அண்மையில் இலங்கையைச்சேர்ந்த 'கேலிச்சித்திரக்காரரும் (Cartoonist) ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் விபத்தொன்றில் அகால மரணமடைந்ததாக ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளன. அது பற்றிய தமிழ்வின் செய்தியினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது இழப்பால் துயருறும் அனைவரின் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
தமிழ்வின் செய்தி: சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் அகால மரணம்
கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்டகார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசியல் வாதிகளின் போலிமுகங்களைத்தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும்கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின்சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்புவதாகத் தனது இறுதி உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.
உக்ரேன் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாகவயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழக்க வேண்டிஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.
அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குடும்பஉறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி: http://www.tamilwin.com/lifestyle/01/119192