்பநாடிக்,
கொள்வதூஉம் மிகை கொளாது,
கொடுப்பதூஊம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும் (பட்டினப் பாலை206--211)
தமிழகத்தில் சிறந்துகாணப்பட்ட காவிரிப்பூம் பட்டினத்தோடு வர்த்தக உறவைக் கொண்டிருந்தது ஈழம்.என்பதற்கு தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வர்தகம் செய்தவர்கள் பற்றிய வரலாறுகள் சான்று பகர்கின்றன. மாதோட்ட நன்னகர், பண்டைய கால வர்த்தத்தில் மேம்பாடு கொண்டு விளங்கியது என்பதற்குப் பல்வேறு சானறுகள் காணப்படுகின்றன. கிரோக்க, உரோம, பாரசீக, சோழ கால நாணங்களை அகழ்வாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மன்னார் முத்துக் குளித்தல் தொழிலில் உன்னத நிலையில் இருந்துள்ளது என்பது பல்வேறு ஆய்வாளர்களாலும் பதிவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சியின் போது முதலில் மன்னார் துறையில்தான் தலைமையகத்தை அவர்கள் வைத்திருந்தனர். ஆனால் வர்த்தக மேம்பாடும் நாட்டின் நிருவாக நிலைமைகளையும் கருத்திற்கொண்டு கொழும்பிற்கு தலையகத்தை மாற்றியதான குறிப்புக்களை ஆங்கில வரலாற்றுப் பதிவுகளிலும், நிருவாகப் பதிவுகளிலும் காணமுடிகின்றது.
இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான்துறை, மடத்துவெளித்துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’என்ற இடத்தில் ஒல்லாந்தரால் இறங்கு துறையில் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றாகும். எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இஸ்லாமியர்கள் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தமையையும் அறியமுடிகின்றது. அவர்களால் பெருக்கு மரம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குதிரை, மற்றும் கழுதைகளுக்கான உணவிற்காக அந்த மரத்தை நாட்டியுள்ளனர் என்பது வரலாறு. இந்த மரம் பெருமளவில் மன்னாரிலும் வேறு பிரதேசங்களிலும் காண்படுகின்றன. சிறப்பாக புங்குடுதீவில் இந்த மரம் பேணிப் பாதுகாக்கப்படுவது பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்பது குறிப்பிடத்தகது. அங்குள்ள ஒரு பெருக்க மரத்தை சுற்றி பெரியதொரு பூங்கா அமைக்கப்பட்டு அது சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டுள்ளமை பலரும் கண்டுகளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே புங்குடுதீவு உட்பட சப்த தீவுகள் எனபப்படும் வேலணை, நயினாதீவு, காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு என்பன பண்டைய வர்த்தகத்தோடு தொடர்பு உடையன வாகக் காணப்பட்டுள்ளன. குறிப்பாக ஊர்காவற்துறை துறைமுகம் இந்தியாவிற்கு அண்மித்துக் காணப்படுவது இந்திய இலங்கைப் போக்குவரத்திற்கும் வர்த்தகத்திற்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. நெடுந்தீவில் இருந்த பெருமளவான பால் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள சிவதலத்திற்கு காலைநேர அபிசேகத்திறகான பாலை எடுதுச் சென்றதான வரலாற்றுக் கதைகளும் உண்டு. பாய்மரங்கள் மிக்க குறுகிய நேரத்திற்குள் கரையை எட்டுவதற்கு மிக அண்மையில் இருப்பதும் நெடுந்தீவில் நல்ல இனப் பசுக்கள் வளர்க்கப்பட்டமையும் காரணிகளாகின்றன. நெடுந்தீவு விலங்கு வளர்ப்புக்கான காலநிலை அதாவது பசுந்தீவு என அழைக்கப்டும் அளவிற்கு புற்றரை பரந்து காணப்பட்டதும், இயற்கை வளம் என்பன காரணங்கள்.
பண்டைக் காலத்தில் கடல்வழி மார்க்கமே போக்குவரத்திற்கான ஒரே வழியாகக் காணப்பட்டுள்ளது. இலங்கேஸ்வரன் விமானத்தை வைத்திருந்தான் என்னும் இதிகாசக் கதையுடன் காற்றுவழிப் பணங்கள் இடம்பெற்றன எனினும் அவற்றை மக்கள் பாவித்தற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படவில்லை.
மூவேந்தர் காலத்தில் யாவா, பர்மா, இந்தோனேசியா. போன்ற நாடுகளுக்கு யானை ஏற்றுமதியோடு உள்ளுரில் விளையும் தோட்டப்பயிர்களான புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளும் வெண்காயம் போன்றனவும் காடுபடு திரவியங்களும் அனுப்பப்பட்டுள்ளன. உடைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வர்த்தகம் செய்தமையும் தீகவத்திற்கு இஸ்லாமியர்களின் நடமாட்டத்தைக் குறிப்பதோடு அவர்கள் மண்கும்பான் என்னும் இடத்தில் பள்ளி வாசலையும் அமைத்து நிரந்தரமாக வாழ்ந்தமைக்கு மீன்பிடியோடு வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்கு அங்கு வாய்ப்பாக அமைந்த கடலோரமாக அமைந்தமை யாலேயாயாம்.
புங்குடுதீவிலுள்ள சோழனோடை, சோழகன்புலன் முதலிய இடப்பெயர்கள் சோழராட்சியின் கீழ் இத்தீவுகள் இருந்துள்ன என்பதையும் சோழ தேயத்தவர்கள் குடியேறியிருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சோழரது நாணயங்கள் , பொலநறுவை, தம்பதெனிய, யாப்பகூவ, கோட்டை மன்னர்களின் நாணயங்கள் தீவகத்தில் கிடைத்துள்ளன. சேது நாணயங்களும் ஜரோப்பிய நாணயங்களும் அவர்களின் மேலாதிக்கம் நிலவியதை காட்டுகின்றன.
பன்னாட்டு வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் தீவகத்திலும் நிலவி வந்தன. இந்தியத்தொடர்புகளை விட சீனா,கிரேக்க, உரோம, அரோபிய வர்த்தக தொடர்புகளும் நிலவியிருக்கலாம். நயினாதீவு (navalan Teevu/ Nagadeepa)உள்ள பாரக்கிரமபாகுவின் கற்பலகைச் சாசனத்தின் மூலம் ஊர்காவற்றுறையிலே நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகம் பற்றிய தகவல்களை அறியமுடிகின்றது. கி.பி 1922இல் அல்லைப்பிட்டியிலே 179 குஜராத் பொற்காசுகள் கிடைக்கபெற்றன. இவை ஈழத்திற்கும் வட இந்தியாவிற்குமான கடல் கடந்த வர்த்தகத்தையும் அறியத்தருகின்றது.
சீனத் தொடர்புகளைக் காட்டும் சான்றுகளும் குறிப்பிடத்தக்கன. வேலணையின் மேற்குகரையில் உள்ள சீனன்கோயில் எனுமிடத்திலே சீனக்குடியிருப்பு ஒன்று இருந்தாக தெரிகின்றது. நயினாதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை முதலிய இடங்களிலும் சீனச் சாடிகள் கிடைத்துள்ளன. அல்லைப்பிட்டியிலே 1977இல் பேராசிரியர் ஜோன்ஸ் கார்வெல் நடத்திய அகழ்வாய்வின் போது சீனச்சாடிகள், மட்பாண்டங்கள் முதலிய வற்றின் துண்டுகள் வெளிவந்தன. இவ்வகழ்வாய்வின் பயனாக இவ்விடத்திலே பழைய இந்துக் கோயில் ஒன்று இருந்தற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இவை கி. தொடக்கம் சில நூற்றாண்டுகளாய் நிலவிய சீனவுடனான வர்த்தகத் தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன. இன்று தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கீழடி அகழ்வாய்வுகள் மேலும் பல தகவல்களைத் தருவதாக உள்ளன. எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தீவகத்தில் உள்ள இடப்பெயர்கள் சிலவற்றிலே சில பழைய தமிழ் வழக்காறுகளும் காணப்படு கின்றன. துருத்தி என்பது இரும்மை உருக்கி ஆயுதங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் உலைமுகம் எனப்படும் காற்று ஊதி தீயை ஏற்படுத்தும கருவியாகும். அத்தோடு அச்சொல் தீவையும் குறிக்கும் சொல்லாகவும் உள்ளது.
திருமுருகாற்றுப்படையில் இக்கருத்தில் உள்ளது. புங்குடுதீவிலே குறிக்கட்டுவானுக்கும் பிரதான தீவுக்கும் இடையேயுள்ள சிறுதீவு நடுவுத்துருத்தி என அழைக்கப்படுகின்றது. ஓடையில் வேகமாக வீசும் காற்றின் பயனாக இப்பெயர் பெற்றிருக்கலாம். பசுத்தீவு (Delft) என அழைக்கப்படும் நெடுந்தீவிருந்தும் அருகில் உள்ள கச்ச தீவில் இருந்தும் பால், தயிர், நெய் முதலியன இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டமை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
ஜரோப்பிய ஆட்சியில் தீவகப் பகுதி சிறப்புப் பெற்ற பிரதேசமாகவே காணப்படுகின்றது. தாய் நாட்டில் உள்ள அம்சங்கள் தீவகத்திலே காணப்பட்ட படியாற் ஒல்லாந்தர் தாய் நாட்டிலுள்ள இடப்பெயர்கள் சில வற்றை இவற்றிற்கு சூட்டினர். வேலணையினை லெய்டென் (Lydon Isaland) எனவும் காரைதீவினை அம்ஸ்ர்டம் (Amstrdam) எனவும் நெடுந்தீவினை டெல்ற் (Delft) எனவும் பெயர் சூட்டினர்.
அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்த மக்கள் அத்தர் போன்ற வாசனை தைலங்களையும், சங்கு, மயில், போன்ற வற்றையும் விற்றதோடு இலங்கையில் கிடைத்த மாணிக்கக் கற்களையும் மற்றைய பொருட் களையும் பண்டைத் துறைமுகமான மாதோட்டத்திலிருந்து புங்குடுதீவுக்கு கொண்டுவந்து பட்டுப்பாதை (Silk way) வணிகர்களுக்கு விற்றனர். புங்குடுதீவில் பண்டமாற்று வணிகம் நடந்ததன் உண்மையை திகழியில் கிடைத்த சீன மட்பாண்டங்களும் ரோமாபுரிக் காசுகளும் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் கி பி 1311ம் ஆண்டு புங்குடுதீவு வந்து கோட்டைகட்டி வாழ்ந்த பாண்டிய இளவரசி வீரமாதேவி எழுதிய நாட்குறிப்பும், கி பி 1685ம் ஆண்டு புங்குடுதீவுக்கு வந்த Portugal Captain John Ribeyro என்பவரும் எழுதிய குறிப்புகளும் சொல்கின்றன.
போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆட்சியினை நினைவூட்டும் கோட்டைகள் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் முதலிய இடங்களில் இன்றும் உள்ளன. ஒல்லாந்தர் நெடுந்தீவிலே குதிரை வளர்த்தலை ஊக்கப்படுத்தி வந்தனர். அராபியர், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து நல்ல இனக் குதிரைகளை இங்கு கொண்டு வந்து பெருக்கினர். ஜரோப்பியரால் இங்கு கிறிஸ்தவ, புரட்டஸ்தாந்து மதமும், நயினாதீவு, மண்கும்பான், சாட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம் குடியிப்புகள் சில உள்ளன.இஸ்லாமியர்கள் மட்டுமல்ல சீன நாட்டினர், யாவா நாட்டினர், பர்மா நாட்டினர் எனப் பல தேயத்து மக்களும் வந்து வர்த்தகம் புரிந்துள்ளமையை அறிய முடிகின்றது. இதனை நோக்கும்கும்போது பட்டினப்பாலையில் வரும் பாடல் அடிகள் நினைவுக்கு வருகின்றன. எமது மூதாதையிரடம் கொலை, கொள்ளை போன்ற வன்செயல்கள் பெருமளவில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை அறியமுடிகின்றது. அதற்கான வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கிடைக்கவில்லை. அங்ஙனமாயின் மக்கள் அமைதியாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்றுதானே கருதவேண்டியுள்ளது.
கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர் 205
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாத 210
பல்பண்டம் பகர்ந்துவீசும்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
குடிமக்களுக்கு நிம்மதி எங்கிருந்து வந்தது? அவர்களின் வாழ்க்கைப் பாங்கிலிருந்து வந்தது. வாழ்க்கைப் பாங்கு எப்படி இருந்தது? கொலைத்தொழிலை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். களவுத்தொழிலை அவர்கள் இல்லாமல் செய்துவிட்டார்கள். தேவர்களைப் பேணிப்பாதுகாத்தனர். தேவர்களுக்கு வேள்வி உணவை ஊட்டினர். பால்மாடுகள் மட்டுமல்லாமல் காளைமாடுகளையும் அவர்கள் பேணிவந்தனர். நான்மறையாளர்களின் புகழைப் பரப்பினர். பசித்தவர்களுக்கு உணவு படைக்கும் போது சுட்ட பலகாரங் களையும் சேர்த்துப் படைத்தனர்.
இப்படியெல்லாம் வாழ்வதுதான் புண்ணியம் என்று கருதினர். இப்படிப்பட்ட வாழ்க்கையில் முட்டுப்பாடு இல்லாமல் பிறருக்கு ஈரநிழல் தந்து வாழ்ந்து வந்தனர் தமிழர் என்பதனை இவ்வரிகள் எடுத்துக் காட்டு கின்றன. வள்ளுவர் வணிகம் பற்றிக் குறிப்பிடும்போது வணிகம் செய்வோர் மற்றவர்களிடமிருந்து வாங்கி விற்கும் பொருட்களை தம்பொருள்போலப் பேணிப் பாதுகாத்து செயற்படவேண்டும் எனக்குறிப்பிடுகின்றார்.
வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம்போல் செயின். (குறள் 120)
இவ்வித பண்பார்ந்த பழக்கவழக்கமும் நம்பிக்கையும்தான் எந்த நாட்டவரையும் வரவேற்று அவர்களோடு நட்புப்பூண்டு வர்த்தகம் செய்ய வைத்தது என்பதனை புங்குடுதீவு வர்த்தகர்கள் தென்னகத்தில் உள்ள குக் கிராமங்களுக்குச் சென்று வர்த்தகத்தில் ஈடு பட்டதை காணமுடிகின்றது. சிங்கள, தமிழ் என்ற பாகுபாடு காட்டப்படாத பொற்காலமாக அது அமைந்திருந்த். ஆங்கில ஆட்சியின் பின்னர்தான் இனவாத அரசியல் புகுத்தப்பட்டது என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு இரு தரப்பு அரசியல் வாதிகளுமே காரணம் என அடித்துக் கூறலாம். ஆரம்பத்தில் காணப்பட்ட பண்ட மாற்றுப் பொருளாதாரத்தில் மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அவர்களிடம் உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கி தேவைப் படுவவோருக்கு விற்பனை செய்யும் ஒரு சமூகத்தேவையை பூர்த்தி செய்யும் பண்பினைக் காணமுடிகின்றது.
Ancient Sri Lanka was a trading hub, not just a farm: (Economy Next> economist Tuesday July 16, 2019) எனற கட்டுரையில் W A Wijewardene பின்வருமாறு இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடுகின்றார்:
இந்தியமயமாக்கலுக்கு முந்தைய காலத்தில் வர்த்தகம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களால் தீவின் காலனித்துவத்திற்கு முன்பே, உலகின் பிற பகுதிகளிலிருந்து பொருட்களைக் கொண்டு வந்த வணிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து வாங்கப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற வணிகர்கள் இதற்குச் சென்றதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, கிழக்கை மேற்குடன் இணைக்கும் வசதியான கடற்பாதை வழித் தடத்தில் ஈழம் இருப்பதன் மூலம் அதன் இருப்பிட நன்மையைத் தட்டுவதன் மூலம் நாடு அதன் செழிப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அதன்படி, கடற்பாதை வழித்தடத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, வர்த்தக நிலையங்களில் சேமித்து, வருகை தரும் வர்த்தகர்களுக்கு இலாபத்தில் விற்கப்பட்டன.
1153 முதல் 1186 வரை ஆட்சி செய்த பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் அரக் என்ற நிலத்திலிருந்து மது இறக்குமதி செய்யப்பட்டதாக செனரத் பரணவிதான, எகிப்திய பயணியான (Cosmas Indicopleustes) மேற்கோள் காட்டியுள்ளார். “ராஜா தயாரிப்பில் ஏகபோக உரிமை வைத்திருந்தார், அதை மீண்டும் வணிகர்களுக்கு விற்றார்”, என்று குறிப்பிட்டுள்ளதாக விஜேவர்தன எழுதியுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது. அத்தோடு இலங்கையின் கல்விக்கொள்கை பற்றிக் குறிப்பிடும் போது, “இனக்கலவரத்துடன் முடிவடைந்த சில ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல, அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஒரு மையப்படுத்தப் பட்ட பாடத்திட்டத்தின் மூலம் தவறான தேசியவாத வரலாறு கற்பிக்கப்படுகிறது என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன. விவசாயம் என்பது ஐரோப்பிய கிராமிய-தேசியவாதத்தின் துணைக்குழுவாகவும் இருந்தது. இன்று ட்ரம்பிஸ்ட் தேசியவாதிகள் சமூக நல சேவைகளுக்கு எதிராக ஒரு தொழில்துறை தளத்தை மகிமைப்படுத்துகின்றனர். அந்தப்பின்னணியில் இலங்கையிலும் விவசாயவாதிகள் தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கு எதிராக, விவசாயத்தை மகிமைப்படுத்தினர்” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக எழுதியுள்ளார்.
“இலங்கையின் எதிர்காலம் நிலப்பிரபுத்துவ விவசாயப் பொருளாதாரத்தை மீள ஸ்தாபிப்பதில் தங்கியிருக்க வில்லை, மாறாக எண்ணிம தொழில்நுட்பப் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட உலகளாவிய ரீதியில் இணைக்கப் பட்ட உயர் தொழில்நுட்பம்” என விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
“விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு கூட, இலங்கை விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மற்ற பயணிகளால் எழுதப்பட்ட நூல்கள் இலங்கையின் முக்கியத்துவத்தை வர்த்தக மையமாக குறிப்பிடுகின்றன” என்று குறிப்பிடும் அவர் “ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Christian Topography, எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகரும் மதகுருவுமான இண்டிகோபிளியஸ்டெஸ் (Cosmas Indicopleustes) ஒரு இந்திய யாத்திரிகர், அவர் இலங்கையை சீலத்வியா அதாவது வணிகத்தின் சிறந்த இடம் என்று தீவின் நுழைவாயிலைப் பற்றி விரிவான விளக்கங் களை அளித்தார். அவர் பயணம் செய்து, ஆசியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சமூகங்களைப் பற்றி எழுதியுள்ளார்,
இலங்கைத் தீவில் பாரசீக கிறிஸ்தவர்களும் உள்ளனர், அவர்கள் அங்கு குடியேறினர், பெர்சியா மற்றும் டெக்கானில் இருந்து நியமிக்கப்பட்ட ஒரு எழுதுவினைஞர் மற்றும் முழுமையான திருச்சபை சடங்குகளை மேற்கொள்ளும் மதபோதகர் இருந்தனர் என்று கொஸ்மாஸ் எழுதினார், இந்தத் தீவில் அவர்களுக்குப் பல கோயில்கள் உள்ளன,
அந்தத் தீவில் ஒருவரோடொருவர் போரிட்ட இரண்டு மன்னர்கள் இருப்பதாகச் சொன்னார். ஒரு சீன பௌத்த துறவியான Fa-Hien (Faxian), பயணிகளையும் ஏற்றிச் செல்லும் ‘பெரிய வணிகக் கப்பல் என வர்ணிக்கப்படும் தீவுக்கு வந்த பின்னர், இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கப்பல் கட்டுமானங்கள் பற்றியும் விவரித்துள்ளார்.
துறவி பழங்குடி மக்களுடன் (ஆவிகள் மற்றும் நாகர்கள் அல்லது மூதாதையர்கள் மற்றும் நாக வழிபாட்டாளர்கள்) வர்த்தகம் செய்த முந்தைய வணிகர்களைப் பற்றி குறிப்பிடுகிறார், அவை அந்த நேரத்தில் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம். 'கடத்தல் நடக்கும் போது, ஆவிகள் தங்களைக் காட்டவில்லை' என்று ஃபா-ஹியன் விவரித்தார்.
அவர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற பொருட்களை அவற்றுடன் இணைக்கப்பட்ட விலையின் லேபிள்களுடன் குறிப்பிடுகிறார்கள்; அதே நேரத்தில் வணிகர்கள் தங்கள் விலையை அவற்றுடன் இணைத்தனர், அதே நேரத்தில் வணிகர்கள் விலைக்கு ஏற்ப தங்கள் கொள்முதல் செய்தார்கள்: மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றனர். மிதமான வானிலை மற்றும் செழிப்பான தாவரங்கள் பற்றிய கதைகளைக் கேட்ட பிறகு, வணிகர்களின் நாடுகளில் இருந்து மக்கள் பெரும் தேசமாக மாறும் வரை அதிக எண்ணிக் கையில் குவிந்தனர். மகாவம்சத்தில், குவேனி, இந்திய குடியேற்றவாதியான விஜயாவை மணந்த ஒரு பூர்வீக இளவரசி, ஒரு ஆவியாக (யக்ஷா) விவரிக்கப்படுகிறார். விஜேவர்தன, குவேனி விஜயாவின் கப்பலில் இருந்து அரிசி தானியத்தில் இருந்து உணவை சமைத்ததாக விவரிக்கப்பட்டது, இது தானியங்கள் ஆரம்ப கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டுகிறது. அவரது காலத்தில் பா-ஹியன் இலங்கைக்கு வந்த போது வெளிநாட்டு வர்த்தகர்கள் இருந்தனர். நகரத்தில் பல வர்த்தக பெரியவர்களும் சேபிய வணிகர்களும் இருந்து உள்ளனர், அவர்களின் வீடுகள் அரசமாளிகைகள் போல பெரிதாகவும் அழகாகவும் உள்ளன” என்று அவர் குறிப்பிடுகின்றார். பாதைகள் நல்ல நிலையில் ஒழுங்காகஉள்ளன.
200 க்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்த ஒரு பெரிய வணிகரைத் தீவை விட்டு வெளியேறியதாக Fa-Hien தான் ஒரு பெரிய வணிகரோடு நாட்டைவிட்டு வெளியேறியதாக் குறிப்பிட்டுள்ளார் நெடு வழியே செல்லும் ஆபத்துகளை அன்றைய சர்வதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள், கடற்கொள்ளையர்களின் துணிச் சலான செயல்களால் பாதிக்கப் பட்டமையையும எடுத்துக் காட்டுகின்றது, சரக்குகளின் ஒரு பகுதியை இழந்தது, சரக்கு வர்த்தகத்துடன் பயணித்து வெவ்வேறு பொருட்களுடன் திரும்பி வர வேண்டியிருந்தது. கப்பல் புயலில் சிக்கி கசிவு ஏற்பட்டது. வணிகர்கள் சிறிய கப்பலில் செல்ல விரும்பினர்; ஆனால் அதில் இருந்தவர்கள், பலர் வருவார்கள் என்று பயந்து, இணைக்கும் கயிற்றை அறுத்தனர். வணிகர்கள் மிகவும் பீதியடைந்தனர், உடனடி மரணத்தின் அபாயத்தை உணர்ந்தனர். கப்பல் நிரம்பிவிடும் என்று பயந்து, அவர்கள் தங்கள் பாரமான பொருட்களை எடுத்து தண்ணீரில் வீசினர். அவர்கள் இறுதியில் கப்பலை சரிசெய்து பாதுகாப்பாக இந்தோனேசியாவை (ஜாவா-டிவிபா) அடைந்தனர் எனப் பாகியனது குறிப்புக்களை எடுத்துக்காட்டுகின்றார் கட்டுரையாளர் விஜயமானே.
இவ்விதமாக ஐரோப்பியருக்கு முந்திய இலங்கையின் வர்த்தக் பற்றிய சுவார்சியமான செய்திகளை அறிய முடிகின்றது. 16ம் நூற்றாண்டில் தூத்துக்குடிக்க வந்த ஆங்கில மாலுமி இலங்கையில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனதுகப்பலை திருத்தி பாய்மரத்தை மாற்றுவதற்காக வந்தபோது அரசவிசுவாசிகளால் சிறைபிடிக்கப்பட்டுக் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அக்குரச பிரதேசத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக திறந்தவெளிச் சிறையில் வைக்கப்படுகின்றார். அவரும் அவரது மகனும் கைதிகளாக காலத்தை ஒட்டிய வேளை தந்தை இறந்துவிட மகன் காட்டுமார்க்கமாக புத்தளத்தை அடைந்து அங்கிருந்து போர்த்துக் சீசருடன்நட்புக்கொண்டு நாட்டிற்குத் திரும்புகின்றார். அவர் வாழ்ந்த காலாத்தில் எத்தனையோ முறை மயற்சித்தும் அரதசனை அணுகமுடியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை வரலாறு பல்வேறு வரலாற்றுப் பதிவுகளைத் தரும் ஒரு வளந்தரு பூமியாக பூகோளப்படத்தில் இடம்பெற்றுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.