நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் முருகபூபதி: அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு, நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன். எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன். அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று. உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன். அவர் எங்கு வாழ்ந்தார்..? எவ்வாறு மறைந்தார்? முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள். நன்றி.
அன்புடன் - முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.       

எழுத்தாளர் குரு அரவிந்தன்: எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும்.  அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து  நாங்களும் பிரார்த்திக்கின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும். - குரு அரவிந்தன். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கா.மு.அன்சாரி: எனது இனிய நண்பர்  விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும், பதிவுகள் மூலமும் அறிந்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து  ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பொதுவாக சங்ககால இலக்கியத்திலும், குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தொல்காப்பியக்கடலில் மூழ்கி, சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார். இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும், வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும். இதற்கான, அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு  கிடைத்துக்கொண்டே இருந்தது. அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். விருதுகள் பல அவரைத்தேடிவந்தன். சமீபத்தில் அவரது அயராத, ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து, “பதிவுகளின்” ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் . இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். - கா.மு.அன்சாரி, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


முகநூலில் அமரர்  நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவரது மறைவினையோட்டிப் பலர் தமது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்கள். சிலர் தமது எண்ணங்களையும் பதிவு செய்திருந்தார்கள். அவற்றில் சில ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. எழுத்தாளர் முருகபூபதியும் மின்னஞ்சல்வாயிலாகத் தன் அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

எழுத்தாளர் முல்லை அமுதன்: காற்றுவெளிக்கும் தொடர்ச்சியாக எழுதி வந்தவர்.அவரின் எழுத்திற்கு பல பரிசில்களையும்,விருதுகளையும் பெற்றிருக்கிறார். இரண்டு மூன்று வாரங்களாக தொலைபேசி அழைப்பும் கிடைக்கவில்லை. தற்போது தான் செய்த பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. உறவுக்காரரும் கூட, அவரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

Prof. Kopan Mahadeva: Just five minutes ago I returned from a Function of Drieberg College Old Boys & Teachers Association and clicked my Facebook Account and read of my Good Fiend's Demise as announced by Giritharan Navaratnam, Editor of Pathivukal and our Facebook Friend. In fact both Mr. Karthigeyan Wijeyaratnam and I are Past Pupils of Drieberg College. He studied ONLY at Drieberg College before heentered Government Service. He and I used to call each other almost daily before he entered Hospital. His daughter Malar rang and informed me about that.  Now I am really shocked to learn of his demise. He was the Coordinator of our ELAB of which I am Chairman. Now I have lost my Right Hand. I rush to type this long comment on Giritharan's Time Line and am going to bed because I am very sleepy. Meanwhile May He Rest in Peace. -- Prof. Kopan Mahadeva.

பாலா ராம் (Bala Ram):
நேற்றுப்போல்
இருக்கிறது.
அவரது சந்திப்புப்கள்.
ஈழத்து மூத்ததலைமுறை
இன்று கண்மூடித்
தூங்குகின்றது!
ஈழவர் இலக்கிய வட்ட
உறுப்பினர்(ELAB)
சங்கஇலக்கியம் முதல் ஆங்கில இலக்கணம் வரை அத்துப்படி!
"மூத்த தலைமுறைகள்
இன்னும் சில காலம்
இருந்திடனும்,நம் இளம்
தலைமுறைகள்
இசைக்கின்ற மாவீரர்
புகழ் பாடல் கேட்டிடனும்!
ஈழம் விடிந்தது எனும்
செய்தி வந்துடனும்!"
இறப்பும், பிறப்பும்
நயதிதான் ஆனாலும்
நுணாவிலூர்
கா.விசயரத்தினம்
ஐயாவின் இழப்பு ஒரு
வற்றாத நதியாக
மாவலி முதல்
தேம்ஸ் வரை
அழகு தமிழை
அள்ளி அள்ளித்
தெளித்த நதியொன்று
வற்றிவிட்டது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள
வார்த்தைகள் இல்லை!
வாசகர் வட்டத்தில்
கோபனின் இல்லத்தில்
கேட்ட தேன் சுவை
இன்னும் காதில்
இனிக்கிறது.
Rip

குலம் பீட்டர்: ஆழ்ந்த அனுதாபம் .ஒருவர் மரிக்கலாம் .ஆனால் அவர் பதிந்து சென்ற இலக்கியங்கள் இறப்பதில்லை .,

பாடும் மீன் சிறீஸ்கந்தராஜா: ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும்.

லிங்கேஸ் லிங்கேஸ்வரன்: அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவர் நேசித்த சங்ககால இலக்கியத்தைப் பிரார்த்திக்கின்றோம்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்