எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.
பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின் அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.
சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.