தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (2) - கடல்புத்திரன் -
"(கோல்) கால் " துறைமுகம் ( யூனெஸ்கோவினால் அமெரிக்காவின் ஏழு அதிசயங்கள் ஒன்று என பதியப்பட்டிருக்கிறது ) வீட்டை அடைந்த பிறகு , தில்லை மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும் , பூமலருக்கும் ரிம் கொட்டனே போதுமாகவிருந்தது .
வீட்டிலே , பூமலர் செய்திருந்த ' கோழிக்கறி ' பழைய நினைவு ஒன்றைக் கிளறி விட்டது . ஜெயந்தியும் " நல்லாயிருக்கிறதே " என்று ரெசிபியைக் கேட்டாள் . தில்லை " இப்படி உருளைக் கிழங்கு கறியையும் வைத்தால் ...தூக்கலாக இருக்கும் " என்றான் . " இதுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைப்பு தான் " என்று ஜெயந்தி சொல்ல பூமலர் சிரித்தாள் . யாழ்ப்பாணத்து பிளவுஸ் , மொக்கங் கடைகளில் ரோஸ்ட் கறிகளில் இந்த உப்பும் , உறைப்பும் அப்படியே இருந்தது . " முதல் நாள் மெரினேற் பண்ணி குளிர்ப்பெட்டியில் வைத்து காலையில் எடுத்து சமைக்க வேண்டும் . இங்கே என் சினேகிதி ஜீவி நல்லா சமைப்பார் . அவர் தான் சொல்லித் தந்தார் . இப்படி வைத்தால் சித்திராவும் , சுமியும் உடனேயே முடித்து விடுவார்கள் . திரேசாவின் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் " என்றாள் .
சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு , " களைப்பு இல்லை என்றால் பக்கத்தில் இருக்கிற ஒன்றை பார்த்து வரலாமே ". என்றாள் பூமலர் . " இரண்டு மணி நேரம் ஓடி கலைத்திருப்பாய் , நான் ஓடுகிறேன் " என்று தில்லை கூற (கார் ஓட்டம் ) பூமலர் தில்லையிடம் . சாவியைக் கொடுத்து கராஜ் கதவைத் திறந்து விட்டாள் . குறுக்கலான நிலைகளைத் தட்டிக் கொள்ளாமல் , ஒரு கட்டத்தில் பக்கக் கண்ணாடி ஒன்றை மடித்து விட்டே பிரயாசைப்பட்டு வெளியில் எடுத்தான் . " இந்த கண்ணாடியை மடிக்கலாம் என்று எனக்கு தெரியாதே " ....என்று வியக்கிறாள் . அரும்பொட்டு இடைவெளியில் கராஜ் கதவுகளை ஏன் அமைக்கிறார்கள் . பழைய கார்கள் தற்போதைய காரை விட அகலத்தில் குறந்தவையா இருக்க வேண்டும் . அப்ப இருந்த கட்டட விதியை ( பில்டிங் கோட்) மாற்றாமல் விட்டு விட்டார்கள் போல இருக்கிறது . இப்படியும் ஒரு ரோதனை . . வழி காட்ட செலுத்துகிறான் .