எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:
Ambikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
Memon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.
Tam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: "மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா? அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா? அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக
என்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக
இதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி
Giritharan Navaratnam: //ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக இதை நான் எழுதவில்லை// ஜெயமோகன் நடத்திய கருத்தரங்கில் ஒருவர் கூறிய கருத்தை வேத வாக்காகக் கொள்ள வேண்டுமென்பது சரியான நிலைப்பாடல்ல. மகாலிங்கம் தற்போது இருப்பதால் அவர் கூறுவதையும் ஆதாரங்கள் இல்லாதவிடத்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் ஆகியோர் மல்லிகையுடன் மிக நெருக்கமாக 7- 71 காலகட்டத்தில் இருந்திருக்கின்றார்கள். மு.பொன்னம்பலத்தின் கதைகள், கட்டுரைகள் அதில் வெளியாகியுள்ளன. மு.த.வின் படைப்புகள் வெளியாகியுள்ளன. மு.த மல்லிகை நடத்திய சிறுகதைப்போட்டிக்கு நடுவராகவிருந்திருக்கின்றார். இந்நிலையில் பேராசிரியர் கைலாசபதியின் கட்டுரைகள் பல அக்காலகட்டத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதே சமயம் மு.த சர்வோதய இயக்கம் சார்பில் இயங்கிக்கொண்டிருந்தவர். அவர் நடத்திய போராட்டம் பற்றி ஏன் மல்லிகையிலெழுதவில்லை என்று கேட்கும் அதேசமயம் , தீண்டாமைக்கெதிராக அக்காலகட்டத்தில் நடைபெற்ற பல போராட்டங்களைப்பற்றி மு.த எழுதியிருக்கின்றாரா? ஏன் எழுதவில்லை என்றும் கேட்க வேண்டும். மேற்படி செய்தி மல்லிகையில் வெளிவரவில்லை என்பது விவாதத்துக்கு முக்கிய காரணமில்லை. கைலாசபதியின் மேலிருந்த பயமே காரணம் என்பதுதான் காரணம். நீங்கள் அதைவிட்டு விவாதத்தை இன்னுமொருகோணத்தில் திசை திருப்புகின்றீர்கள். அவ்விதப்பயம் காரணம் என்பது ஜீவாவின் ஆளுமையைச் சிதைப்பதற்குச் சமம். அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு கருத்தினை அனோஜன் தெரிவித்திருப்பது தவறு. அவர் அப்படியிருக்க சாத்தியமுண்டா என்பது பற்றி ஆராய்ந்து முடிவை எடுத்திருக்க வேண்டும். ஜெயமோகன் , தமிழக எழுத்தாளர்கள் சிலர் கூறினால் அது சரியாகத்தானிருக்கும் என்று முடிவு எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்னுமொன்று மல்லிகை தினசரிப்பத்திரிகை அல்ல. உடனுக்குடன் வெளியாகும் செய்திகளை வெளியிட. மு.த தாக்கப்பட்டது நடந்து முடிந்து பல நாட்களின் பின் மல்லிகையின் இதழ் வந்திருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் டொமினிக் ஜீவா தனிப்பட்டரீதியில் தன்
நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கலாம். அது வேறு விடயம். விடயம் கைலாசபதியின் மேல் கொண்ட பயத்தினால் டொமினிக் ஜீவா அவ்விதம் செய்தார் என்பதுதான். உங்கள் கூற்றைப்பார்த்தால் அதை நீங்கள் மறைமுகமாக ஆதரிப்பதாகத் தெரிகின்றது.
Tam Sivathasan: ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட எழுதாததைப் பெரிதாக எடுப்பது முட்டாள்தனம். ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Giritharan Navaratnam: Tam Sivathasan //ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட// தவறான கூற்று. மு.த போராட்டத்தில் உடனடியாக இறக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்து 73இல்தான் இறந்தார். அப்போது கூட அவர் போராட்டத்தில் தாக்கப்பட்டதன் காரணமாகத்தான் இறந்தார் என்பது ஊகமே தவிர, மருத்துவ ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. அப்போது அவருக்காக அஞ்சலிக் கட்டுரைகள் மல்லிகை பிரசுரித்துள்ளது. போராட்டம் நடந்து தாக்கப்பட்ட செய்தியைத்தான் மல்லிகை எழுதவில்லை. அக்காலகட்டத்தில் பல போராட்டங்கள் இவ்விதம் நடந்தன. பத்திரிகைகளில்தாம் உடனுக்குடன் செய்திகள் வருவது வழக்கம். மாத சஞ்சிகைகளில் அவை வருவது குறைவு. அக்காலகட்டத்தில் மல்லிகை மட்டும் வெளிவரவில்லை. வேறு பல சஞ்சிகைகள் எல்லாம் வெளியாகியிருக்கக் கூடும். அவையும் எழுதியுள்ளனவா என்று பார்க்க வேண்டும். விக்கிபீடியா பின்வருமாறு கூறுகின்றது: " 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார் " விக்கிபீடியா தவறென்றால் நீங்கள் அதனைத்திருத்தலாம்.
Tam Sivathasan: உங்களது மொழியில் சொல்வதானால் 'விக்கிப்பீடியாவில் வந்திருக்கிறது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டுமென்பதில்லை.
Giritharan Navaratnam: Tam Sivathasan உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே அவர் எப்போது தாக்கப்பட்டார் என்பது. அதனை எங்களுக்கு அறியத்தரலாமே. உங்கள் கூற்றான 'ஒருவர் சாதிப்பிரச்சினைக்காகப் போராடி இறந்ததைவிட' என்பது அவர் அப்போராட்டத்தின் காரணமாக உடனடியாக இறந்தார் என்னும் அர்த்தத்தைப்பலருக்குத் தரலாம். அடுத்தது கைலாசபதி அவர்கள் மீதிருந்த பயம் காரணமாக டொமினிக் ஜீவா அவ்விதம் மாதசஞ்சிகையான மல்லிகையில் செய்தி போடவில்லை என்னும் கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா இல்லையா என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. இவற்றுக்கான உங்கள் பதில்கள் தர்க்கம் தொடர்வதற்கு அவசியம்.
Tam Sivathasan: முருகபூபதி ஆதாரமில்லாமல் எழுதுகிறார் என ஒருவரைக் குற்றம் சாட்டுகிறார் என்பதற்கான பதிலை மட்டுமே பதிநதேன். அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரைப் பொறுத்தது. ஜீவா பயப்பட்டாரா இல்லையா என்ற விவாதத்துக்கு ல் நான் வரவில்லை. நான் அந்த இடத்தில் இல்லாமல் சாட்சியாக இருக்க முடியாது என்பதே என் தர்க்கம். இனித் தொடரவேண்டிய அவசியம் எனக்கில்லை.
Giritharan Navaratnam: Tam Sivathasan ///நான் அந்த இடத்தில் இல்லாமல் சாட்சியாக இருக்க முடியாது என்பதே என் தர்க்கம்.// இதனைத்தான் எதிர்பார்த்தேன். அனோஜனின் தவறென்னவென்றால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு தர்க்கிப்பதுதான். அவ்விதத்தர்க்கம் டொமினிக் ஜீவா மீது தேவையற்ற களங்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது என் கருத்து. நன்றி சிவதாசன் கருத்துகளுக்கு.
Tharmi Ni: என்.கே.மகாலிங்கத்திற்கு மு.தளையசிங்கம் அப்படிச் சொல்லியிருப்பாரா?சரி, மு.த.உடல் வருத்தமும் மனவருத்தமுமாக இருந்த நிலையில் டொமினிக் ஜீவாவைப்பற்றி அப்படித் தவறான ஊகங்களோடு அதை என்.கே.மகாலிங்கத்திற்குச் சொல்லியிருப்பார் என வைத்துக் கொண்டாலும்; அதிலுள்ள உண்மை,டொமினிக் ஜீவா மல்லிகையில் பிரசுரிப்பவை,அவரது இயல்பு...போன்றவற்றை அலசி அது சரியான ஆதங்கம் தானா என்று என்.கே.மகாலிங்கம் யோசித்திருக்கலாம். இதை ஒரு கருத்தாகக் காவிச் சென்று ஜெயமோகனுக்குச் சொல்லியிருக்கிறார்.ஜெ.மோ.அதைப் பொதுவெளியில் பகிர...அதை ஆதாரமாம்.
Sreeno Sri Sreesu: விஷயங்களை நூல், சமூக வலைத்தளம் போன்றவற்றில் மட்டும் படித்துவிட்டு, தம் முகத்தைக் காட்டுவதையே ஒற்றை நோக்காகக்கொண்டு, நிஜ வரலாறு தெரியாத,- ஒரு பொது ஆகிருதியைப்புரியாத சிலர்,— இப்போ இலவச தொடர்பூடகங்களில் பிரபலம் தேடத் தொடங்கியுள்ளார்கள். இன்றுள்ளோரில் மேமன்கவி, லெ. முருகபூபதியை மேவி, ஜீவாவின் இலக்கிய வாழ்வை அறிந்தோர் வேறெவரும் இல்லையென்பேன். 28, 29 வயதில் அறிஞராகலாந்தான். ஆனால், அது எல்லோர்க்கும் வாய்க்காது. இளைஞர் இன்னும் அனுபவம் பெறக்கடவ.
Sunthar Malai:மகிழ்ச்சி