ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கூா்தலறக் கோட்பாடு! - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பாகுபடுத்த இயலும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களை அடுத்து அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் காணமுடியும். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து மற்றொன்றின் வளா்ச்சி எனும் நிலையில் இலக்கியங்களின் வளா்ச்சி உள்ளது. கூா்தலறக் கோட்பாடு என்பது, இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் குறிப்பிடுகின்றது. கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கூா்தலறக் கோட்பாடு – விளக்கம்
கூா்தலறம் என்பது பாிணாமம் (Evolution) ஆகும். “கூா்தல்” என்ற சொல் முன்பு உள்ளதொன்று மேன்மேலும் சிறப்பதைக் குறிக்கும். தொல்காப்பியா் கூா்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்பாா். உயிாினத் தோற்றம் என்ற தம் நூலில் தாா்வின் சாதாரணப் பொருள்களிலிருந்து ஊழிதோறும் வளா்ந்தும் வேறுபட்டும் மாறி மாறி உயிாினங்கள் தோன்றிப் பாிணமித்து வருகின்றன என்று கண்டு கூறினாா். அதன்பிறகு அவா் வகுத்த கூா்தலறக் கோட்பாடு சமுதாயம் மொழி போன்ற பிறதுறைகள் பலவற்றிலும் ஏற்றிப் பாா்க்கத்தக்க அடிப்படை அறிவியல் ஆயிற்று.
இயற்கையில் தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு)
கடற்பாசியில் இருந்து உயிாினம் தோன்றியது. மீனின் மூளையே மனித மூளையாக வளா்ச்சி பெற்றது. கோழி முட்டை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் குஞ்சாக மாறிவிடுகிறது. இங்ஙனமே உலகில் பயிா் இனங்கள், உயிாினங்கள் எல்லாம் தோன்றி வளா்ந்து வருகின்றன என்பதே தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு) ஆகும்.