முன்னுரை :
பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலின சமத்துவ கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இலங்கங்களையும், குறிக்கப் பயன்பட்டு வருகிறது. தமிழில் பெண்ணியம், பெண்நிலை வாதம், பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் பயன்பட்டு வருகிறது. பெண்ணியம் பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான அடக்குமுறைகளையும், எதிர்ப்பது மட்டுமன்றி, பெண்களின் மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துகின்றது. இதனையே புட்சர் “பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதாரத் துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே” என்கின்றார். பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் அல்லர். இருப்பினும் ஆண் நாயகத்தையும் வெறுப்பவர்கள். பெண்ணியம் ஆண்களுக்கும்ää பெண்களுக்கும் பொதுவான நேர்மையான சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் கூடிய சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்புகின்றது.
பெண்களின் அவலநிலை :
உயிரற்ற ஒரு பொருளுக்கு தரும் மதிப்பையும்ää மரியாதையும் இந்த சமூகம் உயிருள்ள ஒரு பெண்ணுக்குத் தருவதில்லை. ஆனாதிக்கத்தினால் பெண்கள் ஊமையாய் போகின்றார்கள். இந்தியாவிற்கு இந்தியா என்ற பெயர்தான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. வெள்ளைக்காரனுக்கு இந்தியனும் அடிமைதான். பணக்காரனுக்கு ஏழை மக்கள் அடிமைதான். ஆணுக்கு பெண்ணும் கடைநிலை அடிமைதான். வாடிய பயிரைக் கண்டு வாடிய இந்த மனித சமுதாயம் ஏன் ஆனாதிக்க அடக்குமுறையால் வாடும் பெண்ணையும் அவள் உணர்வையும் ஏன் மதிக்கவில்லை. இந்நிலை இன்றும் மாற்றம் பெற்றாலும் இன்னும் நாட்டில் சில ஆணாதிக்க நரிகளும், நாய்களும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. நடைமுறை வாழ்வில் தலைகீழ் மாற்றம்தான் பெண்ணே பெண்களை கீழ்நிலைக்குத் தள்ளி நீ மெண்மையானவள், உறுதியற்றவள் என்று உணர்வை கொன்று புதைக்கும் தாய்மார்கள் இன்றும் இருக்கின்றனர்.
வண்டி ஓட்டிகளான ஆண்கள் இனியாவது வண்டி மாடுகளில் ஒன்றாக மாற வேண்டும். மனித சமுதாயத்தில் ஆணும்ää பெண்ணும் இணைந்து உணர்வுகளை பரிமாறி வாழ்வது தான் தன் குடும்ப வாழ்க்கை ஆணுக்கு ஒரு நீதி வழங்கி பெண்ணுக்கு அநீதி வழங்கிடக்கூடாது. படுக்கை அறையை பங்குபோடும் ஆண் சமுதாயம் பெண்ணின் உணர்வுகளை மதித்துக் குடும்பச் சுமையையும் பங்கிட வேண்டும். சந்தேகம் என்பது தீயைவைக்கும். நம்பிக்கைத்தான் கணவன் மனைவியை வாழ வைக்கும். கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது. சீதையை சந்தேகத் தீயில் இறக்கிய ராமன் உண்மையில் உத்தமனா? உலகினைக் காக்கும் இறைவனாக இருந்தாலும் கட்டிய மனைவி மீது சந்தேக அம்புகளை தொடுப்பதில் குறைந்தவரில்லை. மனிதனுக்கும் ஆணுக்கும் பெண் சமம் என்று வேடமிடும் ஆண் சமூகமே நாணயமற்ற முறையில் விமர்சனம் செய்யும் பெயர்கள் அனைத்தும் உங்களை பொருத்த வரை அவை வெறும் சொற்கள் ஆனால் பெண்ணுக்கு அவை ஒவ்வொன்றும் காயப்படுத்தும் கற்கள்.
அடுப்படி சமுதாயம் :
சமையலறை என்பது பெண்கள் வாங்கி வந்த சாபமாகிப் போனது. எப்படிப்பட்ட செல்வந்தராக பிறந்த பெண்ணாக இருந்தாலும் இதற்கு விதி விலக்கில்லை. பெண் என்ன சமையல் இயந்திரமா? சமையலறைதான் அவளின் உலகமா? அதிகாரத் தோரணையில் கத்தும் ஆண்களுக்கு அடிமையாகவும் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவதற்கு முன்புவரை மூச்சுவிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் தன் உணர்வுகளை பொசுக்கி குடும்பத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் பெண்களின் நிலையை கூறுகின்றார். வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில்ää பேருந்தில் என்று பெண் செல்லும் இடமெல்லாம் சேர்ந்துத கொள்கிறது வேதனையும், சோதனையும் தான் பெண்களுக்கு
பெண்ணே!
நீ பிறக்கும் போது
அடுப்படியில் பிறந்தாயா?
வாழும் போதும்
அடுப்படிதான் கதியென்றால்
சாகும் போதும் கூட அதுவா கதி?
பெண்களின் கனவுகளைத் திருமணம் என்னும் நிலையில் தள்ளி அவர்களின் கனவுகளை கனவாகவே போக விட்டீர்கள். கட்டிய கணவனோ குடித்து, குடித்து குடியை கெடுத்து வாழ வந்த பெண்ணை வாழாவெட்டியாக்கியது இன்றைய சமுதாய நிலை.
பெண்களுக்கு எதற்கு அழகு :
பெண்கள் எதற்காக தங்கள் முகங்களை ஒப்பனை செய்து கொள்ள வேண்டும். எல்லாப் படைப்புகளிலும், இலக்கியங்களிலும், திரைப்படப் பாடல்களிலும் பெண்ணின் உடல் உறுப்பை சொற்களால் தின்னும் உவமையை எப்போதும் பயன்படுத்துவது பெண்களுக்கு ஆபத்தானவைதான். நிழலை விரும்பி உயிரற்ற பதுமைகளாக வாழும் பெண்களே சுயம் இழந்து நிஜம் அழிந்துபோகும் நிலை வந்துவிட்டது விழித்துக் கொள்ளுங்கள். ஒப்பனை அல்ல பெண்ணின் அழகு அறியாமை விடுத்து அறிவியல் உலகில் அடியெடுத்து ஓடிவா. உண்மை அழகை அறியா பெண்ணே! வண்ணப்பவுடர், கொலுசு, வளையல், நெக்லஸ், ஒட்டியானம் அல்ல அழகு. நல்ல எண்ணமும், தன்னம்பிக்கையும் தான் இயற்கையில் அழகு. இருளை விரட்டிய ஒளியை பரப்பும் ஆதவன் போல ஆடை, அணிகலனில் மோகம் கொள்ளாது அறிவுத்தேடல் ஆர்வம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பருவத்தினறும் ஒவ்வொரு முறையிலும் பெண்களின் முகங்கள் மாற்றம் பெறுகின்றன். இத்தனை முகங்களை கொண்ட பெண்ணுக்கு ஏன் காட்டவில்லை ஆண்கள் இன்முகம் பெண்ணுக்கு பெண்தான் எதிரியாகிறாள். பொருளுக்கு தரும் மதிப்பைக்கூட பெண்களுக்குத் தர மறுக்கின்றன. பெண்களுக்கு முதலில் பொன்னகைதான் திருமணத்திற்கு கேட்கின்றன.
இலக்கியத்தில் பெண்கள் :
பெண்களை இரணமாக்கி புராணங்கள் படைத்தும், சங்க இலக்கியங்களிலும்ää தங்கக் காப்பியங்களிலும் பெண்களை பேசப்படும்விதமே தனிதான். இலக்கிய காலம் முதல் இன்றுவரை பெண்ணை இரண்மாம் பாலினமாகவே பார்க்கின்றனர். படைப்புகளைப் படைக்கும் படைப்பாளிகள் பெண்ணின் உடலையும், உணர்வையும் வார்த்தைகளால் தின்னும் ஆண்மகனின் இலக்கியப் படைப்பு ஆதிக்கம் காணப்படுகிறது.
சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் செய்யவும் இந்த உலகினில் பெண்கள் உயரவும் கனவு கண்டாய் பாரதியே! ஆனால் இன்றைய சூழலிலும் பெண்களின் கனவுகள் எல்லாம் கனவாக போய்விடுகிறது. பெண்ணுக்கும், ஆணுக்கும் சமநீதி வேண்டும். பைந்தமிழைச் சீராக்க பெண்களின் மூடத்திருமணம், கைம்மை போன்றவைகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். சமூகத்தைப், பண்பாட்டைச், பகுத்தறிவைச் சீராக்கினீர்கள். சமூகத்தின் அடிமரத்தின் ஆணி வேராகிய பெண்களின் நிலையை சீராக்கவிலலையே? மனிதனாகப் பிறந்தால்தான் ஆண், பெண் வேறுபாடு என்று நினைத்தால். தெய்வங்களில் கூட பெண்களின் நிலை ஆண்களுக்கு அடிமை நிலையில்தான் உள்ளது. ஐவகை நிலங்களில பாலை நிலமாகிய வறண்ட நிலத்தில் பெண் தெய்வமும், மற்ற நான்கு நிலங்களில் செழிப்பான நிலங்களில் ஆண் தெய்வங்கள் உள்ளன. மகாபாரதத்தில் திரௌபதியை போட்டியின் விளையாட்டுப் பொருளாக வைத்து அவளுடைய பெண் என்ற நிலைதான். திரௌபதியைத் துரியோதனன் பஞ்சபாண்டவர்களை அவமானப்படுத்த சூதில் எடுத்த விலைமகள்போல் அவளைத் துன்புறுத்தினார்கள்.
முடிவுரை :
காலங்கள், காட்சிகள் மாறியிருக்கின்றன. ஆனால் பெண்கள் ஆண்களின் அடிமை நிலையில் இருந்து மாறவில்லை. பெண்களுக்கு எத்தனை இயக்கங்கள் தோன்றினாலும் அவர்களின் நிலைமை மாறவில்லை. பெண்கள் அடிமை நிலையில் இருக்க ஆண்சமுதாயம் மட்டும் காரணமாகாது. பெண்களே பெண்களுக்கு வரதட்சனை என்ற உருவத்தில் எதிரிகளாகின்றன. பெண்கள் வெளியில் சென்று சாதனை படைக்க நினைத்தாலும் பெண்கள் என்று அடக்கி விடுகின்றார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.