மகாகவி பாரதியார் என் ஆளுமையில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திய மானுட ஆளுமைகளில் ஒருவர். குறுகிய வாழ்வில் அவரது சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. தான் வாழ்ந்த சூழலில் நிலவிய சமூக, அரசியல் மற்றும் பொருளியல் நிலைகளை எதிர்கொண்டு, அவற்றால் நிலவிய அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுத்தார். செயற்பட்டார். வர்க்க விடுதலை, தேசிய விடுதலை, பெண் விடுதலை, மானுட விடுதலை என அவரது அவரது சிந்தனைகள், எழுத்துகள், செயல்கள் அமைதிரூந்தன, அதே சமயம் இருப்பு பற்றியும் சிந்தித்தார். அத்தெளிவுடன் அவர் தான் வாழ்ந்த மண்ணின் அவலங்களை நோக்கினார்; அணுகினார்.
அவரது எழுத்துகள் எளிமையானவை. ஆழமானவை. சிந்திக்க வைப்பவை. உற்சாகம் தருபவை. தட்டி எழுப்புபவை. அவரது முரண்பாடுகள் அவரது ஆழ்ந்த தேடலின் விளைவுகள். அவரது சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள்.
இன்று அவரது நினைவு தினம். நாளும் பொழுதும் என் நினைவில் நிற்பவர் அவர். மீண்டுமொரு தடவை அவரை நினைத்துக்கொள்கின்றேன். அவரது சிந்தனைகளை வெளிப்படுத்தும் வரிகளை நினைவில் கொள்கின்றேன்.
எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' . இருப்பு என்பது கண்ணில் தெரியும் காட்சிப் பிழையா அல்லது உண்மையானதா? அதாவது பொருள் உலகு உண்மையானதா? அல்லது சிந்தையின் சித்த விளையாட்டோ? ஆழ்ந்து சிந்தித்தால் பொருள்முதல்வாத, கருத்துமுதல்வாதச் சிந்தனைகளை இக்கவிதையில் காணலாம். எச்சிந்தனைப்போக்கு சரியானது என்பதற்கான தர்க்கமாக இக்கவிதையைக் காணலாம்.
https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ