இந்தப் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். இதிலுள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்விதம் முகமூடி (Face Mask) அணிந்திருக்கின்றார்கள் என்பதை. எத்தனைபேர் 'முகமூடி'கள் அணிந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனியுங்கள். அருகருகில் நெருங்கி நின்று எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுகின்றார்கள் என்பதையும் அவதானியுங்கள். நான் நினைக்கின்றேன் இவர்கள் 'ட்ரம்பின்' ஆதரவாளர்களென்று.. :-) இன்று ஓண்டாரியோவில் கோவிட் - 18 இனால் பாதிக்கப்பட்டவர்கள் 1600ற்கும் மேல். 'டொரோண்டோ' , 'பீல்' ஆகிய பிரதேசங்கள் 'லொக் டவுனி'லிருக்கும் சமயத்தில் இவர்கள் இவ்விதம் காட்சியளிக்கின்றார்கள்.
சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே இவ்வாறிருந்தால்... ????
உண்மையில் எம்மவர்கள் பலருக்கு எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுவது, முகமூடி அணிவது என்பது பற்றிச் சரியாகத் தெரியாதென்று நினைக்கின்றேன்.
Rathan Ragu: ஊடகவியலாளர்களுக்கே சமூகம் பற்றிய அக்கறையில்லாத போது , பொது மக்களிடம் எதிர்பார்க்கமுடியாது.
Rajaji Rajagopalan: Rathan Ragu இவர்கள் ஊடகவியலாளர்களா? Oh Scarborough based. So it is fine.
Alex Varma: True, Giritharan Navaratnam. Very difficult to go Srilankan grocery stores & all...… Customers & the owners... no one following the regulations...
Ananth Eswaran: குறைந்த பட்சம் பொது வெளியில் pose கொடுக்கும் போதாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேணாமோ ?