கனடாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்து தனது எண்பத்தியேழாவது வயதில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ளார் இலங்கைத்தமிழ்ப் பெண் ஒருவர்.அவரது பெயர் வரதலட்சுமி சண்முகநாதன் (Varathaledchumy Shanmuganathan) . இந்த வயதில் இவ்விதம் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் முதுமானிப்பட்டம் பெற்ற முதலாவது கனேடியர் மற்றும்
முதலாவது கனேடியப் பெண் என்னும் மேலதிகச் சிறப்புகளையும் இவர் இதன் மூலம் பெறுகின்றார். அவரைப்பற்றிய மேற்படி பல்கலைக்கழகச் செய்திக்குறிப்பினைப் பகிர்ந்துகொள்வதுடன் அவரை மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.
முதியவர்கள் அனைவரும் இவரின் இச்சாதனை மூலம் அறிய வேண்டிய, உணர வேண்டிய முக்கியமான விடயம்: இருக்கும் வரை நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன் , இயங்கிக்கொண்டேயிருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் ஓய்வு பெறும் எண்ணத்தைக் கைவிடுங்கள். ஓய்வினை மேலும் ஆரோக்கியமாக இயங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பயன்மிக்க ஓய்வினை உண்பதும், உறங்குவதும், மூலையில் முடங்குவதும் என்பதாக மாற்றிக்கொள்ளாதீர்கள். உங்கள் பல்வகை ஆற்றல்களையும் பாவிப்பதற்கு ஓய்வினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் கற்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தகவலுக்கான இணைப்பு: https://news.yorku.ca/2021/11/01/york-u-class-of-2021-a-pandemic-cant-keep-this-tamil-grandma-from-graduating/